பாஸ்க்கா திருவிழா/Easter/Pâques



   

 எல்லாம் நல்லா நேற்று திருவிழா கொண்டாடினீர்களா?
இது கிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழா.

    கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தபசு இருந்து, இந்த நாளில் மிகவும் சந்தோஷ்மாக கொண்டாடுவர்கள்.

    இந்த தபசு நாட்களில் சிலர் 40 நாட்களும் ஏதாவது அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை, ஒருதலாக நினைத்து செய்யாமல் இருப்பார்க்கள்.

உதரணமாக:
கறி,மீன்,முட்டை எதுவும் சாப்பிடமல் இருப்பது.
சினிமா மிகவும் பிடித்தது என்றால் இந்த நாட்களில் பார்க்கமல் இருப்பது.
இப்படி பலவாறு செய்வார்கள்.

பிரான்சில் பழைய காலத்தில்,வெள்ளிக்கிழமை மட்டும் மீன் சாப்பிடுவார்கள்.

     இங்கு இந்த பாஸ்க்கா திருவிழாவின் போது, 2 நாட்கள் கோவிலின் மணியோசை செய்யமாட்டார்கள். இது கிறிஸ்து இறந்த நாள் அதனால்.
இங்கு பிள்ளைகளுக்கு அந்த நாளில் என்ன சொல்கிறார்கள் என்றால், கோவில் மணி ரோமாபுரிக்கு போய்விட்டது என்றும், ரோம்மாபுரியில் இருந்து புதியதாக மணி வரும் என்றும். அந்த புதிய மணி வரும்போது சாக்லெட் முட்டைகளை எல்லோர் வீட்டு தோட்டதிலும் போட்டு விட்டு போய்விடும் என்றும் சொல்கிறார்கள்.

     அதனால், சிறு பிள்ளைகள் எல்லாம் பொழுது விடிந்ததும்,தோட்டதில் முட்டை தேட தொடங்கி விடுவார்கள்.

     பெரியவர்கள் ஆகிய நாங்கள் முதல் நாளே முட்டையை தோட்டம் முழுவதும் அங்காங்கே செடியின் மறைவில் மறைத்து விடுவோம். இது ரகசியம்,இதனை நீங்கள் யாரும் பிள்ளைகளிடம் சொல்லாதீர்கள்.

     பிள்ளைகள் முட்டைகளை தேடி தேடி எடுப்பார்கள். இது அவர்களை சந்தோஷமாக செயல்படவும், இந்த நாட்கள் எப்பொழுது வரும் என்று பிள்ளைகள் எதிர்பார்பதற்க்கும் செய்தார்கள் என்று நினைக்கிறேன்.

     தேடி எடுத்த முட்டைகளை பிள்ளைகள் எத்தனை பிள்ளைகள் அந்த வீட்டில் இருக்கிறார்களோ, அத்தனை பேரும் சமமாக பிரித்து எடுத்துக்கொள்வார்கள்.

     இந்த நாளில் இங்கு சாப்பிடுவது பெரும்பாலும், மீன்,ஆடுக்கறி,முயல்கறி சாப்பிடுவார்கள்.

     இந்த திருநாள் இங்கு வருவது இளவேனிர் காலத்தில்தான்.
அந்த நாட்களில் தான்,மீன்,முயல் ஆகியவை இனப்பெருக்கம் செய்யும். கோழி முட்டைகளும் அதிகமாக கிடைக்கும்.

    அதனால்தான் இப்படி சாப்பிடுகிறார்கள்.

      பழைய காலத்தில் இந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள். ஏன் என்றால், இவர்கள் பயிர் செய்யும் நாட்கள் இதுதான். பயிர் செழித்து வரவேண்டும் என்று கொண்டாடி இருக்கிறார்கள்.

     இந்த நாட்களில், சாக்லெட்டில் முட்டைகள்,மீன்,முயல்,கோழி என்று அந்த நினைவாக செய்து விற்பார்கள்.

      பிள்ளைகளுக்கு நான் எப்பொழுதும் கடவுளை பற்றியும் சொல்லிதருவேன். கூடவே வேறு பக்கத்தில் அறிவியலையும் சொல்லி தருவேன்.

      ஒவ்வொன்றும் பிள்ளைகள் தெரிந்துக்கொள்வது நல்லது.
கோவிலுக்கு போவதை மட்டும் சொன்னால் அவர்களுக்கு பத்தாது.

     இரண்டு பக்கமும் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பது என் மனநிலை.

     இங்கு பொறுத்த வரை இப்படிதான் கொண்டாடுவார்கள்.

     உங்கள் ஊரில் எப்படி கொண்டாடுவர்கள் என்று இங்கு சொன்னால், மற்றவர்களும் தெரிந்துக்கொள்வார்கள். நானும் தெரிந்துக்கொள்வேன்.

    ஒவ்வொரு நாட்டிலும் அவர்கள் முறையில் கொண்டாடுவர்கள் அல்லவா?


இது எல்லாம் தெரிந்துக்கொள்வது சந்தோஷ்ம் தானே!


இது எங்கள் வீட்டில் என் பிள்ளைகள் தேடி எடுத்த முட்டைகள்.

 Copyright Apr2014.kolly2wood.blogspot.com

Comments

Popular Posts