Kessra/ கேஸ்ரா





     இது அல்ஜெரியாவில் கபில் இனத்தவர்கள் செய்வார்கள்.

     இது நான் வீட்டில் செய்தால், அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

     அல்ஜெரியா, மரோக்கா போன்ற பெரும்பாலான ஆப்ரிக்காவில் உள்ள நாடுகளில் ரவையிலான உணவுகளைதான் சாப்பிடுகிறார்கள்.

     இது நம் நாட்டில் செய்யும் ஸ்ட்ஃப்டு  சப்பாத்தி போல் இருக்கும். ஆனால், எனக்கு ருசி வேறு மாதிரியாக தெரிகிறது.

ரெசிபி இதோ உங்களுக்கு:

இதற்க்கு தேவையானது:

1)கலேத்/galette
  • மெல்லிய ரவை/semoule fine 500 கிராம்
  • எண்ணெய் 150 மில்லி
  • ஈஸ்ட் 1 டீஸ்பூன்
  • உப்பு
  • தண்ணீர்


2)ஃப்ர்ஸ்/Farce
  • வெங்காயம் 4
  • தக்காளி 3
  • பூண்டு 2 பல்
  • கொத்தமல்லி கீரை
  • புதினா
  • மிளக்காய்தூள் 2 டீஸ்பூன்
  • எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  • உப்பு


செய்முறை:




1)முதலில் ரவையையும் எண்ணெய்யும் பிரட்டவும்.






ரவை எண்ணெய்யை இழுக்கும்.




2)பிறகு,எண்ணெய் ஊற்றி பிரட்டிய  ரவையில் உப்பையும், ஈஸ்டை போட்டு 






3)தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும். 15 - 20 நிமிடங்கள் பிசையவும்.

4)ஒரு 20 நிமிடங்கள் துணியை போட்டு அப்படியே பிசைந்த மாவை ஊற விடவும்.





அதற்க்குள்,

1)வெங்காயத்தை வதக்கவும்.

2)வெங்காயம் வதங்கியதும்,பூண்டை போட்டு வதக்கவும்.

3)அதில், தக்காளியை வதக்கவும்.

4)பிறகு, புதினா, கொத்தமல்லி,மிளக்காய்த்தூள்,உப்பு போட்டு பச்சை வாசனை போனதும் நிறுத்தவும்.

5)ஃப்ர்ஸி தயாரித்து விட்டோம்.இது கொஞ்சம் ஆறி இருந்தால் நல்லது.

6)பிசைந்து ஊறவைத்த மாவை ஆரஞ்சு பழ அளவில் எல்லாவற்றையும் பிரித்து வைத்து கொள்ளவும்.




7)பிரித்து வைத்த மாவில் ஒரு உருண்டையை வட்டமாக உருட்டவும்.



8)நடுவில் நாம் செய்து வைத்துள்ள ஃப்ர்ஸியை வைக்கவும்.      




9)இன்னொரு உருண்டையையும் வட்டமாக உருட்டி ஃப்ர்ஸி வைத்து இருக்கிறோம் அல்லவா? அதன் மேலேயே வைக்கவும்.
ஒரத்தை லேசாக அழுத்தி விடவும். நன்றாக




அழுத்தி விட்ட ஒரத்தை நன்றாக சுருட்டி bind/ பைன்ட் பண்ணவும்.

பாதி கேஸ்ரா தயாராகி விட்டது.

10)அடுப்பில் தோசைக்கல்லை காயவைத்து கேஸ்ராவை போடவும். சிம்மில் வேக விடவும்.

11)வெந்து சிவந்ததும், திருப்பி போடவும்.



12)எண்ணெய் ஊற்றவே வேண்டாம்.




சிவந்ததும் எடுத்து வெட்டி சாப்பிடுங்கள். கேஸ்ரா ரெடியானதும்.
copyright©Aug2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts