ஆப்பிள் பழ பஜ்ஜி/Beingnet de pomme




என்ன  பழத்தில்  பஜ்ஜியா?  என்று  கேட்கறீங்களா?

செய்து  பாருங்க​.  பிறகு, இதுவே,  ஒரு  நல்ல snacks  சாக​   
மாறிவிடும்.

வாங்கவேண்டியபொருட்கள்:

  • 2 ஆப்பிள்கள்
  • 1 பைன்ஆப்பிள்
  • 300 கிராம்  மைதா
  • 2 முட்டைகள்
  • 4 முட்டைகளின்  வெள்ளைகருகள்  மட்டும்
  • 150 - 200 மில்லி  பால்
  • 3 மேஜைக்கரண்டி  சர்க்கரை
  • உப்பு
  • எண்ணெய் பொரிக்க
  • ஐசிங் ஸுகர்  அலங்கரிக்க (வேண்டுமானால்)
உபகரணங்கள்:

  • கத்தி
  • முட்டை அடிப்பது (egg beaters)
  • தட்டு 2
  • பவுல் 2
  • சல்லி கரண்டி

இப்போ செய்யலாமா?
1) மைதா, 2 முட்டை, பால், சர்க்கரை, உப்பு  கலந்து 




2)பீட்டரால் அடித்து  சிறிது நேரம்  வைக்கவும்.




2)பீட்டரை   கழுவி விட்டு 4  முட்டை  வெள்ளைக்கருவை  அடிக்கவும்.




3) பழங்களை  கழுவி  தோள்களை  எடுக்கவும்.  ரவுண்டாக​  வெட்டவும்.




4) மிகவும்  மெல்லியதாகவும்  வேண்டாம்.  உடைந்து விடும்.  கொஞ்சம்  மொத்தமாக​.




4)மைதா முட்டை கலவைவுடன் நுரையாக​ அடித்து வைத்த வெள்ளைகருவை சிறிது சிறிதாக​ போட்டு ஒன்றாக​ கலக்கவும்.




5) மாவு ரெடி,  பழம் ரெடி  பஜ்ஜி போட வாணல்,எண்ணெய்  ரெடியா?

6)  எண்ணெய்  காய்ந்தும் ரவுண்டாக​  வெட்டி  வைத்திருக்கும்  பழத்தை மாவில்  துவைத்து  எண்ணெயில் போட்டு  சிவந்ததும்  எடுக்கவும்.



6)  ஐசிங்  ஸுகர்  தூவி  சாப்பிடலாம்.

7)  அல்லது  சர்க்கரையுடன்  தண்ணீர்  கொதிக்கவைத்து  விரலில்  ஒட்டும் பதம்  வந்ததும் பஜ்ஜியின்  மீது  ஊற்றியும்  (1மேஜைகரண்டி   ஒரு பஜ்ஜிக்கு) சாப்பிடலாம்.
copyright© Dec 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts