யோக்ரூட்/yoghurt/yaourt செய்யலாமா?





     முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள் யோக்ரூட்தயிரும் ஒன்று கிடையாது.
     
      ருசியே அது வேறு. இது வேறு. தயிர் செய்வது எப்படி என்பது உங்களுக்கு தெரியும். இப்போது யாக்ரூட் செய்வதை கற்றுக்கொள்ளலாம். வாங்க. யோக்ரூட் உங்கள் வீட்டிலேயே செய்யலாம். 

இதற்க்கு தேவையானவைகள்:
பால் 1 லிட்டர்
யோக்ரூட்125 கிராம்

செய்முறை:

1)பாலை காய்ச்ச வேண்டும். பொங்கும் அளவுக்கு முன் நிறுத்த வேண்டும்.

2)பாலை அப்படியே ஆறவிடவும்.




3)கை தொடும் அளவுக்கு பால் இருக்க வேண்டும்.
உங்களிடம் தெர்மாமீட்டர் இருக்கும் என்றால் 40° இருந்தால் போதும்.

4)ஆறியதும்,ஒரு யாக்ரூட் இருக்கிறது அல்லவா? அதனை  அந்த பாலில் கலக்கவும்.




5)யாக்ரூடை கலந்து வைத்த பாலை, சின்ன சின்ன ஏனத்தில் ஊற்றவும்.
இல்லை என்றால்,ஒரே ஏனேத்தில் கூட ஊற்றி வைக்கலாம்.

6)அதற்க்குள்,ஒரு குக்கரில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

7)கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி விடவும்.

8)குக்கர் சூடாக இருக்கும்.

9)ஏனத்தில் ஊற்றி வைத்த யோக்ரூட்கலந்து வைத்த  பாலை,சூடாக இருக்கும். கலந்து வைத்த  பாலை குக்கருக்குள்வைக்கவும்.




10)குக்கரை இறுக்கமாக மூடவும்மூடிய குக்கரை ஆட்டாமல் ஒரே இடத்தில் அப்படியே 12 மணி நேரம் வைக்கவும்.




11)12 மணி நேரம் கழித்து, குக்கரை திறக்கவும்.

     யோக்ரூட் ரெடியாகி இருக்கும்.




யோக்ரூட்அவணிலும் செய்யலாம்.
யோக்ரூட்செய்வதற்கு என்று இருக்கும் யாவுர்தியரிலும் செய்யலாம்.

     இது Natural யோக்ரூட் தாயரிக்கும் முறை. இதில் சர்க்கரையோ எந்த விதமான நறுமணமோ இருக்காது.

      
     இதுதான் அடிப்படை யோக்ரூட் என்று சொல்லலாம்.

குளிர் சாதனப்பெடிக்குள் வைத்து சாப்பிடலாம்.

ரெடியான யோக்ரூட் அப்படியேயும் சாப்பிடலாம்.



அல்லது சர்க்கரை,ஜாம் ஏதாவது போட்டும் சாப்பிடலாம்.

copyright©July2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts