உணவுகள் செய்முறை பெயர்கள்/Glossaire de cuisine 1



  



     நாம் சமையல் செய்யும்போதுவறுப்பது,பொரிப்பது,குழம்பு,பச்சடி என்று கூறுவது வழக்கம்.

    இப்பொழுது தொலைக்காட்சியில் சமைக்கும் நிகழ்ச்சி காட்டும்போது, நிறைய் பிரன்சு சொற்கள் உபயோக படுத்துகிறார்கள்.

    அதை பார்க்கும் போது நாமும் ஏன் வேக வைக்கும் பிரன்சு பெயர்களை இதில் எழுதக்கூடாது என்று பட்டது. அதனால் உருவானதுதான் இது,உங்களுக்கும் உதவட்டுமே;


1. Abaisser

டர்த்,பிஸ்கெட் போன்றவைகளுக்கு மாவு தேய்பது என்று சொல்லுவோம் அல்லவா? சப்பாத்திக்கு மாவு தேய்பது.

Étaler de la pâte à l’aide d’un rouleau à pâtisserie pour l’aplatir.
Tarte, quiche, biscuit,…

2. Dégorger

1.கறி, ஈரல்,போட்டி,மீன்களாக இருந்தால், சிறிது நேரம் தண்ணீரில் போட்டு பின்பு தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி கழுவுவது.

2.காய்கறியிலிருக்கும் கசப்பு தன்மையும்(பாகற்காய்) அதிகமான தண்ணீர்ரையும்(வெள்ளரிக்காய்) எடுக்க காய்கறிகளை அரிந்து அதில் சிறிது நேரம் உப்பு போட்டு வைப்பது.

Faire tremper certains aliments (viande, poisson et certains abats) dans de l’eau froide pendant un certain laps de temps, en renouvelant l’eau plusieurs fois – faire disparaître un goût désagréable.

Éliminer l’amertume de certains légumes (chou) et à forte teneur en eau (concombres) en les poudrant de sel de leur faire rendre leur eau.

3. Blanchir

தண்ணீர் சுட வைத்து அதில் பச்சைகாய்கறிகள் போடுவது. காய்கறிகளின் துவர்ப்பு(கோஸ்) தன்மைகளை போக்கவும் போட்டு எடுக்கலாம்.காய்கறிகள் வளைந்துக்கொடுக்கவும் (பீன்ஸ்,கீரை)
                              
சில கறிகளையும் காய்கறிகளையும் பச்சைத்தண்ணீரில் போட்டு எடுக்கலாம்.கசப்பு தன்மையும் போகும். கறிகள், மீன்கள்களின் உள்ள உப்பு போகவும்(கருவாடு)இப்படி செய்யலாம். சில காய்கறிகளையும் கறியையும் உப்பு தண்ணீரில் ஊறவைப்பது கறி கொஞ்சம் பழசாகிவிட்டால்.
  
முட்டையின் மஞ்சள் கருவையும் சர்க்கரையும், சர்க்கரை கலந்து வெளுத்த மஞ்சள் கலரில் வரும்.இதுவும் ப்ளாஷிர் என்று அர்த்தம்.

Dans une casserole d’eau froide plonger certaine viande, légumes, légumes secs. Pour éliminer un goût âcre ou dessaler. Parfois l’eau salée ou vinaigrée pour impuretés et raffermir les chairs de viande par exemple.  

Battre des jaune d’œufs de du sucre jusqu’à ce que le mélange devienne crémeux et pâle.





4. Parer

ஆய்ந்து எடுப்பது. கறி என்றால் அதன் சவ்வு போன்றவைகளையும்,மீன் என்றால் அதன் குடல் அகற்றுவது. காய்கறி என்றால் அதன் நார் போன்றவற்றை எடுப்பது;

Supprimer les parties non utilisables d’un légume, d’un poisson et d’une viande.


5. Écaler

முட்டை,மட்டி,இறால் போன்றவைகளின் ஒட்டை அகற்றுவது.

Retirer la coquille des œufs durs ou mollets.

6. Dégraisser

கொழுப்பை அகற்றுவது.
கறியின் மேலுள்ள கொழுப்பை அகற்றுவது.
குழம்பு அல்லது வேக வைக்கும்போது, அதில் மேலே வரும் கொழுப்பை அகற்றுவது.

A l’aide d’une petite cuillère enlever la graisse en excès qui se forme en surface des sauces, bouillons etc. 

7. Piler

சாந்தாக(மசாலா) அரைப்பது. (இஞ்சி பூண்டு சாந்து, சட்னி).

Réduire un aliment en pâte à l’aide d’un pilon

8. Faire Mariner

ஊறவைப்பது. கறி,மீன்,காய்கறியை மசாலாவில் ஊறவிடுவது.

Dans un liquide aromatique mettre à tremper une viande ou un poisson

9. Blondir

எண்ணெயில் வதக்கி சிவக்க  வைப்பது(கறியை பிரியாணி,குழப்பு போன்றவைகளுக்கு சிவக்க வைப்பது).

Faire colorer légèrement un aliment par la cuisson dans un peu de matière grasse jusqu’à l’obtention d’une couleur blonde.

10. Concasser

தட்டுவது, ஒண்ணும் பாதியாக வெட்டுவது. பூண்டு தட்டி போடுவது.முந்திரி பருப்பு போன்றவைகளை உடைத்து போடுவது.

Couper en dés ou écraser.
மீண்டும் சந்திப்போம்

CopyrightFeb2015@kolly2wood.blogspot.com



Comments

Popular Posts