சோயா சாஸ்ஸில் கோழி இறக்கை /Chicken wing with soya and honey





    இப்போதுதான் கோழி இறக்கையில் நிறைய விதவிதமாக சாப்பாடு செய்கிறார்களே. அதுவும் நம் பிள்ளைகளுக்கு கேட்கவே வேண்டாம். செய்து வைத்தால் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.

இப்போது நாம் செய்ய போகும் முறை சீனத்து முறை.

இப்போ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நீங்களும் இதனை  படித்து விட்டு உங்கள் சிறிசுகளுக்கு  செய்துக்கொடுங்கள்.

இப்போ என்ன என்ன வாங்கலாம்?

  • 1 கிலோ கோழி இறக்கை
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 மேஜைக்கரண்டி வினிகர்
  • 1/2 மேஜைக்கரண்டி தேன்
  • மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  • 3 பூண்டுப்பல்
  • மிளகுத்தூள்


செய்ய ஆரம்பிக்கலாம்:

1)பூண்டு பல்லை நசுக்கி வைத்துக்கொள்ளவும்.

2)ஒரு பெரிய ஏனத்தில் நசுக்கிய பூண்டு,எண்ணெய், வினிகர், தேன், சோயா சாஸ்,மிளகுத்தூள் எல்லாம் போடவும். சோயா சாஸ் போடுவதால் உப்பு  வேண்டாம்.

இவை எல்லாம் போட்டு நன்றாக கலக்கவும்.

3)நன்றாக கலக்கி வைத்து விட்டீர்களா?

இது தான் சோஸ். இப்போ சோஸ் ரெடி.

4)கோழி இறக்கைகளை சுத்தப்படுத்தி வைத்து இருக்கிறீர்களா?

5)அதனை இந்த சோஸ்ஸில் போட்டு பிரட்டி  குறைந்தது 1/2 மணி நேரமாவது வைக்கவும்.





6)அவணை 200° முற்சூடு செய்துக்கொள்ளுங்கள்.

7)அதற்க்குள் ஊறிய கோழியை அவணில் வைக்கும் தட்டில் வைத்து அவணில் வைக்கவும்







8)10- 15 நிமிடங்கள் கழித்து இறக்கைகளை திருப்பி விடவும். மீண்டும் 10 நிமிடங்கள் வைக்கவும்.

எடுத்து சாப்பிடவும்.




இது ஸ்டாட்டர்ராகவும் சாப்பிடல்லாம். கொரிக்கவும்  வைத்துக்கொள்ளலாம்.
 copyright©Apr2014Kolly2wood.blogspot.com

Comments