Tomate à la provençale/தக்காளி ப்ரோவன்சியால் முறை





     

      இந்த தக்காளி ப்ரோவன்சியலை apéritifவாக சாப்பிடலாம்.
இதனை செய்வது மிக மிக சுலபம். 

     இது பிள்ளைகள் ஆசையாக சாப்பிடுவார்கள். செய்துதான் பாருங்களேன்.

     இதற்கு தேவையானதும் அவ்வளவு பெரிய பொருட்கள் கிடையாது.

இதற்கு தேவையானது/Ingrédients:

1. தக்காளி/Tomates 3
2.பார்ஸிலி அல்லது எல்லாம் கலந்த இலைகள்/Persil ou Herbe de Provence
3.பூண்டு தூள்/Poudre d’ail
4.துருவிய சீஸ்/Gruyère râpée un peu கொஞ்சம்
5.ரஸ்க்த்தூள்/chapelure
6.எண்ணெய்/L’huile
7. உப்பு,மிளகுத்தூள்/sel et poivre

செய்முறை/Préparation:

1) அவணை முற்சூடு 180° - 200° ஆக்கி கொள்ளுங்கள்.

Préchauffer la four à 180° - 200°.

2) தக்காளியை வட்ட வடிவத்தில் கொஞ்சம் மொத்தமாக வெட்டி வைக்கவும்.

Couper les tomates en rondelles dans l’épaisseur de1cm.

3) ஒரு அவண் தட்டில் வெட்டிய தக்காளியை வைக்கவும். தக்காளியின் மேல் உப்பு,மிளகுத்தூளை துவவும்.

Placer les tomates coupées dans un plat à four. Saler et poivrer.


4) அதன் மேல் பார்ஸ்ஸிலையும் பூண்டுத்தூளையும் தூவிவிடவும்.




Repartir l’ail et le persil ou herbes de Provence.

5) பிறகு, ரஸ்க்த்தூள்,துருவிய சீஸ்ஸையும் மேலே போடவும். எண்ணெய்யை அதன் மேல் ஸ்ப்ரே பண்ணவும்.
சூடாக உள்ள அவணில் 10 நிமிடங்கள் தக்காளியை வைக்கவும்.




Saupoudrer de gruyère râpé et de chapelure.

6) சீஸ் உருகி இருக்கும். தக்காளியை வெளியே எடுத்துவிடவும்.

Enfourner et faites gratiner 10 à 15 min environ la surface doit être juste dorée.

சூடாக சாப்பிடவும்.

Servez chaud ou tiède.


CopyrightFeb2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts