தூக்கமும் நாமும் 3


இந்த முறை தூக்கத்தின் (crise d'épilepsie) 3வது பாகம் இது. 

       சென்ற பாகத்தில் இழுப்பு வந்தால் என்ன முதல் உதவி செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்று பார்த்தோம்.

      இந்த முறை அதற்கு பிறகு என்ன செய்வது என்று பார்ப்போம்.

இழுப்பு நன்றாக முடிந்து விட்டது என்றால்:


அவர்கள் எழுந்ததும் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கலாம்.
படுத்த நிலையில் இருக்கலாம். அந்த நிலையில் அவரின் சுயநிலைக்கு அழைத்து வர முயற்ச்சி செய்யலாம்.

சில சமயம் இழுப்பு வந்தவர் வாந்தி எடுக்க நேரிடலாம். அதனால், இழுப்பு வந்தவரின் முதுகுப்புறம் இருக்கவும்.

சில சமயங்களில் இப்படி பட்டவர்களுக்கு சுயநினைவு திருப்ப ஒருநாள் கூட ஆவது உண்டு. இது அவர் அவர்களின் மனநிலை, உடல்நிலையை பொறுத்தது.

தாம் எங்கு இருக்கிறோம்?என்ன செய்கிறோம்?என்ன பேசுகிறோம்?என்பதே தெரியாது.

நிறைய ஊளறுவதும் உண்டு.

அவரின் போக்குக்கு விட்டு விடுங்கள் கொஞ்சம் நேரத்திற்க்கு.
பிறகு,கொஞ்சம் நேரம் கழித்து சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள். அப்படியும் வரவில்லை என்றால் மருத்துவமனைத்தான்.

உங்களுக்கு தெரியாதவராக இருந்தால் கூட, முதலில் அவருக்கு  குடிக்க ஏதாவது கொடுங்கள்.

பிறகு, அவரை முடிந்தால் வீடுவரை அழைத்து செல்லுங்கள். அல்லது ஒரு வண்டியாவது வைத்து அனுப்பி வையுங்கள்.

      இந்த நோய் இருப்பவர் எப்போதும் அவரின் பெயரும் விலாசமும் எழுதி வைத்திருக்கும் ஒரு தாளை வைத்து இருக்க வேண்டும். அவரிகளின் மருந்தும் மருந்துவ சீட்டும் இருந்தாலும் நல்லது.


நீங்கள் பிரான்சில் இருப்பவராக இருந்தால்,உடனே SAMU 15   அல்லது Pompier 18    கூப்பிடுங்கள். அவர்களிடம் உங்களுக்கு என்ன முதல் உதவி செய்வது என்று தெரியவில்லை என்று சொன்னால் கூட சொல்லிக்கொடுத்துக்கொண்டே வருவார்கள்.

மற்றநாடு என்றால் எனக்கு எப்படி என்று தெரியாது. இங்கு சொன்ன  15 அல்லது  20  நிமிடத்தில் இருப்பார்கள்.

* இவர்களின் நோய் அதிகம் ஆக காரணம்:

அதிக வெளிச்சம்.மின்னும் வெளிச்சம்.
அதிக சத்தம். சத்தமான பாடல்கள்.
அதிகமான ஜூரம்.
அதிகமான சந்தோஷம். 
அதிகமான துக்கம்.



அதிகமான கோபம்.
இதில் கோபமும் துக்கமும் அதிகமாக தாக்குகிறது.

தூக்கம் அதிகம் இல்லை என்றாலும்.
அதிகமான வேலை செய்தாலும். கலைப்பு,
மருந்து அடிக்கடி போடவில்லை என்றாலும்
காபி போன்ற பானங்கள் அதிகமாக குடிப்பதனாலும்
போதைபொருள்கள்,குடிப்பானங்கள் உட்கொள்ளுவதால்.
அதிகமாக தொலைக்காட்சி,விடியோ கேம்,கம்யூட்டர் இதையெல்லாம் பார்ப்பது

பிறகு சிந்திப்போம்
copyright©Aug2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts