Rizotto/ரிஸோட்டோ






      ரிஸ்ஸோட்டோ இத்தலி நாட்டிலிருந்து வந்தது.மக்கரோனி போன்ற Pâteக்கு பிறகு அரிசி அங்கு பிரபலமானது. இத்தாலியிலும் 50 விதமான நெல் விளைகிறது. 
  
     இத்தாலியிலிருந்து பிரான்ஸுக்கு 18 ஆம் நூற்றாண்டில் வந்தது. அந்த காலத்தில் இத்தாலியிலிருந்து அரிசியை தெரியாமல் எடுத்து வந்து இருக்கிறார்கள். இதற்கு அப்பொழுது தடை விதிப்பதோடு, மரண தண்டையும் கொடுத்து இருக்கிறார்கள்.

     ரிஸ்ஸோட்டோ என்பது அங்கு விதவிதமாக செய்கிறார்கள். இந்த ரெசிபி மிகவும் சுலபமானது. இதனை கால்மணி நேரத்தில் செய்து விடலாம்.
கதை சொல்லி விட்டேன். இப்போ ரெசிபிக்கு போவோமா?


தேவையானது/Il faut :
  • அரிசி/Riz 250 g/கிராம்
  • தண்ணீர் அரிசியைவிட இரண்டு மடங்கு
  • வெங்காயம்/oignon 1
  • வெண்ணெய்/Beurre 30 g/கிராம்
  • துருவிய சீஸ்/Gruyère râpé 50 g/கிராம்
  • ஒயின்/vin blanc 150 ml/மில்லி(facultatif)
  • புக்கே கர்னி/Bouquet garni (பெர்சில்,தைய்ம்,பிரியாணி இலை


வேண்டுமால் ஒயின் உற்றலாம் இல்லை என்றால் விட்டு விடுங்கள்


செய்முறை :

1)அரிசியை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.


Laver bien de riz et bien égoutté.


2)வெங்காயத்தை பொடியாக அரிந்துக்கொள்ளவும்.

Hacher l’oignon.

3)அடிகனமான ஒரு ஏனத்தில் 150gm வெண்ணெய்யை உருக்கவிடவும்.




 வெண்ணெய் சூடனாதும், அரிந்து வைத்திருக்கும் வெங்காயத்தை போடவும்.





Faites chauffer 150 gm de beurre dans une casserole (fond épais). Doré l’oignon.

4)கழுவி வைத்திருக்கும் அரிசியை அதில் போட்டு வதக்கவும். தண்ணீர் போய் கொஞ்சமாக பொன்நிறத்தில் வரவேண்டும்.




Ajouter le riz. Il devrait être légèrement grillé dans le beurre.


5)இந்த நேரத்தில் ஒயின் உபயோகிப்பவர்கள் ஒயினை ஊற்றவும். ஒயின் அரிசியில் ஒன்று கலந்து வரவேண்டும். அரிசி ஒயினை நன்றாக இழுத்துக்க்கொள்ளும்.



     

     அப்போது சூடான தண்ணீரை  கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்துக்கொண்டே இருக்கவும்.

      சிக்கன் ஸ்டாக், காய்கறி ஸ்டாக்கை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஊற்றவும்.

Si vous utiliser du vin. Ajouter du vin blanc. Tout le vin devrait être absorbé avant d’ajouter l’eau. 



Ajouter petit à petit l’eau chaude sur le
riz d’eau et bouillon chaud.
  
6)ஒயினை உபயோகப்படுத்தவில்லை என்றால்  சூடான தண்ணீரை மட்டும் ஊற்றவும்.

Si vous ne utiliser pas le vin ajouter seulement l’eau chaude.


7).உப்பு மிளகுத்தூள்,புக்கே கர்னி போடவும். இவை எல்லாம் போட்டு மூடிவிடவும். சிறு தீயில் வேகவிடவும்.




15 - 20 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்து இருக்கும் அடுப்பை நிறுத்தி விடவும்.



துருவிய சீஸ்ஸுடன் சாப்பிடவும்.


Ajouter bouquet garni, sel, poivre. Couver la casserole. Laisser mijoter sur feu très doux de 15 à 20mn jusqu’à absorption complète de l’eau.



Incorporez rapidement au riz gruyère et servez tout de suite 



நான் இதில் பச்சைப்பட்டாணி போட்டு இருக்கிறேன்.வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்

 Dans rizotto je mélanger un peu de petits pois. Ajouter des petits pois, si vous voulez.

copyrightFeb2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts