Ciocolatta/choclat chaud italien/ சொக்கோலோத்தா





     முன்பு ஒருமுறை சூடான உண்மையான சாக்லெட் பானம் செய்வது எப்படி என்று பார்த்தோம் அல்லவா? அதுப்போல் பனி காலத்தில் சூடாக சாப்பிட ஒரு சூடான சாக்லெட்.
     குளிர்காலம் என்றாலே சூடாக சாக்லெட் சாப்பிட்டால் மிகவும் இதமாக இருக்கும்.

     இத்தாலியில் சாக்லெட் செய்யும் முறையில் இதுவும் ஒரு முறை.

தேவையான பொருட்கள்/Ingrédients :
  • சாக்லெட்/Chocolat noire 150 g/கிராம்

                     ou
சாக்லெட் பவுடர் /chocolat en poudre 1 à 2 C.à. C /தேக்கரண்டி
  • பால்/Lait 500 ml/மில்லி
  • சோளமாவு/Maïzena 2 C.à.C/மேஜைக்கரண்டி
  • சர்க்கரை/sucre 1 C. à.C/மேஜைக்கரண்டி
  • வனிலா/vanille 1 C.à.C/மேஜைக்கரண்டி


செய்முறை/Préparation :

1)சாக்லெட்டை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து வைக்கவும்.

Casserole chocolat en morceaux




2)50 மில்லி பாலில் சோளமாவை கலந்து வைக்கவும்.

Dans une tasse de lait (50 ml) mélanger le maïzena.

3)இன்னும் ஒரு கசரோலில் மீதம் இருக்கும் பாலையும் சர்க்கரையும் வனிலாவையும் போட்டு நன்றாக கலந்து சுடவைக்கவும். நன்றாக கொதிக்கட்டும்.




Dans une casserole faire bouillir du lait avec le sucre et le vanille.

4)அடுப்பை சிறு தீயில் வைத்து நாம் கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா ! மாவும் பாலும். அதனை சுட்டுக்கொண்டு இருக்கும் பாலி ஊற்றி கைவிடாமல் கலக்கவும்.




Au feu moyen ajouter peu à peu le mélange, fouettant sans arrêter jusqu’à ébullition et épaississement.

கிண்டிக்கொண்டு இருக்கும் போது, பால் கட்டியாக வரும். அப்போது அடுப்பை நிறுத்தி விடவும்.

5)மாவு நன்றாக வெந்திருக்கும் பாலில் சூடு ஆறும்முன்பு வெட்டி வைத்திருக்கும் சாக்லெட்டை போட்டு கிண்டவும்.





சாக்லெட் அந்த சூட்டிலேயே கரைந்துவிடும். பாலும் சாக்லெட்டும் ஒன்று சேர கலந்து விடுங்கள்.

Hors du feu, ajouter le chocolat. Faire fondre le chocolat complètement.

கலந்து வைத்திருக்கும் சொக்கோலோத்தவை சூடு ஆறும்வரை காத்திருக்காமல் சூடாக சாப்பிடவும்.

Il ne reste plus qu’à servir et à déguster.
Copyright Feb2015@kolly2wood.blogspot.com


Comments

Popular Posts