Flans de carottes/ கேரட் ஃப்ளான்





தேவையானது:
  • கேரட் 800 கிராம்
  • முட்டை 2
  • முட்டையின் மஞ்சள் கரு மட்டும் 2
  • ஃப்ரஸ் கீரிம்/Fresh cream   300 மில்லி
  • பசிலிக்
  • உப்பு
  • மிளகுத்தூள்


செய்முறை:
1)கேரட் தோலை சீவி,வெட்டவும்

2)வெட்டிய கேரட்டை நன்றாக வேக வைக்கவும்.



3)வேக வைத்த கேரட்டை நன்றாக மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.



4)முட்டையை நன்றாக அடிக்கவும்.




5)அடித்த முட்டையை கேரட்டில் போட்டு கலந்து விடவும்.




6)பிறகு,கீரிமை போட்டு கலந்து விடவும்.


7)உப்பு,மிளகுத்தூள், பசலிக் எல்லாம் போட்டு கலந்து விடவும்.




தயாராக வைத்து இருக்கும்.

8)அதற்க்குள்,சின்ன சின்ன கப்புகளில் எண்ணெய் தடவி வைத்துக்கொள்ளவும்.

9)எண்ணெய் தடவி வைத்துள்ள கப்புகளில்  கலந்து வைத்துள்ள ஃப்ளான் கலவையை ஊற்றவும்.




10)அவணை 200°c யில் முற்சூடு செய்யவும்.

11)முற்சூடு செய்த அவணில்  பேன் மரி(Bain-marie)யில் வைக்கவும்.
40 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.






12)வெந்ததும்,எடுத்து சாப்பிடவும்.




     இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். இரண்டரை வயது குழந்தையிலிருந்து இதனை கொடுக்கலாம்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts