Frappouccino chocolat/ சாக்லெட் ப்ர்ப்புச்சீனோ







    இன்னைக்கு என் பிள்ளைகள் ஏதாவது ஒரு ப்ரப்புசீனோ (Frappouccino) செய்துக்கொடுக்க சொன்னார்கள். கடைசி நேரத்தில் கேட்டால் என்ன செய்வது. எனக்கு தோன்றிய பொருட்களை கலந்து ஒரு ப்ரப்புசீனோ செய்துக்கொடுத்தேன்.

அதைதான் இப்போது படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.


இதற்கு தேவையான பொருட்கள்/Il faut:

  • பால்/Lait 300 ml/மில்லி
  • கருப்பு சாக்லெட்/chocolat noire ou lait 50 g/கிராம்
  • கப்புசீனோ சாக்லெட் கலந்தது/Café viennois arôme chocolat 1 C. à .S/மேஜைக்கரண்டி
  • காபி ஒயிட்னர்/coffee whitener 1 C.à.c/தேக்கரண்டி
  • சர்க்கரை/sucre 3 - 4 C.à.s/மேஜைக்கரண்டி(selon votre goût)
  • ஐஸ் கட்டிகள்/Glaçons


அலங்கரிக்க/Pour décoré:




*கருப்பு சாக்லெட் பிடிக்காதவர்கள்,சாதாரண சாக்லெட்டை பயன்படுத்தலாம்

*சர்க்கரை அதிகமாக சேர்த்துக்கொள்வாதாயிருந்தால் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்


முயற்சி செய்யலாமா?/vous essayez :


க்ரேம் ஷாந்திலியை தயாரித்து வைத்துக்கொள்ளவும்.

Préparer de crème chantilly


 1) முதலில் கருப்பு சாக்லெட்டை டபுள் பாயிலர் முறையில் உருக்கிக்கொள்ளவும்.

Faire fondre le chocolat au bain-marie

மைக்ரோ அவணில் உருக்குவதாயிருந்தாலும் உருக்கலாம்.

Si non,faire fondre chocolat au micro-ondes

2) உருக்கி வைத்திருக்கும் சாக்லெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பாதி   பாலை ஊற்றி கலக்கி வைத்துக்கொள்ளவும்.




Retirer du feu et verser moitie de lait peu à peu mélanger bien.

3)ஒரு ப்லன்டரில் சர்க்கரை, பால்,சாக்லெட், கீரிமர்,கப்புசீனோ பவுடர் எல்லாவற்றையும் போட்டு கூடவே ஐஸ் கட்டிகளை போட்டு நன்றாக 3 - 5 நிமிடங்கள் அடிக்கவும்.



Dans votre blender verser reste de lait et chocolat au lait, ajouter les autres ingrédients et mixer 3-5 minutes





4) நுரைவர அடித்தப்பின்பு, மிக்ஸியை நிறுத்தவும்.

Jusqu’à obtention d’une boisson onctueuse.


ஒரு டம்ளரில் ப்ளன்டரில் அடித்து வைத்திருக்கும் சாக்லெட் பானத்தை ஊற்றி
அதன் மீது க்ரேம் ஷாந்திலியை போடவும்.
அதற்கு மேல் அலங்கரிக்க வேண்டியது உங்கள் பொருப்பு..
சில்லுன்னு குடிங்க !


Verser dans grands verres,
Décorer  beau dôme de crème chantilly, sace chocolat et copeaux de chocolat. Servir immédiatement.






Copyright Mai2015@kolly2wood.blogspot.fr

Comments

Popular Posts