ஜப்பான் டச்/Japan Touch
லியோனில் ஜப்பான் டச் நவம்பர் மாதம் 8 - 9 தேதியில் நடந்தது. இது ஒருவித கண்காட்சியாக இருக்கிறது.
இந்த வருடம் ஆசிய நாட்டு கண்காட்சியாக செய்தார்கள். எப்போதும் போல் ஜப்பான் கண்காட்சி இருந்தது. கூடவே வேறு ஆசிய நாடு
செய்ய வேண்டும் என்று இந்த வருடம் முடிவு செய்து இந்தியா பற்றி கண்காட்சி இருந்தது.
இந்த கண்காட்சியில் ஜப்பான் கடைகள் நிறைய இருந்தது. அதில்
ஜப்பான் நாட்டு கிமோனோ போன்ற உடைகள்,ஜப்பான்
நாட்டு பொருட்கள் நிறைய விற்பனை செய்தார்கள்.
ஜப்பான் நாட்டு விளையாட்டுகள்,கைவேலைகள்,வீடியோ விளையாட்டுகள் இப்படி பல இருந்தது. சமையல் சொல்லிக்கொடுத்தார்கள்.
டீ சலோ(Salon
de thé) என்று இருந்தது. அதில்
அவர்கள் எப்படி உட்கார்ந்து டீ குடிப்பார்கள் ஜப்பான் நாட்டு ஹோட்டல்கள் இருந்தது.
இந்த நாடுகளை பற்றி தெரிந்துக்கொள்ள புத்தகங்கள் விற்பனை
செய்தார்கள். சில புத்தகங்கள் சும்மாவும் கொடுத்தார்கள்.
இந்த கண்காட்சியில் என்னை வியக்க வைத்தது ஒன்று இருக்கிறது.
அங்கு வந்த 80% பார்வையாளர்கள் விதவிதமான ஜப்பானிய உடைகளும், மாங்க (Manga) என்ற புத்தகத்தில் உள்ளவர்கள் போல உடைகளுடன் வந்தார்கள்.

FREE HUG என்று ஒரு அட்டையில் எழுதி வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
அப்படி எழுதி வைத்திருக்கும் ஆண்களிடமும் பெண்களுடனும் யார் வேண்டுமானலும் hug செய்துக்கொள்ளலாம்.
இது எல்லாம் எனக்கு புதுமாதிரியாக இருந்தது.
Copyright
Dec2014©kollywood.blogspot.com
Comments
Post a Comment