பேரிக்காய் க்ராபேல்/crumble de poire





க்ரம்பல்/crumble ரொம்போ ரொம்போ சுலபமான ஒன்று. இதில் அதிகமாக பழம் இருக்கும். செய்வதும் மிகமிக சுலபம். சீக்கிரமாக செய்துவிடலாம்.


      முட்டை தேவையில்லை. சர்க்கரை குறைத்து  கொள்வதாய்  இருந்தால் குறைத்துக்கொள்ளுங்கள்.

இதற்கு தேவையான பொருள்கள்:

  • பேரிக்காய் பழமாக 6
  • சர்க்கரை           150 கிராம்
  • மைதா             120 கிராம்
  • பாதாம் தூள்         80 கிராம்
  • வெண்ணெய்       100 கிராம்

செய்முறை:

1)பேரிக்காயின் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் விதையை எடுத்து விடவும்.

2)பழத்தை துண்டு துண்டாக வெட்டவும்.




3)ஒரு ஏனத்தில் 20 கிராம் வெண்ணெயை போட்டு உருக்கவும். உருகியதும் வெட்டிய பேரிக்காயை போட்டு அதில் 25 கிராம் சர்க்கரையையும் போடவும்.

4)10 நிமிடம் கிளறவும். நன்றாக கராமலாக வரவேண்டும். நிறுத்தி விடவும்.

5)வெண்ணெய்யை குளிர்சாதனப்பெட்டியிலிருந்து எடுத்து துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

6)ஒரு பவுலில் பாதாம் தூள், மைதா,மீதம் இருக்கும் வெண்ணெய்,சர்க்கரையை போட்டு விரல் நுனியால் மணல் போல் ஆக்கவும்.



7)ஒரு தட்டில் வெண்ணெய் தடவி, அதில் கராமலாக செய்து வைத்து இருக்கும் பேரிக்காயை  தட்டில் போடவும்.



8)பவுலில் கலந்து வைத்து இருக்கும் மாவை பேரிக்காயின் மீது  தூவி விடவும்.




9)அவணை 210°c யில் முற்சூடு செய்யவும்.

10)தயார் செய்து வைத்துள்ள தட்டை அவணில் வைக்கவும்.

11)அவணில் 20 - 25 நிமிடங்கள் வைக்கவும்.

வெந்ததும் எடுத்து சாப்பிடலாம்.
இதனை ஆறவைத்தும் சாப்பிடலாம்.




வெதுவெதுப்பாகவும் சாப்பிடலாம்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts