Gigot Bergére/ழிகோ பேர்ழர்







இது ஆட்டின் முழுத்தொடையில் செய்வது.

இது செய்வது கொஞ்சம் கஷ்டமானது தான்.
ஆனாலும் இது நன்றாக இருக்கிறது.

இது இந்த நாட்டில் பழைய காலத்தில் செய்தது. பெரிய திருவிழா, திருமணம் போன்ற நாட்களில் செய்கிறார்கள்.


இதற்க்கு தேவையான பொருள்கள்:

ஆட்டு தொடைக்கு தேவையானவை:


  • ஆட்டின் முழு தொடை - 1
  • கேரட்  2
  • செல்ரி தண்டு 2
  • மஷ்ரூம்  200 கிராம்
  • ஓயிட் ஓயின்  200 மில்லி
  • எண்ணெய் 50 கிராம்
  • வெண்ணெய் 100 கிராம்
  • தண்ணீர் 2 டம்பளர்
  • பேஸ்டரி ஷீட்
  • உப்பு
  • மிளகுத்தூள்

ஒயிட் சாஸ்:


  • 50 கிராம் வெண்ணெய்
  • மைதா 3 மேஜைக்கரண்டி
  • பால் 500 லிட்டர்
  • துருவிய சீஸ் 100 கிராம்
  • உப்பு
  • மிளகுத்தூள்


பச்சைப் பட்டாணி  200 கிராம்

செய்முறை:



1)முதலில் காய்கறிகளை வெட்டிக்கொள்ள வேண்டும்.
கேரட்டை வட்டம் வட்டமாக வெட்டிக்கொள்ளுங்கள்.
செல்லரி தண்டை பொடியாக வெட்டிக்கொள்ளுங்கள்.
மஷ்ரூமையும் துண்டாக வெட்டிக்கொள்ளுங்கள்.

 2)ஆட்டின் தொடையை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.

3)அடுப்பில் அகலமான சட்டியை வைத்து, எண்ணெய்யும் வெண்ணெய்யும்  போடவும்.

வெண்ணெய் உருக விடவும்.

4)வெண்ணெய் உருகிய பின்பு, வெட்டி வைத்துள்ள காய்கறியை போட்டு வதக்கவும்.





5)நன்றாக வதங்கிய பின்பு முழுதாக உள்ள ஆட்டின் தொடையை போடவும்.
தொடை ஒரு பக்கம் சிவந்தவுடன், மறுப்பக்கம் திருப்பி போடவும்.






6)மறுப்பக்கமும் சிவக்க விடுங்கள்.




பொன்னிறமாக ஆனவுடன் ஒயிட் ஒயின்னை ஊற்றவும். 2 டம்பளர் தண்ணீரையும் ஊற்றவும்.







7)மெதுவாக வேக வைக்கவும். அதிலேயே வேக விடுங்கள்.

8)எரிப்பொருள் சிக்கனம் வேண்டுவோர் அதனை அப்படியே குக்கரில் போட்டு வேகவைக்கலாம்.

கறி முக்கால் பாகம் வெந்தால் போதும்.

8)அதற்க்குள் ஒயிட் சாஸ் செய்து வைத்துக்கொள்ளுங்கள்

9)அதிலேயே சீஸ்ஸையும் போடவும். நன்றாக கலக்கி விடுங்கள்.
தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

10)அவணில் வைக்கும் தட்டில் பேஸ்டரி ஷீட்டை போடவும்.

11)கொஞ்சம் ஒயிட் சாஸ்ஸை வைக்கவும்.






12)பிறகு,முக்கால் பங்கு வெந்த ஆட்டின் தொடையை மட்டும் அதன் மேல் வைக்கவும்.

13)காய்கறிகளை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

14)ஆட்டின் தொடை மீது ஒயிட் சாஸ் வைக்கவும்.

15)பேஸ்டரி ஷீட்டை மூடவும்.




16)முற்சூடு செய்த அவணில்  வைக்கவும்.

17)190° யில் 30 -45 நிமிடங்கள் வைக்கவும்.

18)பச்சைப்பட்டாணியை தனியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.





ஆட்டு தொடை வெந்ததும்  வெட்டி சாப்பிடும் போது வேகவைத்த போது எடுத்து வைத்த காய்கறிகளையும், அதன் சோஸ்ஸையும் ஊற்றி சாப்பிடவும்.



Copyright Apr2014.kolly2wood.blogspot.com



Comments

Popular Posts