தாய்மை அனுபம் 28





     ஐந்து வயது பிள்ளைகள் பற்றி போனமுறை சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா? அவர்களை பற்றித்தான் இதிலும் தொடர்கிறேன்.
   
      இந்த வயதிலிருந்த்து நீங்கள் நிறைய விளக்கம் தரவேண்டும். நீங்கள் காய்கறிகள், மீன்,கறி,முட்டை சமைக்கும்போது பிள்ளைகளை அருகில் வைத்துக்கொண்டு அரிய வேண்டும். விளக்கிக்கொண்டே வெட்ட வேண்டும்.

உதராணம்: முட்டை என்றால்,இது கோழியில் இருந்து வருகிறது. இதிலிருந்துதான் குட்டி கோழி வருகிறது
இந்த ஓடு சின்ன கோழிக்குஞ்சியை பிறக்கும் வரை காப்பத்த. இதில் 2 கரு இருக்குது பார். இந்த மஞ்சள் கருத்தான் குட்டி கோழியாய் வரும். இந்த வெள்ளைக்கருத்தான் அதுக்கு சாப்பாடு என்று சொல்லுங்கள்.

       ஒருநாள் உனக்கு அம்மா ஆம்லெட் செய்துக்கொடுத்தேன் அல்லவா?அன்னைக்கு ஒருநாள் இதே மாதிரி முழுச கொடுத்தேனே அதுதான் இது என்று சொல்லிக்கொடுங்கள்.

     
       வெங்காயம் வெட்டினால்: இதில் பார் இதில் எவ்வளவு தோலிருக்குன்னு. இது மண்ணுக்குளிருந்து வரும். இதில் பாரு இதுதான் வேர் என்று வெங்காயத்தில் தலைபகுதியை காட்டுங்கள்.

      இப்படி உங்களுக்கு தெரிந்தவரை சுலபமாக பிள்ளைகளுக்கு விளக்குங்கள்.




      என் அம்மா என்னையும் என் தம்பியையும் வைத்துக்கொண்டு இப்படித்தான் விளக்கம் கொடுப்பார்கள்.

     அவர்கள் சைன்ஸ் டீச்சர் அவர்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்தார்கள். அதையே நானும் என் பிள்ளைகளுக்கு செய்தேன்,செய்வேன்,செய்துக்கொண்டு இருக்கிறேன்.

      ஒன்றுக்கு மேல் பட்ட பிள்ளைகள் இருந்தால்,பெரிய பிள்ளையிடம் சின்ன பிள்ளைக்கு விளக்கம் சொல்ல சொல்லுங்கள். அது சொல்லும் போது நீங்கள் கொஞ்சம் உதவி செய்யுங்கள். சில பிள்ளைகள் நினைவாற்றல் அதிகமாக இருக்கும்.


     சில பிள்ளைகள் மறந்து விட்டு இருக்கும். அவர்களின் நினைவாற்றலுக்கு தகுந்தாற்போல் நீங்கள் அவர்களிடம் நடந்துக்கொள்ளுங்கள். நியாபகம் இல்லாத பிள்ளைகளை திட்டாதீர்கள். திட்டினால் பிள்ளைகளுக்கு எதுவுமே பிடிக்காமல் போய்விடும்.
   
      
     இன்னும் என் பிள்ளைகளுக்கு இது ரொம்பவும் பிடிக்கும். இன்னும்கூட என் பெண் நான் கறி,காய் அரியும் போது அருகில் வந்து நின்றுக்கொண்டு நிறைய கேள்விகள் கேட்கும். என்னதான் நாம் படித்தாலும், நமக்கு தெரியாததுத்தான் நிறைய இருக்கிறது.

     அதே பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும்,நமக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

     பிள்ளைகள் இந்த வயதில் மிகவும் பயப்பட ஆரம்பிப்பார்கள். அவர்கள் பயத்தை விளையாட்டாகவே விலக்கி விடுங்கள்.

      உதாரணமாக,என் சித்திப்பையன் எப்போதும் ஆவி,பேய் என்றால் பயப்படுவான். ஏண்டா பயம் என்றால் ஆவிக்கு பயம் என்றான். நான் அவனுக்கு பயம் போக வேண்டும் என்று முடிவு எடுத்தேன்.


   

      சமையல் செய்துக்கொண்டு இருந்தபோது  ரைஸ் குக்கரிலிருந்து ஆவி வந்துக்கொண்டு இருந்தது. உடனே அவனை  கூப்பிட்டு இது பார் சோறு ஆவி,குழம்பு ஆவி,ரசம் ஆவி இதுதான் ஆவி. இதுக்கு போய்  பயப்படலாமா? என்றுக்கேட்டேன்.

        அவனும் இதுக்கு போயா நான்  பயந்து போனேன் என்றுக்கேட்டு அன்றையிலிருந்து  பயம் போய்விட்டது.


      

      சில சமயத்தில் அவனுக்கு பயம் வந்தாலும் உடனே நான் எந்த ஆவிக்கு பயப்படற என்றுக்கேட்டேன் அவனும் உடனே என்னையே சோறு ஆவி,குழம்பு ஆவிக்கு ஏன் நான் பயப்படனும் ? என்று சிரிப்பான்.


        அவனும் இப்போது பெரியவானகி வேலைக்கே போய்விட்டான். அவனை இதுமாதிரி சொல்லி இப்போது பரிகாசம் செய்வேன். அவனும் சிரித்துக்கொண்டே அன்று சொன்ன அதே பதிலை சொல்லுவான்.


இனியும் தொடரும்


Copyright Dec2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts