Mug cake carambar/ மக் கேக் கராம்பார்





     இந்த  மக் கேக்   காராம்பாரில் செய்தது. மிட்டாய் என்பதால் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இது செய்வது எப்படி என்றால்? இப்படிதான்:

தேவையானது:
  • ஸேல்ஃப் ரேஸ்ங் ஃப்ள்ர்/Self Raising flour 6 மேஜைக்கரண்டி
  • வெண்ணெய் 20 கிராம்
  • சர்க்கரை 2 மேஜைக்கரண்டி
  • கேம்போத்/compte  2 மேஜைக்கரண்டி
  • முட்டை 1
  • கரான்பார்/Carambar 1


ஸோஸ் கராம்பார்/Sauce Carambar:
  • காரம்பார் 2
  • ஃப்ரஷ் கிரீம்/Fresh cream 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

1)வெண்ணெயை உருக்கி வைக்கவும்.

2)ஒரு Mug/மக்கில் முட்டையை உடைத்து ஊற்றி,அடிக்கவும்.

3)அதில் சர்க்கரையை போட்டு அடிக்கவும்.



4)அதில் மாவை போட்டு நன்றாக கலக்கவும்.




5)மாவு கலக்கியவுடன், அதிலேயே ஆப்பிள் கோம்போத்தை போடவும். அதையும் கலக்கி விடவும்.




6)எல்லாம் கலந்து முடிந்ததும்,நடுவில் ஒரு காராம்பாரை வைத்து விடவும்.




7)மைக்ரோ அவணில் 1:30 நிமிடம் வைக்கவும்.

8)வெந்ததும் நன்றாக பொங்கி வரும்.



அதற்க்குள் ஸோஸ் கராம்பார் செய்யவும்.




1)2 கராம்பாரையும் ஃப்ரஷ் கீரிமையும் வைத்து மைக்ரோ அவணில்நிமிடம் வைத்து எடுக்கவும்.



2)கராம்பாரை ஃப்ரஷ் கீரிமில்  கரைக்கவும்.
ஸோஸ் ரெடி.


கராம்பார் ஸோஸை மக் கேக்கின் மேல் ஊற்றவும்.




ஸோஸ்சுடன் கேக்கை நன்றாக சுவைத்து  சாப்பிடவும்.

copyright©Aug2014kolly2wood.blogspot.com


Comments

Popular Posts