Easter cake/ ஈஸ்ட்ர் பெருநாள் ஆட்டுக்குட்டி கேக்





ஈஸ்டர் பெருநாள் பற்றி ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேன்.
இந்நன்நாளில் இங்கு சாக்லெட் மற்றும் இல்லாமல் கேக்கிலும் ஆடு,முயல் போன்ற வடிவத்தில் செய்வார்கள்.
இன்று உங்களுக்கு நான் செய்து காட்ட போவது நான் ஈஸ்டர் அன்று இரவு விருந்துக்காக செய்த ஆடு வடிவத்திலான கேக்.
மற்றபடி இதில் கறி கறி எதுவும் கிடையாது. நீங்கள் தைரியமாக செய்ய ஆரம்பித்து சாப்பிடலாம்.




என்ன? உங்களுக்கு ஆடு மாதிரியான மோல்டு தேவை அவ்வளவுதான்.
வாங்க போய் செய்யலாம்.


இதுக்கு தேவையான பொருள்கள்
  • மைதா 75 கிராம்
  • சோள மாவு 50 கிராம்
  • பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
  • சர்க்கரை 100 கிராம்
  • முட்டை 2
  • வனிலா எஸன்ஸ்ஐசிங் ஸுகர்


செய்முறை

1)முதலில் முட்டையின் மஞ்சள் கருவையும் வெள்ளைக்கருவையும் தனித்தனியாக பிரித்து தனி தனி பவுலில் வைக்கவும்.

2)வெள்ளைக்கருவுடன் 20 கிராம் சர்க்கரையை போட்டு நுரைப்போங்க பீட்டர்க்கொண்டு  அடிக்கவும்.








3)2 மாவுகளுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து சலிக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும்.

3)இப்போது மஞ்சள் கரு இருக்கும் பவுலில் மீதம் இருக்கும் 






சர்க்கரையை (80 கிராம்) போட்டு அடிக்கவும். வனிலா எஸன்ஸையும் ஊற்றி அடிக்கவும்
சர்க்கரை கரைந்து வெண்மை நிறமாக மாறும். அப்போது நிறுத்தி விடவும்.





4)அடித்து வைத்துள்ள மஞ்சள் கரு பவுலில் சலித்த மாவை கொஞ்சமாக போடவும்.





5)பிறகு, வெள்ளைக்கருவை உடைக்காமல் போடவும். மெதுவாக கிண்டிவிடவும்.






6)இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக போட்டு எல்லாவற்றையும் கிண்டிவிட்டு முடிக்கவும்.





7)கிண்டி முடிந்ததும், ஆடுப்போல் உள்ள மோல்டில் ஊற்றவும்.





8)ஏற்கனவே 200° முற்சூடு செய்த அவணில் வைக்கவும்.

9)அவணின் சூட்டை 175° என்று குறைக்கவும். 40 நிமிடங்கள் கேக்கை அவணின் உள் வைக்கவும்.

10)வெந்ததும் அவணில் இருந்து கேக்கை எடுக்கவும்.

11)முற்றிலும் கேக்கை ஆற விடவும்.




12)ஆறியதும் மோல்டிலிருந்து மெதுவாக கேக்கை எடுக்கவும்.
ஆறியதும் மோல்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுக்க வேண்டும். இல்லையென்றால் உடைத்துக்கொள்ளும்.ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.

13)ஆட்டுக்குட்டியின் மேல் ஐசிங் ஸுகரை துவவும்.


ஆட்டுக்குட்டி தயார். வெட்ட நீங்கள் தயாரா?


Copyright Apr2014©Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts