Fromage blanc(Faisselle) ப்ரமாஷ் ப்ளான் (ப்ஃஸேல்)





     

    தயிர் வகைகள் இங்கு விதவிதமாக இருக்கிறது அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது பிராமாஷ் பிளான் தான். இதில் க்ரேம் ஊற்றி, சர்க்கரை போட்டு சாப்பிட்டால் ம்ம்ம்ம்ம்ம்
      அதன் ருசியோ ருசிதான்.
       எப்போதுமே நாம் கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்தால் அதன் ருசியே தனிதான். ஒன்று வீட்டில் செய்ய வேண்டும். இல்லை என்றால், நேராக மாடு வளர்ப்பவர்களிடம் வாங்க வேண்டும்.
      இதில் எனக்கு என் நண்பரகள் சொல்லித்தந்த விததை உங்களுடன் பகிர்த்துக்கொள்கிறேன்.
      இது கிராமத்தில் பால் வகை உணவுகள் (பாலாடைக்கட்டி, பால், தயிர் வகைகள்) செய்பவர்கள் செய்யும் முறை
தேவையானது/Ingrédient :
 பால் லிட்டர் /Lait 1lt லிட்டர்
Rennet/Présure 1 à 2 gouttes/ சொட்டு
Lait : préférence direct de la ferme.
*ப்ர்ஸூர் அதிகமாக போட்டால் ருசி நன்றாக இருக்காது. 1  லிட்டர் பாலுக்கு 1 அல்லது 2 சொட்டுதான் போட வேண்டும்.

Attention :Ne pas mettre de présure plus de 2 gouttes.

செய்முறை /Préparation :
  
கறந்த பால் சூட்டுடன் இருக்கும் அல்லவா?அதனை காய்ச்சாது அப்படியே  அதே சூட்டில் ப்ரேசூரை போடுவது நல்லது.


1)அப்படி கடையில் கறந்த பால் வாங்கினால், அதனை 20° யில் பாலை சூடுக்காட்டவும்.
Faites chauffer du lait jusqu’à 20°
2)சூடான பாலில் ப்ரசூரை  1 அல்லது 2 சொட்டுக்கள் விடவேண்டும். நன்றாக கலந்துவிடவும்.


Ajouter-lui la présure et mélanger délicatement

3)அப்படியே மூடி ஒருநாள் அப்படியே வைக்கவும்.
அப்புறம் ஒவ்வொரு நாட்டின் உஷ்ணத்தை பொறுத்தது அது ப்ரமாஷாவது.
Couver de casserole avec un torchon et attendre 24hrs.
2)அதில் தண்ணீர் மேலெழும்பி வந்திருக்கும். அதை வடிக்கட்டி. குளிர் சாதனப்பெட்டிக்குள் வைத்து சாப்பிடவும்.
Laisser le fromage s’égoutter et garder au frais

ப்ரமாஷ் ப்ளானை சர்க்கரை அல்லது ஜாம் போட்டு சாப்பிடவும்.

Déguster avec sucre et crème fraîche liquide ou confiture

இது குழந்தைகளுக்கு 6 அல்லது 8 மாததிலிருந்து கொடுக்கலாம்..
Copyright  Mai2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts