குழந்தை உணவுகள் 6 மாதம் முதல் 1 வயது வரை.




   

  இங்கு நான் உங்களுக்கு சொல்ல போவது குழந்தைக்கு என்ன என்ன காய்கறிகள்,கறிகள்,மீன்கள்,மாவு பொருள்கள் எல்லாம் எந்த எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் என்று சொல்ல போகிறேன்
    இது சாதாரணமாக நான் என் பிள்ளைகளுக்கு கொடுத்தது. இது பிள்ளைகளின் உடல் நிலைக்கு ஏற்றதுப்போல் கொடுக்கவும்.

6 மாதத்தில் கொடுக்க வேண்டிய உணவு:

காய்க்கறிகள்:
    நன்றாக வேக வைத்து, மையாக அரைத்து கொடுக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர்ராக கொடுக்கவும்.

கேரட்,பீன்ஸ்,மஞ்சள் பூசணிக்காய்,சுக்கினி,புரோக்கோலி,பசலைக்கீரை,தக்காளி,பீட்ரூட்

பால் சம்மந்தப்பட்ட உணவு:
 பால்

மாவு சத்து உணவு:
அரிசி சம்மதப்பட்ட உணவு
உருளைக்கிழங்கு,செர்லாக்,ஜவ்வரிசி

பழங்கள்:
ஆப்பிள்,வாழைப்பழம்,பேரிக்காய்


8 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு:

வேகவைத்து மசித்த காய்க்கறிகள்/ கொஞ்சம் கட்டியாக கொடுக்கலாம்.

பச்சைப்பட்டாணி

பால் சம்மந்தப்பட்ட உணவு:
பால்

எண்ணெய், வெண்ணெய் சேர்க்கலாம்

புரோட்டீன் உணவு:
இறைச்சி,கோழி,மீன்(நாக்கு மீன் போன்றது) ,ஹேம்(ham)

மாவு சத்து உணவு:
மக்கரோனி,சேமியா,ரவை,கோதுமை சம்மந்தப்பட்ட உணவுகள்.

10 மாதக்குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:

இந்த வயதில் பிள்ளைக்கு அரையும் குறையும்மாக அரைத்துக்கொடுக்கவும்.

காய்கறிகள்:
முள்ளங்கி,கோஸ்,கத்தரிக்காய்,குடைமிளக்காய்,வெள்ளரிக்காய்

புரோட்டீன் உணவுகள்:
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கொடுக்கலாம்.

பால் உணவுகள்:
பால்லாடைக்கட்டி (வாஷ்கீரி- vache que rit ), தயிர்

மாவு சத்து உணவுகள்:

    ரொட்டியின் உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை நாம் இருக்கும் போது நாமே கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.  
     ரோல் ரொட்டியில் இருக்கும்,கடைசி பகுதியை பிள்ளையின் கையில் கொடுத்து சாப்பிட கொடுக்கலாம். நாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

1 வயது குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்:

கொஞ்சமாக அரைத்தாலே போதும். இந்த வயதில் குழந்தைக்கு பல் இருப்பதால், கால் பாகம் அரைத்தாலே போதும்.

தக்காளி போன்ற காய்யை வேக வைக்கமல் கொடுக்கலாம். கொஞ்சம் வினிகர் ஊற்றிக்கூடக்கொடுக்கலாம்.

புரோட்டீன் உணவுகள்:

இந்த வயதிலிருந்து, முழு முட்டை கொடுக்க தொடங்கலாம்
உப்பு இந்த வயதில் தான் சேர்க்க வேண்டும்.

பழங்கள்:
எல்லாவித பழங்களும் கொடுக்கலாம்


    குழந்தைக்கு உணவுக்கொடுக்கும் போது, உப்பு, சர்க்கரையை அதிகம் தவிர்க்கவும்.
  எண்ணெய், வெண்ணெய்யும் தவிர்க்கவும்.

கூடுமான வரை நீங்களாகவே உங்கள் குழந்தைக்கு உணவு தயாரித்துக்கொடுங்கள்.வாங்கிக்கொடுக்காதீர்கள்.

கண்டிப்பாக இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
Copyright Apr2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts