Chestnut MUG CAKE/Crème de marrons Mug cake/ செஸ்ட் நட் மக் கேக்





     இப்போ கேக்கில் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த கேக் Pop cake/பப் கேக்Mug cake/மக் கேக். பப் கேக் ரெசிபி முன்பே கொடுத்துள்ளேன்

இப்போ மக் கேக் பார்போமா?

      இந்த மக் கேக்  chestnut ப்யூரேவை வைத்து செய்த்தது. நல்லா ஸ்பாஞ்ஞியாக வரும்.

இது 2 பேருக்கு தேவையான அளவு

இதற்க்கு தேவையானது:
  • Chestnut ப்யூரே/crème de marron 4 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை 1 மேஜைக்கரண்டி
  • வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  • பால் 1 மேஜைக்கரண்டி
  • self raising powder/ ஸேல்ஃப் ரேஸ்ங் பௌடர் 1 மேஜைக்கரண்டி
  • முட்டை 1
  • முட்டை 1


Mug/மக்கில்கலக்க வாங்க:

1)ஒரு பவுலில் வெண்ணெய்யை உருக்கி கொள்ளுங்கள்.




2)அந்த வெண்ணெய்யிலேயே   chestnut ப்யூரேவை லேசாக அடித்துக்கொள்ளுங்கள்.




3)பிறகு, அதில் சர்க்கரையை போட்டு கலக்க்கவும்.




4)சர்க்கரை நன்றாக கலந்ததும் பாலை அதில் ஊற்றி கலந்து விடவும்.




5)அதில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும்.




எல்லாவற்றையும் கலந்துவிட்டீர்களா?

6)மாவு மட்டும்தான் இருக்கிறது. இப்போ அதையும் போட்டு கட்டி தட்டாமல் கலந்து விடவும்.




7)உங்களுக்கு பிடித்த கப்பில் நீங்கள் செய்து வைத்து இருக்கும் மக் கேக் கலவையை ஊற்றுங்கள்.

பாதிகப்தான் ஊற்ற வேண்டும்.

8)மைக்ரோ அவணில் 1 நிமிடம் வைக்கவும். நன்றாக பொங்கி வரும்.

9)1நிமிடம் முடிந்ததும், நிறுத்திவிட்டு, மீண்டும் 15 நொடிகள் வைத்து மைக்ரோ அவணிலிருந்து எடுக்கவும்.

         Crème de marron எனக்கு ரொம்போ பிடிக்கும். எனக்கே பிடித்தது என்றால்? என் பிள்ளைகளுக்கு?????????? !!!!!!!!!!!!

chestnutமக் கேக் தயார். சாப்பிட்டு பாருங்கள்.

சுவையோ சுவை.
copyright©july2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts