Repas complet Réunionnais/ரெயூனியனே சாப்பாடு




      இந்த முறை நாம் சாப்பிட போவது ரெயுனியோனே சப்பாடு. 

     ரெயுனியோனில் நிறைய நம்மவூர் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பேர் மலபார் என்று சொல்லுவார்கள்.

     ரெயுனியோன்  பிரான்சின் சட்டத்தின் கீழே உள்ள ஒரு தீவு.

       இதில் சீன நாட்டு மக்கள்,இந்திய மக்கள்,ஆப்பிரிக்க நாட்டு மக்கள் எல்லோரும் அடிமைகளாக இங்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

       இப்படி பல நாட்டுக்காரகள் இருப்பதால் இங்கு க்ரேயோல்கள் இருக்கிறார்கள். இங்கு எல்லா நாட்டினரும் இருப்பதனால் தான் இவர்கள் பேசும் மொழியிலும் உணவு பழக்கங்களும் எல்லாம் கலந்து இருக்கிறது.
தமிழ் இல்லாமலா? தமிழ் வார்த்தைகளும்  இந்த க்ரேயோலில் கலந்து இருக்கிறது.

       உதாரணத்திற்குகலுப்பிலைஎன்றால் கறிவேப்பிலை,”கொட்டுமில்லிஎன்றால் கொத்துமல்லி.





  1. சோறு/Riz
  2. சொஸிஸ் ருகாய்/Rougail Saucisses de la Réunion
  3. கடலை கறி/cari gros pois ou autre grains
  4. தக்காளி ருகாய்/Rougail Tomate




Rougail Tomates cotomili/ருகாய் தக்காளி கொத்தமல்லி
தக்காளி ருகாய் ரெயுனியோன் உணவில் பக்க உணவாக இருக்கிறது.
 (accompagnement de rougail chaud ou de cari)

தேவையான பொருட்கள்/ingrédients:

  • தக்காளி/Tomates 4
  • வெங்காயம்/oignon 1
  • கொத்தமல்லி தழை/coriandre
  • இஞ்சி/gingembre râpé  சிறு துண்டு/un petit morceau
  • எலுமிச்சைப்பழம்/citron 1
  • பச்சை மிளக்காய்/Piment verte 1 (selon votre goût)
  
Préparation/ செய்முறை:

1)தக்காளி வெங்காயத்தை பொடியாக அரியவும்.
Émincer les tomates,
hâcher très finement les oignons.

இஞ்சியை தோல் சீவி துருவவும்.

2)பச்சை மிளக்காயை அரிந்து வைக்கவும்/Emincer le piment vert.

3)அரிந்து வைத்த வெங்காயம்,தக்காளி,பச்சை மிளக்காய்,உப்பு,மிளகுத்தூள்,கொத்தமல்லி,இஞ்சி எல்லாவற்றையும் ஒரு சின்ன உரலில் போட்டு நன்றாக இடிக்கவும்/Au pilon, écraser ensemble très 

soigneusement sel piment et gingembre. Mettre ensuite les tomates dans le pilon. Mélanger le tout en pesant avec le kalou.

தக்காளி குழையக்கூடாது.

Sans réduire les tomates en purée.


பிறகு மற்ற ரெசிபிகளை கொடுக்கிறேன்.
CopyrightJan2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts