Calendrier l’avent/திருவருகை கால காலண்டர்






திருவருகை காலத்தை காட்டும் காலண்டர் இது. கிறிஸ்து பிறக்கும் டிசம்பர் மாத முதல் தேதியிலிருந்து இருப்பத்து நான்கு தேதி வரையிலும் இதில்
இருக்கும்.




      இந்த காலண்டர் பிறந்த இடம் ஜெர்மனி.

     இதில் 24 ஜென்னல்கள் இருக்கும். அதன் மீது  தேதி இருக்கும்.
டிசம்பர் மாத முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் ஒவ்வொரு ஜென்னலாக திறக்க வேண்டும்.

       ஒவ்வொரு ஜென்னலிருந்தும் சின்ன சாக்லெட்டுகள் இருக்கும் அதை எடுத்து சாப்பிடுவது ஒரு சந்தோஷம அவர்களுக்கு. இது பலவகையாக விற்கிறது.

       சாக்லெட்டுக்கு பதிலாக பொம்மைகள் இருக்கும்.












      நாமாகவும் இந்த காலண்டரை செய்துக்கொள்ளலாம்.
அதில் மிட்டாய்களுக்கு பதில் பைபிளில் இருக்கும் வாசகம் வைத்து படிக்கலாம்.

     இல்லை என்றால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜெபமும் எழுதி வைத்து குழந்தைகளை பழகலாம். என் பெரிய சிறியதாக இருக்கும் போது பைபிள் வாசனம் சின்ன ஜெபங்கள் வைத்து படிக்க வைப்பேன்.

       சில பிள்ளைகள்,ஏன் பெரியவர்கள் கூட இந்த காலண்டர் வாங்கி வந்தவுடனேயே  உள்ளிருக்கும் சாக்லெட்டுகளை சாப்பிட்டு விடுவார்கள். பொருமையாக இருந்து ஒவ்வொரு சாக்லெட்டை  எடுத்து எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிட சொல்லிக்கொடுங்கள்.

       இதைப்பற்றி சொல்லும் போது இன்னும் ஒன்றும் சொல்லுகிறேன்.couronne de l’avent



     இதில் நான்கு மெழுகுவர்த்தி வைக்க வேண்டும். நான்கு மெழுகு வர்த்தியும் ஒரே நாளில் வைக்கக்கூடாது. கிறிஸ்து பிறக்கும் மாதம் டிசம்பர் என்றிருப்பதால்,டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு மெழுகுவர்த்தி. அடுத்த வாரம் ஒரு வத்தி என்று ஒவ்வொரு வாரமும் வத்தி கொலுத்தவேண்டும்.

      இந்தியாவிலிருக்கும் போது இவை எல்லாம் எனக்கு தெரியாது. இவை எல்லாம் நான் இங்கு வந்து  தெரிந்துக்கொண்டு செய்துக்கொண்டிருக்கும் பழக்கங்கள்.

      எங்கள் ஊரில் (saint etienne) இந்த திருவருகை காலத்தில் பிள்ளைகளுக்காக நிறைய விளையாட்டுகள் வைப்பார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் கிறிஸ்மஸ் தாத்தா வந்து பிள்ளைகளுக்கு புத்தகம்,விளையாட்டு சாமன்கள் கொடுப்பார். சுற்றியிருக்கும் அடுக்கு மாடி கட்டடத்திலுள்ள ஜென்னல்களில் காலண்டர் போல தேதி போட்டு இருப்பார்கள் .தினமும் சாயுங்காலம் 5 மணிக்கு கிறிஸ்மஸ் தாத்தா வருவார்.



     அவர் வரும் ஜென்னல் திறப்பதற்கு முன் பட்டாசு வெடிக்கும். பட்டாசு வெடித்ததும் அந்த ஜென்னல் திறக்கும் கிறிஸ்மஸ் தாத்தா எட்டிப்பார்பார். பிள்ளைகளுக்கு மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

     பிறகு,பிள்ளைகலுக்கு பரிசு கொடுப்பார்கள். கதை சொல்லுவார்கள். மேஜிக் நிகழ்ச்சி போன்ற பல வகையான நிகழ்ச்சிகள் நடக்கும்.

      சில சமயங்களில் பிள்ளைகளுக்கு கிறிஸ்மஸ் சம்பந்தப்பட்ட கைவேலை பொருட்கள் செய்ய சொல்லிக்கொடுப்பார்கள்.


     இவை எல்லாமே எங்கள் நகரசபையின்(Mairie) செலவில் நடக்கிறது.

எனக்கு தெரிந்த ஐரோப்பியர்களின்  கிறிஸ்துவ பழக்கத்தை  நான் அறிந்தை,தெரிந்ததை உங்களுக்கு  சொல்லிவிட்டேன்.



Copyright Dec2014©kollywood.blogspot.com

Comments

Popular Posts