விமானப்பய(ண)ம்






     விமானத்தில் என் பயம் எப்படி வந்தது என்று உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

      உங்களுக்கு கண்டிப்பாக இது உதவும்.

      ஒருமுறை என் தம்பியின் திருமணத்திற்கு நான் இந்தியாவிற்கு போக முடிவு செய்தோம். என் கணவருக்கு அதிமாக விடுமுறை இல்லாததால்,நான் கல்யாணதிற்கு 1 மாததிற்கு முன்பு போக வேண்டியதாய் போய்விட்டது. அப்போது என் மகன் பிறந்து 7 மாதம்தான் ஆகி இருந்தது.

       என் பெண்ணும் மிகவும் சிறியவளாக இருந்தால். என் அம்மாச்சியும் என்னுடன் வருவதாக இருந்தது. 2 சின்ன பிள்ளைகள்,வயதானஎன் அம்மாச்சி இவர்களுடன் நான். நான் செய்த தப்பு ஒன்று இருக்கிறது. 

     எனக்கு நகை போட இங்கு சந்தர்ப்பம் அதிகமாக கிடைக்கவில்லை.
திருமணத்திற்காவது போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து நகைகளை எடுத்து போனேன். 

      அதில் என்ன ஆனது என்றால், பயணதின்போது நகை சரிப்பட்டு வராது என்று கைப்பையில் 3/4 வாசி நகைகளை வைத்து விட்டேன். பிள்ளைகளுக்கு ஒரு நகைக்கூட போடவில்லை. நகை வைத்த அதே பையில் சின்ன பிள்ளைக்கான உணவுகளையும் வைத்திருந்தேன்.

      விமானத்தின் வாசப்படியில் வந்ததும் என் பை மிகவும் கனமாக இருப்பதாக சொன்னார்கள். அந்த சமயத்தில் என் பையன் அழ ஆரம்பித்தான். புஸ்ஸேத்தை மடித்து அவளிடம்  கொடுக்க வேண்டியதாய் இருந்தது. 

      அந்த இக்கட்டான சமயத்தில் எனக்கு அவள் சொன்னதை தவறாக புரிந்துகொண்டேன். விமானத்தின் கதவின் அருகிலிருக்கும் ஒரு இடத்தில் வைப்பாள் என்று தவறாக புரிந்துகொண்டேன்.
  
       சென்னைக்கு வந்ததும் என் பையை விமான பணிப்பெண்ணிடம் கேட்டதும் தான் தெரிந்தது அந்த பையை நாம் லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்து விட்டார்கள் என்று. அந்த பை பூட்டவும் இல்லை.
எனக்கு பயம் வந்துவிட்டது.

     லக்கேஜ் எடுக்கும் இடத்திற்கு பயத்துடன் வந்தேன். அங்கும் பிள்ளை அழ அரம்பித்தான். அம்மாச்சிக்கும் அவனை சமாதானம் செய்ய தெரியவில்லை. பயமும் அவசரமும் எனக்கு வந்துவிட்டது.



     லக்கேஜ் எடுத்து வந்ததும் உடனே எடுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டேன்.அதனை சரிபார்க்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு ஏனோ தெரியவில்லையா? புரியவில்லையா என்று எனக்கு தெரியவில்லை. 
      
      வெளியே வந்ததும்தான் எனக்கு நகை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. திறந்து பார்த்தால் நகை பரிபோய் இருந்தது. 

      நான் அழ ஆரம்பித்து விட்டேன்.என் தம்பியும்,அம்மாவும் சமாதானம் செய்து வைத்தார்கள்.

      ஒரு மாதம் கழித்து என் கணவர் வந்தார். அவருடன் என் வெள்ளைக்கார நண்பர்களும் திருமணத்திற்கு வருவதாக இருந்தது. ஏர்போர்ட்டில் வெகு நேரமாக காத்திருந்தோம். வெளியேவே வரவில்லை. அந்த விமானத்தில் வந்தவர்கள் நிறையப்பேர் வெளியே வந்து முடிந்து இருந்தார்கள். 




     கடைசியாக எவ்வளவோ நேரம் கழித்து வந்தார்கள்.
வெள்ளையர்களுக்கு அதிகமான லக்கேஜ் இருக்காது என்று என் கணவரின் லக்கேஜ் அதிகமாக எடுத்து வந்திருந்தார். அதில் பிள்ளைக்கான பால் பவுடர்,குஸ்குஸ் ரவை, திருமணத்திற்கு தேவையான பொருட்கள், எல்லாருக்கும் கொடுக்க பரிசுபொருட்களும் இருந்தது. 

      மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பை காணமல் போயிருந்தது. இன்னும் சில பேரின் லக்கேஜ்ஜும் காணாமல் போயிருந்தது.

      அது காணவில்லை என்று விமானநிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வந்தார்கள்.

     பை 15 நாட்கள் சென்று கிடைத்திருப்பதாக செய்தி வந்தது. போய் பார்த்தால்,பை ஒரு ப்ளாஸ்ட்டிக் பையில் கட்டி வந்திருந்தது. பொட்டியும் கிழிந்திருந்தது.

      விமான நிலைத்தினர் அந்த பையில் போதை மருந்து இருப்பதாக சந்தேகப்பட்டனர். இல்லை என்றாலும் அவர்கள் நம்புவதாக தெரியவில்லை.

      குஸ்குஸ்ஸைத்தைதான் அவர்கள் போதைப்பொருள் என்று சந்தேகப்பட்டனர். நாங்கள் எப்படியோ அது வெறும் ரவைத்தான் என்று எடுத்துசொல்லி அதனை சாப்பிட சொல்லி நாங்களும் சாப்பிட்டு காட்டி அவர்கள் உண்மையை உணர்ந்து அந்த பெட்டியை எங்களிடம் கொடுத்தார்கள்.

      பெட்டி அரைக்குறையாக கிடைத்து இருந்ததால் எங்களுக்கு நஷ்டயிடும் கிடைக்கவில்லை. பொருட்கள் பறிப்போனதுதான் மிச்சம்.
கிழித்திருந்த பெட்டியில் பொருட்கள் 90% குறைந்து இருந்தது.நல்ல வேளையாக பிள்ளையின் பால் பவுடர் இருந்தது.

      விமான ஊழியர்கள் எப்போதும் டாலர் டாலர் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஊனமுற்றோருக்கு உதவியாக் சக்கர நாற்காலியை தள்ளுபவர்களும் நிறைய காசுக்கேட்கிறார்கள். இதனை ஏன் அரசாங்கம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது.

      எனக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கும் வராமல்லிருந்தால் நல்லது. விமான நிலையத்தின் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். உழைத்து உண்பதை விட ஏன் இவர்கள் உழைக்காமல் திருடுகிறார்கள் என்று தெரியவில்லை.

இது இப்படி இருக்க நம்மை சுற்றியிருப்பவர்கள். அவர்களை விட ஒரு படி மேல்.
      வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் என்னமோ நாட்டிலிருக்கும் அவ்வளவு காசையும் எடுத்து வந்திருப்பதாக நினைக்கிறார்கள். இந்த எண்ணம் ஏன் எல்லோருக்கும் வருகிறது ?

      விமான நிலையத்தில் ஆரம்பிக்கும் இந்த எண்ணமும் திருட்டுதனமும் சில பெற்றோர், உற்றார்,உறவினர்,நண்பர்கள் என்று எல்லோரிடமும் இருப்பதை புரிந்த்துக்கொள்ள முடியவில்லை. ஏன் இந்த மனப்போக்கு.தெரியவில்லை. இதனால் மனவருத்தம் வந்து எல்லோர் மனதிலும் பிளவு.

     பணத்திற்காக மனதில் பிளவு.இது தேவைதானா?
அன்புக்கு அன்பை எதிர்ப்பார்த்து நாம் பழகலாமே. இதில் பணம் ஏன்? இது நம்மை சார்ந்தவர்களுக்கு சொல்லுகிறேன்.

     விமான பணியார்களும் நம்மை சார்ந்தவர்களும்
புரிந்துக்கொள்ள வேண்டியது இதுதான்: வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பலர் நினைத்துக்கொண்டு வருவது நாட்டிலிருக்கும் உறவுகளையும் நண்பர்களையும் பார்த்து மகிழ்வதற்காகத்தான்.

     வெய்யிலிலும்,பனியிலும் ஓடி ஒடி உழைத்து, பணத்தை ஒவ்வொன்றாக தன்னை அடக்கிக்கொண்டு சேர்த்து,பிறந்த ஊரிலிருப்பவர்களாக ஆசையாக வாங்கி வந்து கொடுத்து, கெட்டப்பெயர்கள் வாங்கிக்கொண்டு பிழைக்க வந்த நாட்டிற்கு மனக்கனத்துடன் மீண்டும் அநாதைகளாக வருகின்றோம்.



     

     இப்படி இருப்பதால், பிறந்த நாட்டின் மீது வெறுப்பு வந்து பிழைக்க வந்த நாட்டின் மீது அன்புடன் இருப்பதாக உதட்டளவில் சொல்லிக்கொண்டு மனதளவில் அழுதுக்கொண்டு இருப்பதுதான் வெளிநாட்டில் இருப்பர்களின் 90% மக்களின் வாழ்க்கை. இந்த மனப்போக்கு யாருக்கு தெரியும் ? யாருக்கு புரிப்போகிறது.

 "என் மனம் என்னவென்று என்னையற்றி யாருக்கு தெரியும்?"

      இதில் வேடிக்கை என்னவென்றால், வெளிநாட்டிலிருந்து வரும் சிலர் தம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பகட்டாக காட்டுவதால் வரும் விணைத்தான் இது.

      அவர்கள் சொல்வது என்னமோ வெளிநாட்டில் அவர்கள் வீட்டில் பணமழை பொழிவதாகவும்,பணமரத்திலிருந்து பணத்தை பறித்து வருவதுப்போலவும்.

       இங்கு வந்ததும் பெரிய பெரிய வேலைகள் கொட்டிக்கிடப்பதாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதால்தான்.

     இதனால், எப்போதும் நடப்பதுப்போல்,பொய் அழகாக சொல்வதால் அது உண்மை என்று நினைக்கிறார்கள். உண்மையை சொன்னால் பொய் என்று நினைக்கிறார்கள்.

     இதுதான் இப்படி என்றால், கடைக்கு சென்றால், வெளிநாட்டினரகளுக்கு ஒரு விலை, உள் நாட்டினர்களுக்கு ஒரு விலை. ஏன் இப்படி என்றுக்கேட்டால்: நீங்கள் தான் டாலராக சம்பதித்து பெரிய பணக்காரர்களாக இருக்கிறீர்களே எங்களுக்கு கொடுத்தால் என்ன என்று சொல்லுகிறார்கள். 

      உங்களை போல் தான் நாங்களும் இங்கு கஷ்டப்பட்டு உழைகிறோம். அதனை என்று புரிந்துக்கொள்ள போகிறீர்கள்? 

       இது எப்பொழுது மாறும்? என்று கேட்க மாட்டேன். இது மாறவே மாறாது.

      இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதவில்லை. என் மனதில் பட்டதை எழுதுகிறேன். அவ்வளவுத்தான்.

     இக்கரைக்கு அக்கரை பச்சை.

Copyright Feb2015kolly2wood.blogspot

Comments

Popular Posts