Bouchées à la Reine facile et rapide/புஷ்யே அ லா ரேன் விரைவான முறை






     புஷ்யே அ லா ரேன் 18 ஆம் நூற்றாண்டில் 15ஆம் லூயின்(Louis xv) மனைவி Marie Leczcinska princess de pologneயின் மூலம் நாம் சுவைத்து ரசிக்க வைக்கிறது. 

      இது ரிச்சான ஒரு பிரான்சேவின் ஆன்த்ரே(entrée françaiset). Vol au ventஎன்று சுஸர்லாந்திலும் பெல்ஜிக்கிலும் சொல்லுவார்கள்.

தேவையானது:

  • வெண்ணெய்/Beurre 50 g/கிராம்
  • பால்/Lait 250 mlமில்லி
  • மைதா/Farine de blé  35 g/கிராம்
  • ஜாதிக்காய்/Muscade
  • மிளகுத்தூள்/Poivre
  • உப்பு/Sel


Garniture
  • காளான்/ Champignon de paris 100 g/ கிராம்
  • ஹேம்/Ham/Jambon 100  g/கிராம்
  • துருவிய சீஸ்/Emmental râpé 50 gகிராம்

புஷ்ஷே/bouchées en pâte feuilletée 4- 6

செய்யலாம்/Préparation :

1)ஒரு கசரோலில் வெண்ணெய்யை உருக்கவும். வெண்ணெய்  உருகியவுடன் மாவை போட்டு கிண்டவும். மிகவும் விரைவாக கிண்டவேண்டும்.
     
     Dans une casserole faire fondre le beurre,ajouter la farine .
Fouetter rapidement.

2)கொஞ்சம் கொஞ்சமாக அதில் பாலை ஊற்றி சீக்கிரமாக மாவு கட்டி தட்டமால்  கிண்டவும்.
      
     Verser un petit à petit de lait  fouetter rapidement.

3)பிறகு இதில் உப்புத்தூள்,மிளகுத்தூள்,ஜாதிக்காய் போட்டு கலந்து விடவும்.

       அடிப்பிடிக்காமல் இருக்க வேண்டும்.கவனித்து செய்யுங்கள். சிறுத்தீயில் வைத்து செய்யுங்கள். மிகவும் கட்டியாக இருக்க வேண்டும். தண்ணீராக இருந்தால் எடுத்து சாப்பிடுவது கஷ்டமாக இருக்கும்.

      Ajouter sel, poivre et muscade. Continuer à fouetter la béchamel ce que celle-ci épaississe.

4)சின்னதாக வெட்டிய ஹேம்மையும்,மஷ்ரூமையும் சேர்த்து கிண்டவும். பேஷாமலுடன் கலக்கவும். பேஷாமல் நன்றாக கட்டியானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கூட ஹாம்மையும்,மஷ்ருமையும் போட்டு கிண்டலாம்.

     Préparer la béchamel. Hors du feu ajouter jambon couper mélanger.

5)பிறகு துருவிய சீஸ்ஸையும் போட்டு கிண்டவும். கூடவே பெர்சில் போட்டு கிளறி இறக்கவும்.

    

      Ajouter les champignons et l’emmental rapée.

6)அவணை மூற்சூடு 180° செய்யவும்.

     Préchauffer votre four à 180°. 

7)புஷ்ஷேவின்னுள் garniture/வைப்பதற்குள் அதனை அவணுள்
ஒரு 5 - 8 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

     புஷ்ஷே லேசாக சூடானாலே போதும்.




8)சூடேறிய புஷ்ஷேவில் இருக்கும் மேல்புறம் தொப்பிப்போல் இருக்கும் பகுதியை மெதுவாக உடைக்காமல் கத்தியால் எடுக்கவும்.

      Passer vos bouchées vides au four. Celle-ci soit chaude. creuser les bouchée et garder les couvercles.




9)அந்த தொப்பியை உடைக்காமல் எடுத்து தனியாக வைக்கவும்.
புஷ்ஷேவினுள் நாம் செய்து வைத்திருக்கும் garnitureரை நிரப்பவும். 

10)எல்லா புஷ்ஷேவையும் நிறப்பிய பிறகு, நாம் தனியாக உடையாமல் வைத்திருக்கும் தொப்பியை அதன்மேல் வைத்துவிட்டு சூடாக இருக்கும் அவணில் வைக்கவும்.



      
      Remplir votre mélange dans les bouchée et recouvrez les des couvercles.

11)எல்லா புஷ்ஷேவையும் நிறப்பிய பிறகு, நாம் தனியாக உடையாமல் வைத்திருக்கும் தொப்பியை அதன்மேல் வைத்துவிட்டு சூடாக இருக்கும் அவணில் வைக்கவும்.




12)25 - 30 நிமிடங்கள் அவணில் வைத்து எடுக்கவும். தீயாமல் இருக்க அவ்வப்போது பார்த்துக்கொண்டே இருங்கள். அவணை திறக்கமால் பார்க்கவும்.
    
      Enfourner  les pour 30 mn.
சூடாக சாப்பிடவும்.

Servez bien chaud

Copyright jan2015©kolly2wood.blogspot.com

Comments

Popular Posts