தஞ்சை பெரிய கோயில் பெருமையும் என் ஆதங்கமும்


"தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே
தாரணியில் தமிழ் போலவே நிலைநின்று வாழ்கவே"


    

இந்த பாடலில் சோழ மன்னனின் பெருமையை பாடும் போது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

       1000 வருடங்களுக்கு முன்பே சோழ மன்னன் காலத்தில் நாடு எப்படி செழிப்பாக இருந்து இருக்கிறது. கல்வி வளம் இருந்து இருக்கிறது. 5 நிமிட பாடல் என்றாலும்,சுருங்க சொல்லி விளக்கி விட்டார்கள்.

     வரலாறு படித்து, ஆசிரியர் இடம் திட்டு வாங்கி அடி வாங்கி மார்க் வாங்கிதான் சோழ மன்னன் வரலாறு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவை இல்லை.

     இந்தியாவிலேயே பெரிய கோயிலாக விளங்கும் இந்த கோயில்,இராஜராஜ சோழன் கால கட்டிட கலைக்கு எல்லாம் வைர மகுடமாக ஜொலித்து கொண்டு இருக்கிறது, இன்றுவரை

    திராவிடன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லுகிறது. சிற்பி செதுக்கிய சிற்ப கலை. சிற்ப கலை மட்டுமா? நான் என்ன? விதி விலக்கா? என்று கேட்கிறது வண்ணமிகு ஓவிய கலை.

     இதன் கோபுரம் ஒங்கி வளர்ந்து 190 அடி உயர்த்தில் மேகத்தை தழுவி நிற்கிறது.

     கம்யூட்டர் உபயோகிக்காத இஞ்சினியர்கள் கட்டி இருக்கும் தொழில் நுட்பம் கொஞ்சம் யோசியுங்கள்.

     ஒரே கல்லில் செய்த நந்தி 7மீ நீளம்,3மீ அகலம்,14மீ உயரம்.
இங்கு உள்ள கற்கள் எல்லாம் கொண்டு வந்த லாரிகள்????







     இந்த கட்டிடம் பார்த்தீர்களா? எல்லாமே செதுக்கிய சிற்ப கட்டிடம். கருங்கல் கட்டிடம்.

     கருங்கல் கிடைக்காத இந்த இடத்திற்க்கு புதுக்கோட்டையில் இருந்து கருங்கற்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். ஏறக்குறைய 70 - 80 கிலோமீட்டர் தொலைவு

     அப்போது நல்ல பாதை இருந்ததா? லாரிமற்ற வசதிகள் தான் இருந்ததா?

     தமிழனின் மாபெரும் சாதனை இது என்று சொல்லும் இந்த கோயில்.
இது தெய்வ சன்னிதானம் என்று மட்டும் இல்லை. பல நாட்டினரும் பார்க்க ஆசைப்படும் ஒரு நினைவு சின்னம்.

     இவ்வளவு பெருமையையும் உங்களுக்கு சொன்னது போலவேதான் நான் என் பிள்ளைகளுக்கு என் வெள்ளைக்கார நண்பர்களுக்கும் சொன்னேன்.

           2 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு போனோம்.  காரை விட்டு இருங்கும் முன்பே நான் பிள்ளைக்களிடம், ரொம்போ பெருமை அடித்துக்கொண்டே இறங்கினேன்.

      கோயிலில்அது நான் கூறியது போல் அழகாக தான் இருந்தது.

நாங்கள் அங்கு சென்றது சுமார் மதியம் 2 மணி இருக்கும்.
நடுக்கோயில் சாத்தி இருந்தது.
அதனை விட்டு வெளியே வந்தால் பெரிய சுற்று பிரகாரம் நிறைய தூண் வைத்து இருக்கும் அல்லவா? அங்கு போய் பார்க்கலாம் என்று அங்கு போய் பிள்ளைகளுக்கு விளக்கி சொன்னேன்.







    அப்போதுதான் நம் நாட்டு கலாட்சாரம் முன்னேறி இருப்பதை கண்டேன்.  நான் குறை சொல்லவில்லை.

       மேலை நாடுகளில் பக்தி குறைந்து போய் இருக்கிறது தான். ஆனால், கோயில்களை லவ்வர்ஸ் பார்க் ஆக்கவில்லை இன்னும்.

    நடு ரோட்டில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்துகொள்ளும் நாடுத்தான் இது. ஆனால் கோயில் உள்ளே நடக்கவில்லை.

    எல்லாம் யூனிஃப்பார்முடன்  வகுப்புக்கு போகாமல் எதற்க்காக கோயிலை தேர்த்து எடுத்தார்கள்? வேறு இடமா? கிடைக்கவில்லை?

    இங்கு பிள்ளைகள் பள்ளிக்கு ஒரு வேலை வரவில்லை என்றாலும் காலை10 மணிக்கெல்லாம் அம்மா அல்லது அப்பாவிற்கு போன் செய்து கேட்பார்கள். ஏன் வரவில்லை? என்று.

   பள்ளிக்கு போகவில்லை என்றால் பெற்றோரே போன் செய்து சொல்ல வேண்டும். என் பிள்ளை இன்று வராது என்று. பிறகு லிவ்வும் எழுதி எடுத்து போகவேண்டும்.

    இது அரசு பள்ளி, தனியார் பள்ளி எல்லாவற்றிலும் இருக்கிறது. இதனை ஏன் நம் நாட்டில் பின் பற்றக்கூடாது.

    கஷ்டப்பட்டு 70 - 80 கிலோமீட்டர் தொலைவில் இருந்து கல் எடுத்து வந்து கருங்கல் கட்டிடம் கட்டியது காதல் செய்யவா?

     கோயிலுக்கு என்ன மரியாதை?  கலைக்கு என்ன மரியாதை? இப்படி எதற்க்குமே மரியாதை கொடுக்காமல் இருக்கும் இவர்கள், இவர்களின் காதலுக்கு மட்டும் என்ன மரியாதை கொடுக்க போகிறார்கள்?

     இந்த வயதில் லவ்வும் தேவையில்லை புலவும் தேவையில்லைதான். அப்படி செய்தேன் தீருவேன் என்று உண்ணும் விருதம் இருக்கும் மாணவர்களே, தயவு செய்து கோயில்களை விட்டு விட்டு  வேறு இடம் பார்த்து செல்லுங்கள். இது எல்லாம் புனிதமான இடங்கள்.

     என் மனது இதனை பார்த்து மிகவும் வேதனையாக போய்விட்டது.
நம் நாடு எங்கு போய் கொண்டு இருக்கிறது.

      இது கண்டிப்பாக மேல் நாட்டு நாகரிகம் இல்லை.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று சொல்லி சொல்லியே, வந்த ஆங்கிலம் நின்று தமிழ் இன்று டெமில் ஆகி போய் இருக்கிறது.

புடவையும்,தாவணியும் தூண்டில் போட்டு தேட வேண்டியுள்ளது.
சுடிதாரும்,பேண்டும்,ஜீன்சுமாக இருக்கிறது.

அரிசி சோறும்,இட்லி, வடை போய் பிஸ்ஸா, பர்கராக இருக்கிறது.

தமிழ்நாடே நீ அனியாயமாக அந்நிய நாடாக ஆனது எப்போ?

அடுத்த முறை நான் வரும் போது தமிழ்நாடு என்பதையே மற்றினாலும் ஆச்சரியப்பட முடியாது.





ஏன் என்றால், தமிழ்,தமிழ் கலாச்சாரம் என்று சொல்லவே வெட்கப்படுகிறேமே !
copyright©Apr 2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts