Brandade/ ப்ராந்தாந்





    
      இந்த ப்ராந்தாந் எங்கிருந்து வந்தது என்பதில் சிறு குழப்பம் எனக்கு. இது பிரான்ஸி(France)லிருந்து போர்திகலுக்கு(Portugal)போயிருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
   
எப்படியோ கேள்விப்பட்டதிலிருந்து நான் புரிந்துக்கொண்டது :

     பிரான்ஸில் செய்யும் சமையல் குறிப்புக்கும் போர்திகலில் செய்யும் சமையல் குறிப்பிற்கும் சில சில மாற்றங்கள் இருக்கிறது.

கருவாடும் உருளைக்கிழங்கும் போட்டு செய்வது இது.

இதற்கு தேவையானவைகள்/Ingrédients :
  • துண்டுக்கருவாடு/Morue 400 g/கிராம்
  • உருளைக்கிழங்கு/Pomme de terre 300 g/கிராம்
  • கிரீம்/crème liquide 100 ml/மில்லி
  • பூண்டு/l’ail 2 gousse/பல்
  • ஆலிவ் எண்ணெய்/Huile d’olive 100 ml/மில்லி
  • மிளகுத்தூள்/¨poivre
  • தேம்/Thym
  • லவங்க இலை/Laurier
  • பார்சிலி/Persil


செய்முறை/Préparation :

1)முதல் நாளே கருவாட்டை ஊறவிடவும்.

Il faut laisser dessaler la morue dans de l’eau froide.

2)ஊறும்போதே அடிக்கடி தண்ணீரை மாற்றி விடவும்.

Il faut renouveler l’eau plusieurs fois

3)அடுத்தநாள், ஒரு கசரோலில் தண்ணீரில் தைம்,இலவங்க இலை போட்டு அதிலேயே கருவாட்டையும் போட்டு. 20 - 25 நிமிடங்கள் வேகவைக்கவும்.





Dans une casserole mettre la morue, laurier et thym. Couvrir d’eau froide.
Mettre sur feu et porter à ébullition.

4)உருளைக்கிழங்கை வேகவிடவும்.

Cuire les pommes de terre.

5)கருவாடு வெந்ததும் தண்ணீரை வடித்துவிடவும். அதிலிருக்கும் முள்,தோல் இவைகளை எடுத்துவிடவும்.

Égoutter la morue, débarrasser soigneusement de la peau et des arêtes. 

5)கருவாட்டை உளுத்து போட்டுக்கொள்ளவும்.

Effiler la chair et réserver.

6)உருளைக்கிழங்கு வெந்ததும் அதனை ப்யூரேவாக  ஆக்கவும்.




Apres la cuisson des pommes de terre, les écraser à l’aide d’un fourchette ou un presse purée.

7)அவணை 200° முற்சூடு செய்யவும்.

Préchauffer le four 200°

8)பூண்டையும் பெர்சிலையும் சின்ன சின்னதாக வெட்டி வைக்கவும்.

Hacher le persil et l’ail.

9)ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு போட்டு லேசாக வதக்கி, அதில் உளுத்து வைத்திருக்கும் கருவாட்டை போட்டு  3 நிமிடங்கள் வதக்கி உருளைக்கிழங்கு ப்யூரேவையும் அதில் போட்டு நன்றாக ஒரு சேர கலந்துவிடவும்.





Faire chauffer doucement l’huile d’olive, ajouter la morue effilée et l’ail et le persil. Ecraser légèrement la morue à l’aide d’une cuillère en bois. Puis, ajouter la purée de pomme de terre.



10)அவை இரண்டும் நன்றாக கலந்த பின்பு,அதில் கீரிமை போட்டு கலந்து விடவும். அதிலேயே மிளகுத்தூள் போட்டு கலக்கவும்.





Puis ajouter la crème, poivre. Mélanger pour bien lier tous.




11)கலந்த பிறகு ஒரு அவணில் வைக்கும் தட்டில் அந்த ப்யூரைவை கொட்டி முற்சூடு செய்த அவணில் 20 - 25 நிமிடங்கள் வைக்கவும்.




Mettre le mélange de brandade dans un plat à four. Cuire pendant 20 minutes pour dorer la surface.
 Copyright  Mai2015kolly2wood.blogspot.com

Comments

Popular Posts