Tarte au coco/தேங்காய் தார்த்





நம் நாடுப்போல் Île de réunion னில் வாசனை பொருட்களும்,தேங்காய் போன்றவைகள் நிறைய கிடைக்கும். அதனால் அவர்கள் செய்யும் தெசரில் ஒன்றுதான் Tarte au coco/தேங்காய் தார்த்.
     

     அந்த தார்தை சொல்லிகொடுக்க போகிறேன். இந்த தார்த், தேங்காய் போட்டு செய்வது.

இதற்கு தேவையானது/il faut:

  • பேஸ்ட்ரி ஷீட்/Pâte sablée ou feuilletée ou brisée 250gm/கிராம்
  • தேங்காய்/Noix de coco 1
  • முட்டை/oeufs 4
  • சர்க்கரை/sucre 200 gm/கிராம்
  • பிரஷ் கிரீம்/crème fraîche 200 gm/கிராம்
  • பட்டை தூள்/cannelle
  • ரம் அல்லது வனிலா/Rhum ou vanille 1 c à s/மேஜைக்கரண்டி


செய்யலாம் வாங்க/Préparation : 

1)தேங்காயை துருவிக்கொள்ளவும்.

Râper la chair de coco

2)துருவிய தேங்காயுடன் சர்க்கரையும் வாசனைக்காக பட்டை தூள் போட்டு அடுப்பில் ஒரு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கிண்டவும். 

Cuire noix de coco râpé avec le sucre et cannelle au feu doux. Remuant 10 – 15 minute.  




3)ஒன்றாக கலந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

Retirer du feu et laisser refroidir.

4)முட்டை,கிரீம்,வனிலா எஸன்ஸ் அல்லது ரம் மூன்றையும் நன்றாக கலக்கவும்.




Mixer les œufs, vanille ou rhum et la crème fraîche.

5)ஆறிய தேங்காய் கலவையில் முட்டையை ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும்.

Mélanger cette crème au noix de coco cuit.  .

6)தார்த் தட்டில் உருட்டி வைத்திருக்கும் மாவை வைக்கவும். முள் கரண்டியால் லேசாக குத்தி விடவும்.

Étaler le pâte dans une moule à tarte


7)அதில் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி /Verser le mélange sur la pâte. முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.180°யில் 35 - 40 நிமிடங்கள் வேகவைக்கவும்.





Cuire a four préchauffé 180° 30 à 40mn.
La tarte doit être  doré

வெந்தவும் வெளியே வைத்து ஆறவிடவும்.

ஆறிய பிறகு என்ன இருக்கிறது? சாப்பிட்டு பாருங்கள்.


Bonne dégustation..
 CopyrightJFeb2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts