கடந்த​ கால​ம் 2




    அதூ..என்னனா  தெனமும் நம்ம ஊரு சாப்பாட்டையே
செய்யறியே,
        உனக்கு இந்த நாடு ,பக்கத்து நாடு,... சாப்பாடெல்லாம் செய்ய
தெரியாதான்னு ஒரு போட்டி வச்சதுக்கு அப்புறம் சும்மா 
கெடக்கமுடியுமா

     புருசன்  கேட்டா  அத  ஒடனே  நெரவேத்தனுமேஇல்லன்ன
என்ன  பத்தனி    list லேந்து  எடுத்து  தூக்கி  போட்டுட்டா  . 
கண்ணாலாம்  ஆன  புச்சு  வேறா ! பயம்  வேறா ! ! !

          Book பாத்து  பாத்து  எந்த  நாட்டு  சமையல்  செஞ்ஞாலும் 
  நம்மவூர் வாசனை, ருசித்தான்  வருதுன்னஅதுல  mistake  
  இல்ல.   நான்தான்  ஊடால ஊடால  நம்ப  ஊரு  மணத்தை
  சேக்கரனே.

      அந்த  அந்த நாட்டு  சாப்பாட்ட,   அந்த  அந்த  ருசியில 
சாப்புடனும்அப்போதான்  அது  அடுத்த  நாட்டு  சாப்பாடு!
  இப்போ  நமபவூர்ல, ஊறுக்கான, காரசாரமா இருக்கனும்!! 
  பாயாசம்னா  தித்திப்பா  இருக்கனும்  சொல்லல?

அதுமாதிரிதான் அது ,   இந்த ஊருக்கு  வந்த  புதுசுல என்னோட  
நாக்குக்கு தெரியல ,புத்திக்கும்    எட்டல.



                                                                                      அப்புறம்......

    
      இதுவெல்லாம்  சரி  வராதுன்னு  நம்ம  வட்டாரங்கலான்டை
  நம்ப  சோக கதைய  ஒருநா  சொல்லசொல்லநம்ப 
  இருக்க  சொல்ல  உனக்கு  இன்ன கண்ணு  கவலன்னு
சொல்ல.

          அப்பால ...அவங்க  எல்லாம்தான் சமையலேந்து, புள்ள 
 வளக்கரது எலலாம்  சொல்லிதந்தாங்க .


      இப்போ எனக்கு 3 பிள்ளைகள் இவர்களுடன் என் கணவரையும் சேர்த்து 4 பிள்ளைகள்.

      பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு நம் நாட்டு சப்பாட்டை விட பிரஞ்சி நாடு மற்றும் அடுத்த நாட்டு சாப்பட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.

      நம் நாட்டு சாப்பாடு கொஞ்சமாகத்தான் சாப்பிடுவார்கள். ஆனால், எந்த சாப்பாடு செய்தாலும்,நான் ருசி பார்க்க மாட்டேன். என் பிள்ளைகள்தான் ருசி பார்பார்கள். அதிலும் என் பையன் ருசிப்பார்ப்பான்.

      என் பெரிய பெண் நன்றாக கேக்கும் Japon/ஜப்பான் மற்றும் Korea/கொரியா நாட்டு உணவுகளும் விரும்பி சமைப்பாள்.

      என் பையன் கேக் மற்றும் French/பிரஞ்சு நாட்டு சமைப்பான். என் கடைசி பெண் Mug cake/மக் கேக்  நன்றாக செய்வாள்.

      என் கணவருக்காக வெளிநாட்டு சாப்பாடு செய்ய ஆரம்பித்தேன்.பிறகு,என் பிள்ளைகளுக்காக சமைக்க ஆரம்பித்தேன். அதற்கு ஊக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.


      பிள்ளைகளை வளர்ப்பதையும் பல அனுபவங்களும் என் பிள்ளைகளால் வந்தவைதான்.
  
     இந்த  சமையத்தில  நன்னி  ஊடால சொல்லனுங்க
நெறத்தால  வேறையா  இருந்தாலும்.

     வந்த  நாள் முதல், இந்த  நாள்  வரை  எங்கள் மேல்   அன்பா
இருக்கிற  இந்த  ஊர் அண்ணன்s, தம்பிs,அக்காs, தங்கைs,
அம்மாs,   அப்பாs. .எல்லாருக்கும்  நன்னி .

     அப்பால இந்த நாளுல, எனக்கு சமையலுக்கு கைக்கொடுக்கும் புஸ்தகம், 

blogs அதையும் மறக்கக்கூடாதுங்க.

     அதனால புஸ்தகம் எழுதன எழுதளர்களுக்கும்

blogகார்களுக்கும் என்னோட 

நன்னிய சொல்லிக்கிறேன்.

     இந்த  blog  மூலமா எனக்கு தெரிஞ்ச cuisine francaise,மற்றும் மற்ற நாட்டு சமையல மட்டும்  இல்லிங்கோ  எனக்கு  தெரிஞ்சத

உங்ககூட share பண்ணிக்கிறன்,

     பின்னால​  எனக்கே Diaryயா  இருந்துட்டுபோவுது .



     இவ்வளவு நேரம் பொறுமையா என் கதையை கேட்ட 
உங்களுக்கும் நன்னிங்க.
அடிக்கடி வந்து போங்க.
 வாங்க பழகலாம்.
               
                                           
                                                வணக்கமுங்க​ எல்லாருக்கும்


copyright© Dec 2013kolly2wood.blogspot.com

Comments

  1. அம்மா.

    தமிழில் கொச்சை மொழி பேசுவது எல்லோருக்குமே இயல்பாக வரும் ஒன்று. ஆனால் அதையே மிகத்துல்லியமாக எழுத்தில் வடிப்பது எளிதல்ல. அதற்க்கு ஓரளவு மொழிப்புலமையும், கொஞ்சம் கற்பனை வளமும் வேண்டும். அதே நேரத்தில், அனுபவத்தை நல்ல கதையாக சொல்லும் திறமையும் இணைந்தே இருக்கிறது உங்களிடம்.

    'அருக்காணி அமெரிக்கா போன கதை' போல சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப்போல் கற்பனைவளம் உள்ளவர்கள், தன்னைச் சுற்றி உள்ளவர்களை தன் பேச்சினாலேயே மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். உங்கள் கணவரும், குழந்தைகளும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

    "நன்னி" என்று சொல்கிறீர்கள். அநேகமாக குமரி மாவட்டத்தையோ அல்லது தமிழக கேரள எல்லையொட்டியவர்களாகவோ இருக்கலாம் என்றெண்ணுகிறேன்.

    'காய்கறிகளின் பெயர்கள்' பார்ப்பதற்காக இரண்டாம் முறையாக இங்கே வந்தேன். அப்படியே உங்கள் கதையையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. "அண்ணன்s, தம்பிs,அக்காs, தங்கைs" வித்யாசமான, இனிய வார்த்தைப் ப்ரயோகம். Good Creativity.

    தமிழக கிராமத்திலிருந்து தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த மேல் நாட்டிற்குச் சென்று குடும்ப விருத்தி கண்டு மகிழிச்சியாக இருக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை.

    இறைவன் அருள் பூர்ணமாக கிடைக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம். என் தமிழ் ஆர்வத்திற்கு ஊட்டம் கொடுப்பதற்கு மகிழ்ச்சி.
    பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் நாங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts