வெங்காய கோன்ஃபி/Onion confit






      வெங்காய கோன்ஃபி கறியுடனும்  Foie gras/வாத்தின் ஈரல்லுடனும் சாப்பிடலாம்.

       கடையில் இதன் விலை மிகவும் அதிகம்.நாமே செய்தால்,விலையும் குறைவு.நன்றாகவும் உள்ளது.

இதற்கு தேவையானது:
  • வெங்காயம் 500 கிராம்
  • எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன்
  • பஸ்லாமிக் வினிகர்/Vinaigre balsamique 3 டேபிள் ஸ்பூன்

செய்வது எப்படி?

1)வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டவும்

2)ஒரு ஏனத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.




3)வெங்காயம் வதங்க வேண்டும். ஆனால் பொன்னிறமாக ஆகக்கூடாது. கண்ணாடிப்போல் இருக்கும். அந்த பதம்தான்.




4)வதங்கிய வெங்காயத்தில் வினிகரும் சர்க்கரையும் போட்டு கிண்டி விடவும்.





அவ்வப்போது கிண்டி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.




5)அப்படியே 30லிருந்து 40 நிமிடங்கள்  சிறு தீயில் வேகவிட்டு நிறுத்தி விடவும்.


1)சூடாக இருக்கும் கோன்ஃபியை பாட்டிலில் போட்டு,




உடனே மூடி தலைக்கீழாக கவிழ்த்து வைத்து விடவும்.




2)அப்படியே ஆறவிட வேண்டும்

      இது மாதிரி செய்தால் 1 வருடத்திற்கு  கெடாமால்  இருக்கும்.

      அபேரிதிஃப்/Aperitif  வைக்கும் போது  Jambon/Ham/ஹேம்முடன் கொஞ்சமாக வைத்து சாப்பிடலாம்.

copyright©Sep2014kolly2wood.blogspot.com


Comments

Popular Posts