கிறிஸ்மஸ் கேக்/Gateaux de Noël Pondichéry




      

      இந்த கேக்கை நான் பாண்டிச்சேரியில் மட்டும்தான் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

       இது கிறிஸ்மஸ் சமயத்தில் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியன் செய்வார்கள்.

       அவர்களிடமிருந்து இந்த ரெசிபி மற்றவர்களிடம் பரிமாறப்பட்டது என்று நினைக்கிறேன். மிக மிக சிலரே இந்த கேக்கை செய்வார்கள்.

        இந்த கேக் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.அங்கு இருக்கும்போது இந்த கேக் செய்தது கிடையாது.

       இங்கு வந்த பிறகு என்னுடன் படித்தப்பெண்ணும்,எனது வீட்டின் பக்கத்து வீட்டு(பாண்டிச்சேரி) பெண்ணும் எனக்கு இந்த கேக்கை சொல்லிக்கொடுத்தார்கள்.

கேக் செய்ய தொடங்கி வீட்டீர்களா? கிறிஸ்மஸ் வந்துவிட்டதே! இன்னும் தொடங்கவில்லை என்றால் செய்ய தொடங்கி விடுங்கள்.

      இந்த ரெசிபியை உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நான் செய்ய செய்ய சொல்லிக்கொடுக்க போகிறேன்.

முதல் படி/ Etape 1

முதலில் கேக்கிற்கு தேவையான பழங்களை ஊறவிடுங்கள். போங்க போங்க ஊறவிடுங்கள்.

ஊறவைக்க தேவையானது/ingrédients à mariner :

  • முந்திரி/noix de cajou 50 g/கிராம்
  • திராட்ச்சை பழம்/raisin sec 25 g/ கிராம்
  • கலந்த உலர்ந்த பழக்கலவை/mélanges de fruits confites 25 g/ கிராம்
  • ஆரஞ்சுதோல்/oranges confites 10 g /கிராம்
  • கேக் விதை/caraway/carvi 1C à c தேக்கரண்டி
  • வனிலா/vanille
  • ரம்/rhum(Negrita)



செய்ய தொடங்குங்கள்/méthode de préparation :

1)ஒரு வாரத்திற்கு/une semaine avant முன்பு ஒரு மூடிப்போட்ட டப்பாவில்/ இந்த உலர்ந்த பழ கலவைகளை ரம்மில் ஊறவிடவும்

Faire tremper les fruits secs dans le rhum.


2)பழம் முழ்கும் அளவிற்கு ரம் ஊற்ற வேண்டும் /verser le rhum jusqu’a submerger les fruits. இதனை தினமும் கிளறிவிடவும்

Mélanger tous les jour.




இரண்டாம் படி/Etape 2

கேக் செய்ய தொடங்கும் ஒரு வாரத்துக்கு முன்பு/avant une semaine  நாம் ரவையை செய்ய தொடங்குவோம். வாங்க


தொடரலாம்/d’autres détails suivront

இப்போ ரவையை கலந்து வைப்போம்.

  • ரவை/la semoule 500 g/ கிராம்
  • வெண்ணெய்/le beurre 250 g/கிராம்



1)ஒரு வாணலில் வெண்ணெய்யை லேசாக உருவவிட்டு

Dans une poêle faire fondre le beurre .





2)அதில் ரவையை போட்டு வறுக்கவும்
mélanger avec le semoule.

3)ரவையும் வெண்ணெயும் சேர்ந்து நல்ல வாசனை வரும்

Mélanger la semoule et le beurre, il y aura une très bon odeur.




4)வாணலில் இருக்கும் ரவையை வேறு ஒரு மூடிப்போட்ட ஏனத்தில் வைக்கவும்

changer le dans autre récipient. 




5)ஆரியதும் மூடி வைத்துவிடுங்கள்.

/une fois que le mélange soit refroidit, fermer  le récipient.

6)தினமும் கிளறி விடுங்கள்

Remuer tous le jour hors feu.


தொடரலாம்/d’autres détails suivront

Une semaine après/ ஒரு வாரம் சென்றதும்.

இன்னைக்கு கேக் செய்ய வேண்டியதுதான்.

 மிச்சம் இருக்கும் பொருட்கள்:
  • சர்க்கரை/sucre 250 g/கிராம்
  • முட்டை/œufs 9
  • வெண்ணெய்/Beurre 250g
  • மைதா/farine 3 C à S/டேபிள் ஸ்பூன்
  • பேக்கிங் பவுடர்/levure chimique 1 c à c/தேக்கரண்டி


1)முட்டையை நன்றாக அடித்துக்கொள்ளவும்.  அதனுடன் சர்க்கரையையும், உருகிய வெண்ணெய்யும் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும்

Faire blanchir les jaunes avec les sucres et beurre fondu puis mélanger.





2)அடித்து வைத்துள்ள முட்டையில் முன்பு வெண்ணெய்யில் வறுத்து வைத்த ரவையை போட்டு கலக்கவும்

Ajouter ensuite la semoule.





3)கலந்தப்பின்பு மைதாவையும் போட்டு கலக்கவும்

Mélanger la farine avec la levure chimique .







4)முன்பு கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா?ஊறிக்கொண்டு இருக்கும் உலர்ந்த பழங்களை அதனுடன் கலந்து விடவும்

Ajouter les fruits sec marinés avec leurs jus.




5)அவணில் வைக்க கேக் தயாராக இருக்கிறது.






6)அவணை 180°c யில் வைக்கவும்.. அவண் சூடேறிய பின்பு கேக்கை உள்ளே 40 - 45 mn/நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்/

Enfourner à 180°c pendant 40 – 45 mn.







Bon appétit

Copyright Dec2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts