கோங்கோலே




வாங்க​ வேண்டியது

  •  4 கப் 300 கிராம் - தேங்காய் பூ காய்ந்தது (desiccated coconut)
  •  1 கப் 200 கிராம் - சர்க்கரை
  •  4 முட்டை

உபகரணங்கள்:

  • அவனில்     வைக்க​  2  தட்டு
  • பட்டர் பேப்பேர்
  • முட்டை அட்டிக்கும் உபகரணம் egg beater
  • பவுல்
  • மரக்கரண்டி

Oven temperature : 180°  (th 5-6) ( முற்சூடு : 200° 10 நிமிடங்கள்)

செய்யலாமா இப்போ?

1)  தேவையான​  பொருட்களை அளந்து  வைக்கவும்.

2) முட்டையின் வெள்ளை கருவையும்  மஞ்சள்  கருவையும்  தனிதனியாக​ பிரிக்கவும்.
3) வெள்ளை  கருவை  இப்படி  நுரையாக​  அடிக்கவும்.


4 ) மஞ்சள்கருவையும்  சர்க்கரையும்  சேர்த்து  இப்படி  அடிக்கவும்.


 5இப்போது  மஞ்சள்கரு கலவையில்  தேங்காய் பூவை   கொஞ்மாய் 
போட்டு கலக்கவும்.  பிறகுஅடித்து  வைத்திருக்கும் வெள்ளைக்கருவை போட்டு மெதுவாக​ கலந்து , மேலும் தேங்காய் பூவை  போடவும். 
இப்படியாக​எல்லாவாற்றையும் கலந்து விடவும்.


6) கலந்த​ கலவையை 20 நிமிடங்கள் ஊறவிடவும். 


7) ஊறியவுடன் சின்ன​ உருண்டைகள் ஆக்கி தட்டில் வைக்கவும்.



8) முற்சூடு 200° 10 நிமிடங்கள் செய்த​ அவனை 180° ஆக்கவும்

9) அவனில் 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்து பொன்னிறமானதும் வெளியே எடுக்கவும்.



இது  எனக்கு Marion என்ற​  சின்ன ​ பெண் , நான்  இந்த  நாட்டிற்கு வந்த புதிதில் சொல்லிக்கொடுத்தது . அது 
 இப்பொழுது  வளர்ந்து  ஒரு
 பிள்ளையும் இருக்கிறது.  நன்றி Marion.
குறிப்பு:
மஞ்சள்கருவையும் சர்க்கரையையும் சேர்த்து அடிக்கும் போது சர்க்கரை கரைந்து நிறம் மாறும் (அ)  எஃக் பீட்டரை சற்று மேலே தூக்கி பாருங்கள்,அடித்து வைத்திருக்கும் மஞ்சள்கரு ரிப்பன் போல் வரவேண்டும்.

copyright© Dec 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts