Gaufres/ கோஃப்ர்



      

     கோஃப்ர் என்பது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமானது. முக்கியமாக ஜெர்மனி,பிரான்சு,பெல்ஜியம் போன்ற நாடுகளில் இது பிரபலம்.

      இது பலவிதமான வடிவங்களில் செய்வார்கள். ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதவிதமாக செய்வார்கள்.

      இப்போது நான் செய்யும் ரெசிபியை உங்களுக்கு தருகிறேன்.

தேவையானது /Ingrédients :

  • மைதா/Farine 250 g/கிராம்
  • வெண்ணெய்/Beurre 150 g/கிராம்
  • சர்க்கரை/Sucre 50 g/கிராம்
  • தண்ணீர்/L’eau 100 ml/மில்லி
  •  பால்/Lait 300 – 400 ml/மில்லி
  • *முட்டை/Les œufs 2 – 3  
  • உப்பு/Sel


*முட்டையின் வெள்ளைக்கரு மட்டும்.

seulement de blanc d’œuf


செய்முறை /Préparation :

1)முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும்  நன்றாக அடித்துக்கொள்ளவும்/

Monter es blanc en neige

2)வெண்ணெய்யை கொஞ்சமாக உருக்கிக்கொள்ளவும். அதிலேயே பாலை ஊற்றி வெண்ணெய்யை நன்றாக உருக்கவும். அதில் உப்பும் சர்க்கரையும் போட்டு கலக்கவும்.

Faites fondre le beurre, puis ajouter le lait, le sel, et le sucre .




3)அப்படியே ஆறவிடவும். 

Laisser froidir.

4)அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவைக்கலக்கவும்.Mélanger le petit à petit.
முதல் செய்து அடுத்த நாள் செய்யவும். அவசரமாக செய்ய வேண்டும் என்றால், குறைந்தது 4 மணிநேரமாவது ஊறவேண்டும்.

Laisser reposer toute une nuit. Si possible. Si non 4 hr minimum.




5)முட்டையின் வெள்ளைக்கருவை மாவில் கரைத்து வைக்கவும்.

Ajouter les blancs en neige avec la pâte.





6)கோஃப்ர் செய்யும் மூலை நன்றாக சூடு செய்து. கொஞ்சம் எண்ணெய் ஸ்ப்ரே செய்து மாவை ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.

Faites cuire dans un gaufrier chaud.




7)கோஃப்ர்  பொன்னிறமானதும் எடுத்து வைக்கவும். இதனை திருப்பிப்போட தேவையில்லை. கொஞ்சம் ஆறியவுடன் ஐசிங் ஷுகரை மேலே தூவி சாப்பிடுங்கள்.

Une fois la gaufre bien dorée, saupoudrer les gaufres de sucre glace.




     
    Gaufrier என்பது எலக்டிரிக்கிலும் இருக்கிறது அடுப்பில் செய்வதும் இருக்கிறது.




Copyright  Jan2015kolly2wood.blogspot.com


Comments

Popular Posts