Quenelles natures ou quenelle gruyére/ கெனல்






     கெனல் லியோனே(Quenelle lyonnaise) மிகவும் பிரசித்தி பெற்றது.
முன்பே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்.Gastronomie/கஸ்த்ரோனமிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது லியோன் தான் என்று.

     இது முதலாம் நூற்றாண்டில் ரோமையர்களால் செய்யப்பட்ட உணவு.
பிறகு இது 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் (LouisXV)லூயிXV ஆம் மன்னருக்கு செய்துக்கொடுக்க பட்டது. அப்போது இந்த கெனல் மன்னர்களின் அரண்மனையில் மட்டுமே தயாரிக்கப்பட்டது.

1830யில் இது லியோனுக்கு ஷார்ல் மொரத்துர் என்னும் பெரிய் மேத்ரு பத்திஸியே(Maître pâtissier) லியோனில் வந்து தங்கி ஒட்டல் வைத்தபோது இந்த ரெசிபி லியோனுக்கு வந்தது.

       லியோனிற்கு வந்தப்பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டது. அதனால் இது லியோனில் மிகவும் பிரசித்தி பெற்றது என்று சொல்லுகிறார்கள்.


Ingrédients/தேவையான பொருட்கள் :
  • மைதா/Farine 300 g/ கிராம்
  • தண்ணீர்/l'eau
  • வெண்ணெய்/Beurre  300 g/கிராம்
  • துருவிய சீஸ்/gruyère rapé  300 g/ கிராம்
  • முட்டை/les œufs 9
  • உப்பு/sel தேவையான அளவு
  • கொஞ்சம் ஜாதிக்காய் தூள்/poudre de noix de muscade



Préparation/செய்முறை :




1)ஒரு கசரோலில் தண்ணீரில் வெண்ணெய்யும் உப்பும் போட்டு  கொத்திக்க விடவும்.

Dans une casserole, porter à ébullition l’eau,le beurre et sel

2)மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக போட வேண்டாம். ஒரேடியாக கொட்டவும்.

Verser la farine d’un seul coup.



3)தண்ணீருடன் மாவை இடைவிடாமல் கிளறவும். கட்டி முட்டி இல்லாமல் கிளறவும்.

Mélanger vigoureusement. Laisser cuire 8mn a feu doux en remuant.

4)அடுப்பை நிறுத்தவும்.கிளறி வைத்திருக்கும் மாவில் சூடு ஆறுவதற்கு முன் சீக்கீரமாக ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி,




கொஞ்சம் ஜாதிக்காய் தூள், துருவிய சீஸ்ஸையும் போட்டு வேகமாக கிளறவும்.

Retirer du feu. Ajouter les œufs une à une en mélangeant vigoureusement et ajouter le gruyère et noix de muscade. .



5)கிளறி முடித்த பிறகு அந்த மாவை அப்படியே ஆறவிடவும். நன்றாக ஆறவேண்டும்.

Laisser refroidir.



6)ஒரு பெரிய தட்டில் மைதா மாவை தூவிக்கொள்ளவும். கைகளில் மாவை தொட்டுக்கொள்ளவும். அப்படி செய்வதினால்,கிளறி வைத்திருக்கும்  மாவை 





உருட்டும்போது கையில் ஒட்டாது. ஒரு மேஜைக்கரண்டி மாவை எடுத்து கொழுக்கட்டையைப்போல் உருட்டவும் .

Faire un gros boudin sur une plan de travail fariné rouler sur la planche




7)ஒரு பெரிய Marmite/மர்மித்தில் நிறைய தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.




கொதித்த தண்ணீரில் நாம் உருட்டி வைத்திருக்கும் உருட்டி வைத்திருக்கும் மாவை 4 அல்லது 5 ஆக போட்டு வேகவிடவும். 





8)வெந்ததும் உருண்டைகள் மேல் எழுப்பி வரும். அதுதான் உருண்டைகள் வெந்ததிற்கு அடையாளம் வெந்த உருண்டைகளை வெளியே எடுத்து தண்ணீரை வடிக்கட்டவும்..

Porter un grande casserole ou marmite d’eau à ébullition. Faire pocher les boudins jusqu’à ce qu’elles remontent à la surface. Égoutter les.

      இப்போது கேனல் ரெடியாக இருக்கிறது/

Les quenelles sont prêtes.

நீங்கள் கேனலை சமைக்கலாம். இதன் ரெசிப்பிகளை பிறகு தருகிறேன்.
Copyright jan2015©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts