Baghrir/பக்ரீர்



   


 இது வட ஆப்பிரிகாவில் உள்ள அல்ஜெரியா,மரோக் நாடுகளில் செய்யும் தோசை. இதை தான் அவரிகள் பாஷையில் பக்ரீர் என்று சொல்கிறார்கள்.

     அவர்கள் நாட்டில் அவர்கள் மிகவும் சாப்பிடுவது கோதுமை ரவைதான். அதனால் தான் அது மஞ்சள் நிறமாக உள்ளது.

     இந்த கோதுமை ரவையை வைத்து விதவிதமாக உணவுகள் செய்வார்கள்.

     இப்பொழுது நாம் சுடப் போவது  பக்ரீர். இது சுட்டு சாப்பிடலாம் வாங்க.

இது சுட தேவையான பொருள்கள்:

  • மெல்லிய கோதுமை ரவை 200 கிராம்
  • மைதா 100 கிராம்
  • பேக்கிங் பவுடர்  1 தேக்கரண்டி
  • ஈஸ்ட் 2 மேஜைக்கரண்டி
  •  சர்க்கரை  1 தேக்கரண்டி
  • உப்பு


சுட தொடங்கலாமா?

1)முதலில் மெல்லிய ரவையையும் மைதாவையும் ஒரு பவுலில் போடவும்.

2)அதற்க்கு முன் ஈஸ்டையும் சர்க்கரையும் 1/2 டம்ளர் மிதமான தண்ணீர் ஊற்றி கால் மணி நேரம் வைக்கவும்.












3)ரவையும் மைதாவும் வைத்து இருக்கும் பவுலில் பேங்கிங் பவுடரை போடவும். உப்பு போடவும்.








4) அந்த பவுலில் ஈஸ்டை ஊற்றவும். 4 கப் தண்ணீர் ஊற்றவும். நன்றாக கலக்கவும்.









5)கலந்த பின்பு, மிக்ஸில் போட்டு பிலன்டரால்/blender 2 நிமிடம்  அடிக்கவும்.

6)25 - 30 நிமிடம்  அப்படியே மூடி வைக்கவும்.

 7)நீங்கள் கலக்கி வைத்த மாவு  தோசை மாவை விட தண்ணீராக இருக்க வேண்டும்.

8)மாவு 30 நிமிடத்தில் புளித்து விடும்.

9)புளித்தவுடன் பேனை வைத்து மாவை ஊற்றவும்பெரிய தோசைக்கல் வேண்டாம். கொஞ்சம் சிறியதாக இருந்தால் நல்லது.







10)மாவை லேசாக ஆப்பம் சுற்றுவதுப்போல் சுற்றுங்கள்.

கரண்டியால் தேய்க்க வேண்டாம்.கொஞ்சம் மொத்தமாக இருக்க வேண்டும்.


11)தோசையை திருப்பி போட வேண்டாம்.

ஒரு கரண்டி மாவு ஊற்றுங்கள் போதும் .ஆப்பத்துக்கு மூடி போடுவதுப்போல் மூடியும் போட வேண்டாம்.

12)மாவு ஊற்றிய பின்பு  தோசையின் மேல் புள்ளி புள்ளியாய் சிறு சிறு துளைகள் வரும்.








வெந்ததும் எடுத்து விடுங்கள்.









சிறு தீயில் வேண்டாம். பெரிய தீயிலியே இருக்கட்டும்.

     நான், நான் ஸ்டிக் பேன்னில்/non-stick pan செய்தேன். ஒரு துளி எண்ணெய் கூட சேர்க்கவில்லை.

ஒரம் விட்டு அப்படியே வரும்.

    முதல் 2 வரா விட்டாலும். அடுத்தது கண்டிப்பாக வரும்.
செய்து பாருங்கள்.









     நாங்கள் வில்லார் என்னும் ஊரில் இருக்கும் போது எங்கள் வீட்டு அருகில் இருந்த அல்ஜெரியன் பெண் அவர்கள் வீட்டில் எது செய்தாலும் எங்களுக்கு கொடுக்கும். அதனிடமும்,நான் இந்திய அசோசியேஷன் வைத்து இருந்த போது, இன்னொரு நண்பி  மரொக்கன் அசோசியேஷன் வைத்து இருந்தார்கள். எனக்கு உதவிக்கு அவர்கள் வருவார்கள். அவர்களுக்கு உதவிக்கு நான் போவேன். அப்படியே, அவர்களின் சமையல் கற்றுக்கொண்டேன். அதனையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.



copyright©Apr 2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts