Pain d’épices/வாசனை திரவிய ரொட்டி






     இந்த ரொட்டியின் பிறப்பிடம் சீன நாடு என்று உங்களுக்கு தெரியுமா? பிறகு ஜெர்மனி நாட்டினர் இதனை ஐரோப்பாவிற்கு வந்தது என்று நான் கேள்விப்பட்ட கதை.

     நான் பலமுறை பல ரெசிபியில்  இந்த ரொட்டியை செய்திருக்கிறேன். அதில் எல்லா புகழும் இந்த ரொட்டிக்கு வந்தது என் வீட்டார்க்கும்,என் நண்பர்களிடமிருந்தும்.

     அதனை என் டைரியில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இதற்கு தேவையானது/ingrédients:

  • மைதா மாவு/Farine de blé 150 gm/கிராம்
  • Rye flour/farine de sigle 300 gm/கிராம்
  • அல்லது 450 gm/கிராம் மைதா மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்
  • தேன்/miel 450 gm/கிராம்
  • பால்/lait 250 gm/கிராம்
  • சர்க்கரை/sucre 30 gm/கிராம்
  • எண்ணெய்/huile  2 C.à.S/மேஜைக்கரண்டி
  • உப்பு/sel 1/4 C.à.C/தேக்கரண்டி
  • ஏலக்காய்/cardamome 2
  • பெருஞ்சீரகம்/anis 1/2 C.à.C/தேக்கரண்டி
  • இஞ்சி/gingembre fraîche  அல்லது இஞ்சி தூள்/gingembre en poudre 1 C.à.C/தேக்கரண்டி
  • *கலந்த வாசனை தூள்/mélange de 4 epices 1/4 C.à.C/தேக்கரண்டி
  • சோடாமாவு/bicarbonate 2 C.à.C/தேக்கரண்டி

*préférence : miel de châtaignier, sucre cassonade


செய்முறை/Préparation:




1)ஒரு கசரோலில் பாலும் தேனும் கலந்து அடுப்பில் வைக்கவும்

Faire Fondre le miel et lait.




2)தேன் உருகும் வரை பாலை சூடுப்படுத்தவும்.




3)தேன் கரைந்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்., அதில் எல்லாவிதமான வாசனை பொருட்களை நசுக்கி போடவும். 




4)கசரோலை மூடிவைக்கவும்.அப்படியே ஆறவிடவும்.

Ajouter les épices hors feu et laisser refroidir et infuser..

5)ஒரு பவுலில் மைதா,சர்க்கரை, சோடாமாவு,உப்பு,எண்ணெய் எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.

Mettre les farine,l’huile,sel,bicornate,sucre dans un bol et mélanger tous.




6)எண்ணெய்யுடன் மாவுகள் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

7)கலந்த மாவுடன் கொதித்து ஆறிய தேனும் பாலையும் வடிக்கட்டி நன்றாக கலந்துவிடவும். மாவு கொழக்கொழப்பாக தான் இருக்கும்.

Ajouter le lait et bien mélanger. Mélanger vivement . .





8)எல்லாம் தயாராக இருக்கும் மாவை கேக் மோல்டில் ஊற்றிவிடவும்.

verser la pâte dans le moule à cake.

9)180°யில் முற்சூடு  செய்த அவணில் வைக்கவும்

Préchauffer le four 180°C.

அவணை 150° யில் குறைத்து வைக்கவும்
150° யில் 45 நிமிடங்கள் வைக்கவும். கேக் வெந்து இருக்கிறதா? என்று பார்த்து அவணிலிருந்து எடுத்துவிடவும்.

cuire à 150° pendant 45 min.




வேகவில்லை என்றால் இன்னுமொரு 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.


வெந்ததும் ஆறவிட்டு சாப்பிடலாம். அடுத்த நாள் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

consommer le pain d’épice lendemain

Copyright Dec2014©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts