வாழைப்பழ ஸ்பாஞ்ச் கேக்/Banana sponge cake

    




 இது ரொம்போ நாளா செய்யனும் செய்யனும்னு நினைத்தேன். இன்னைக்கு தான் வேளை வந்தது.

செய்ய நீங்க ரெடியா?

அப்போ வாங்க செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

  • கேக் மாவு   150 கிராம்
  • பேக்கிங் சோடா 1/4 டீஸ்பூன்
  • பேக்கிங் பவுடர் 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை 130 கிராம்
  • வாழைப்பழம்  2 (200கிராம்)
  • முட்டை 3
  • எண்ணெய் 100 மில்லி
  • வனிலா எஸன்ஸ் 3 ,4 சொட்டு


செய்ய தொடங்கலாம்

அவணை முற்சூடு செய்துக்கொள்ளுங்கள் 200°

1)முதலில் கேக் மாவுடன்  பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாவற்றையும் கலந்து சலிக்கவும்.

2)வாழைப்பழத்தை துண்டு துண்டாக வெட்டவும். வெட்டிய வாழைப்பழத்தை லேசாக மசிக்கவும்.






3)ஒரு பவுலில் முட்டையை உடைத்து உற்றவும்.

4)முட்டை இருக்கும் அதே பவுலில் சர்க்கரையை போட்டு நன்றாக பீட்டரால் அடிக்கவும். நுரை பொங்க அடித்த பின்பு,







5)மசித்த வாழைப்பழத்தை போட்டு மீண்டும் பீட்டரால் அடிக்கவும்.

6)மாவு சலித்து வைத்து இருக்கிறோம் அல்லவா

அதனை நன்றாக அடித்து வைத்துள்ள முட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மாவை ஸ்பத்துலால் மெதுவாக கலக்கவும்





7)மாவு முட்டையுடன் ஒன்றாக கலக்கும்மாறு செய்ய வேண்டும்.

8)மாவு நன்றாக கலந்த பின்பு எண்ணெயை ஊற்றி மாவை கலக்கவும்.








9)எண்ணெய் நன்றாக கலந்த பின்பு மாவு ரெடியாகி விட்டது.


இதில் நீங்கள் எஸன்ஸ் ஊற்றினால் ஊற்றுங்கள். உங்களுக்கு வாழைப்பழத்தின் வாசனையே போதும் என்றால் விட்டு விடுங்கள்.

10)மாவை அவணில் வைக்கும் தட்டில் ஊற்றி, அவணில் வைக்கவும்.







11)அவணின் சூட்டை 160° ஆக ஆக்குங்கள்.

40 லிருந்து 45 நிமிடங்கள் அவணில் வைக்கவும்.









வெந்ததும்  ஆற வைத்து எடுத்து சாப்பிடுங்கள்.


copyright©Apr 2014kollywood@blogspot.com


Comments

Popular Posts