Crème dessert/கீரிம் தெஸர்







இன்றைக்கு நாம் செய்ய போகும் சமையல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சாப்பிடும் ஒரு இனிப்பு.



இதற்க்கு தேவையான பொருள்கள்:

  • பால் 250 மில்லி
  • கீரிம் 250 மில்லி
  • கீரிம் இல்லை என்றால்
  • பால் மட்டும் 500 மில்லி
  • கார்ன் மாவு/corn flour/Maïzena  1 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை 4 மேஜைக்கரண்டி
  • 1 முட்டை
  • வனிலா எஸன்ஸ் 2 தேக்கரண்டி



செய்ய ஆரம்பிக்கலாம்:

1)முதலில் பாலை மிதமான சூட்டில் காய்த்துக்கொள்ளவும்.

2)அதிலேயே வனிலா எஸன்ஸை ஊற்றவும். இறக்கி வையுங்கள்.








3)ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதிலேயே சர்க்கரையை போட்டு நன்றாக இரண்டையும் கலக்கவும். நன்றாக 





அடிக்கவும்.நுரை பொங்க அடித்த பின்பு அதில் மைசேனா/Maïzena  போடவும்.


4)அதனை நன்றாக கட்டி இல்லாமல் கலக்கவும்.






5)நன்றாக எல்லாம் கலக்கிய பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக சூடாக இறக்கி வைத்துள்ள முட்டையில் பாலை ஊற்றவும்.ஊற்றிக்கொண்டே கலக்கவும்.







6)எல்லாம் கலந்தவுடன்மீண்டும் அடுப்பில் வைத்து மரக்கரண்டியால் கிண்ட வேண்டும்.







7)சிறு தீயில் கிண்டிக்கொண்டே இருங்கள். இல்லையென்றால் அடிப்பிடித்து விடும்.

8)முதலில் தண்ணீராக இருந்த  கீரிம் கிண்ட கிண்ட கட்டியாக ஆரம்பிக்கும்.

9)கட்டியானதும் அது கரண்டியை தூக்கி பார்த்தால்  கரண்டியில் பஜ்ஜி மாவைவிட கொஞ்சம் தண்ணீர் பதத்தில் கரண்டியில் நான் படத்தில் காட்டி இருப்பது போல் ஒட்டிக்கொண்டு வரவேண்டும். அப்பொழுது இறக்கி விடவேண்டும்.







10)இறக்கினாலும் கைவிடாமல் கிண்டிக்கொண்டே சிறிது நேரம் இருங்கள்.

11)சிறிது நேரம் ஆறிய பிறகு,அதனை ஒரு சின்ன கப்பில் ஊற்றி வைத்தாலும் சரி







ஒரே ஏனத்தில் வைத்தாலும்  வைத்தாலும் சரி

அது உங்கள் இஷ்டம்

கீரிம் ஆறிய பின்பு குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்

குறைந்தது 4 மணி நேரம் வைத்து சாப்பிடவும்

இது 1 வயது குழந்தையிலிருந்து முதியவர் வரை சாப்பிடலாம்.





 இதற்க்கு பல்லே தேவை இல்லை.
 copyright©Apr2014kolly2wood.blogsport.com


Comments