ஆட்டுக்கறி குஸ்குஸ் /couscous à l’agneau




குஸ்குஸ் என்பது வடக்கு பகுதியில் வாழும் ஆப்பிரக்க நாட்டு(Meharban) மக்களின் உணவு. 





      காய்கறிகளும் ஆட்டுக்கறியும் போட்டு செய்வது. அவர்கள் இந்த குஸ்குஸை விழா நாட்களில் செய்வார்கள்.நம் நாட்டில் நாம் பிரியாணி செய்வதுப்போல். ஆட்டுக்கறியை மட்டும் போட்டு செய்வார்கள்.
பிரன்ஸுக்கு வந்ததும் விதவிதமான முறையில் செய்ய ஆரம்பித்தனர்.

இதற்கு தேவையான பொருட்கள்/ Ingrédients:


  • குஸ்குஸ்/couscous 1 kg/கிலோ
  • ஆட்டுக்கறி/Agneau 1 1/2 kg/ கிலோ
  • வெங்காயம்/oignon 2
  • தக்காளி/tomate 1
  • சுக்கினி/courgette 2
  • முள்ளங்கி/navet 1
  • செல்ரி தண்டு/Branches de céleri 2 துண்டு
  • Concentrated tomato/tomate concentré 1 c à c/தேக்கரண்டி
  • கொண்டைக்கடலை/ poignée de pois-chiches. 1 கைப்பிடி
  • மிளகுத்தூள்/Poivrec à c/தேக்கரண்டி
  • மிளக்காய்தூள்/poudre de piment 1 C à c/தேக்கரண்டி
  • இஞ்சித்தூள்/poudre de gingembre 1/2 C à c/தேக்கரண்டி
  • மஞ்சள்த்தூள்/curcuma 1 C à c/தேக்கரண்டி
  • கூட்டுத்தூள்/Ras el hanout 1 C à cதேக்கரண்டி
  • வெண்ணெய்/beurre 100 g/கிராம்
  • எண்ணெய்/l’huile
  • உப்பு/sel


Les legumes Votre choix :பீன்ஸ்/Haricot,உருளைக்கிழங்கு/Pomme de terre 
எது வேண்டுமானலும் போடலாம்.

Méthode/செய்முறை:

1)குஸ்குஸ் ஏனத்தில் இரண்டு பகுதிகள் இருக்கும்.
 மேல் பாகத்தில்(,அது நிறைய சின்ன சின்ன பொத்தல்கள் இருக்கும்).      குஸ்குஸ்ஸை ஆவியில் அவிக்கவும்.

Faire cuire la sauce couscous dans la partie du bas et le semoule de couscous en haut, à la vapeur

    

 

Dans la partie supérieur,il aura une sorte de passoire à trous. Dans le quel  on va faire cuire la semoule en vapeur. 


2)அடிப்பகுதில் குழம்பு தயாரிக்கவும்.



 Préparer le sauce dans la partie inférieur. Dans la partie supérieur,il aura une sorte de passoire à trous.

3)/கறி,மற்றும் காய்கறிகளை கொஞ்சம் பெரியதாக வெட்டிக்கொள்ளவும்.

couper la viande et les légumes en morceaux. Préparer le sauce dans la partie inférieur




4)Tomate Concentré வை தண்ணீர் ஊற்றி கரைக்கவும்.

Diluer le concentré de tomate dans un verre d'eau. couper la viande et les légumes en morceaux




5)கொண்டைக்கடலையை அவித்து வைக்கவும்.

cuire des pois chiche 

6)குஸ்குஸ் ஏனத்தின் அடிப்பகுதியில் இருக்கும் ஏனத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.

Faire revenir les oignon dans la partie basse du couscoussier. cuire des pois chiche.




7)அதிலேயே தக்காளியை போட்டு வதக்கவும். அதிகமாக வதங்க வேண்டும் என்று இல்லை. அதிலேயே கறியையும் போடவும்.

Faire revenir les tomates et la viande. 




     வெங்காயமும் தக்காளியும் அதிகமாக வதங்க வேண்டிய அவசியம் இல்லை.

N'est pas besoin dorer.

8)தண்ணீரில் கலந்து வைத்திருக்கும் தக்காளியை அதில் ஊற்றவும்.

Ajouter le tomates concentré.Ajouter moitié des épices




9)மேலே கொடுத்திருக்கும் தூள்களில் பாதி தூள்களை அதில் போடவும். கொஞ்சம் உப்பும் போடவும்.

Ajouter moitié des épices. Puis,ajouter de l'eau jusqu'à recouvrir la viande




10)தண்ணீர் நிறைய ஊற்றவும். கறி முழ்கும் அளவுக்கு 1 மணிநேரம் வேகவிடவும்.

Puis,ajouter de l'eau jusqu'à recouvrir la viande. Laisser cuire pendant 1 hr. Pendant la cuisson de la sauce préparer la couscous.




குழம்பு கொதித்துக்கொண்டு இருக்கட்டும்.

 Pendant la cuisson de la sauce, préparer la couscous.Laver la couscous 2-3 fois Préparons nous la semoule

அதற்குள் குஸ்குஸ் தயாரிப்போம்/Préparons nous la semoule

11)Laver la couscous/குஸ்குஸை 2 - 3 முறை நன்றாக கழுவிக்கொள்ளவும். அப்போதுதான் கொஞ்சம் ரவை வாசனை போகும்.

Laver la couscous 2-3 fois.  Égoutter l'eau bien



12)/ரவையை கழுவி தண்ணீரை நன்றாக வடிக்கட்டவும்.

Égoutter l'eau bien.




13)நன்றாக வடிக்கட்டிய ரவையை இரண்டு கைளால் கட்டி முட்டி இல்லாமல் ஆக்கவும்.

Frotter la semoule entre les doits pour éviter les grumeaux.





14)ரவையில் தண்ணீர் ஊற்றாமல் குஸ்குஸ் ஏனத்தின் மேல் பகுதியில் ரவையை ஆவியில் வேகவிடவும்.

Dans la partie supérieur de couscoussier Laisser cuire la semoule en vapeur

15)புட்டு அவிப்பது போல் அவிக்கவும். ரவையின் மேலிருந்து ஆவி வரவேண்டும்.
ரவை வெந்து விட்டது என்று அர்த்தம். 

Laisser cuire la semoule en vapeur. votre couscous est donc cuit, a partir du moment d'échappement de la vapeur.




16)ரவையை எடுத்து ஒரு அகலமான ஏனத்தில் கொட்டி உப்பு தண்ணீர் தெளித்து மீண்டும் கட்டி முட்டி ஆகாமல் எடுத்து,ஆவியில் வேகவிடவும்.

Verser la semoule dans le saladier. Puis, arroser d'eau diluer avec le sel et remettre à cuire une seconde fois. une fois le couscous cuit, beurrer le pendant qu'il est chaud.


17)அதுவும்  வெந்த பிறகு அகலமான ஏனத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே வெண்ணெய்யை போட்டு உருகும்

Une fois le couscous cuit, beurrer le pendant qu'il est chaud.Renouveler l'opération encore une fois





18)கொஞ்சமாக ஆரிய பின்பு அதில் கொஞ்சம்  தண்ணீர் தெளித்து கட்டி முட்டி இல்லாமல் ஆக்கி மீண்டும் ஆவியில் வேகவிடவும்.

Renouveler l'opération encore une fois. 




19)ஆவியில் வேக வைக்கும் முன்பு கொண்டைக்கடலையும் சுக்கினியையும் போட்டு cuire/வேக விடவும்.
 Ajouter les pois chiches et les courgettes dans le sauce et les faire cuire.Une fois le couscous cuit,deposer le dans un saladier

20)மீண்டும் ஆவியில் வெந்த ரவையை ஒரு ஏனத்தில் கொட்டி 






வெண்ணெயை போட்டு கலக்கவும்

Une fois le couscous cuit,déposer le dans un saladier et incorporer beurre le semoule









இப்போது குஸ்குஸும் ரெடி. அதற்கு  வேண்டிய சோஸும் ரெடி.

Servez-le accompagné de légumes et de viandes et sa sauce



     
        இந்த குஸ்குஸ் செய்யும் முறை எங்கள் வீட்டின் மாடி வீட்டில் குடியிருக்கும் அல்ஜெரியன் பெண் எனக்கு சொல்லிக்கொடுத்தது.

       ரெடிமேட் குஸ்குஸில் செய்யாமல்,குஸ்குஸ் எப்படி உண்மையில் செய்வது என்று சொல்லிக்கொடுத்தார்கள்
Copyright Dec2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts