கலத் த​ லேகியும் ஆன்சியன் (Galette de légumes anciens)



       ஒரு  நாள்  இந்த​  ரெசிபியை  செய்துக்கொண்டு  இருக்கும்போது,  phoneல்  கற்பூறநாயகியே கணகவள்ளி  அது  என்ன?  பழையகாலத்து  காய்கறியா ? எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்,  என்று  கேட்டது.

      பழையகாலத்து  காய்கறியில்  சமைக்கும்  ஒரு  சமையல்  குறிப்பை உங்களுக்கு  கொடுக்க​  போகிறேன்.

கடைக்கு  போகலாம்  வாங்க​:






  • 2  உருளைக்கிழங்கு
  • 4-5  கேரட்
  • 2-3 தோபிநன்பூர் (Topinanbours)
  • 1 ரூத்தாபகா (Rutabaga)
  • 3 முட்டை
  • 50 கிராம் மைதா மாவு
  • 100 கிராம் இறால் (வேண்டுமானால்)
  • உப்பு,மிளகுதூள்,
  • பெர்சில் இலை
  • மிளக்காய்தூள் 1 டீஸ்பூன்
  • எண்ணெய்

செய்யலாமா?

1) காய்கறியை  துருவி  வைத்துக்கொள்ளவும்.

2) முட்டையை  அடித்து  அதில்  ஊற்றி  உப்பு, மிளகு, மிளகாய்தூள், ஜாதிக்காய்தூள், பெர்சில் இலை,மைதா எல்லாம்  போட்டு  கலக்கவும்.




3) தோசைக்கல்லில் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி சுடானதும் , அடைக்கு  எடுப்பது போல்  காய்கறிகலவையை உருண்டையாக​ 
 எடுத்து  மெல்லியதாக தோசைக்கல்லில் தட்டவும். மீண்டும் 
 எண்ணெய் அடையை சுற்றி ஊற்றவும்.




4) ஒரு பக்கம் சிவந்து வெந்ததும்திருப்பி போடவும்மீண்டும்
  எண்ணெய் அடையை சுற்றி  ஊற்றவும்.

5)எண்ணெய் நிறையஊற்றினால்தான், மொறு மொறு என்று வரும்.
  சிறு தீயில் வேகவேண்டும்

6)இன்னொரு பக்கமும் வெந்ததும், சாப்பிடுங்க​.
தோபிநன்பூர் ஒரு புது சுவைதானே.




copyright© Dec 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts