சமையலறை திட்டம் போடலாமா?





     இது வேலைக்கு போகும் எல்லாருக்கும் உதவும்.வீட்டில் இருப்பவர்கள் சீக்கிரமாக சமைக்க உதவும்.

     நாம் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி. எப்படியும் சாப்பிட்டுதான் ஆக வேண்டும். பரப்பரப்பாக சாப்பாடு செய்துதான் ஆக வேண்டும்.

     மத்தியான நேரத்திற்க்கு பிள்ளைக்களுக்கு, கணவருக்கு சாப்பாடு கட்டி கொடுக்க நேரிடலாம். அல்லது அவர்கள் வீட்டிற்க்கு வந்து சாப்பிடலாம். இரவு நேர சாப்பாடு. காலை சாப்பாடு என்று பம்பரமாக சுழல வேண்டும்.

இதில் பெரிய பாடு என்னவென்றால் "இன்னைக்கு என்ன செய்வது?" என்பதுதான். "நேற்றுதான் இது செய்தேன். இன்னைக்கும் அதே தானா?" என்று நம்மை நாமே கேட்டு கொள்வது மட்டும் இல்லாமல்,பிள்ளைகள் முதல் கணவர் வரை நம்மை கேட்கும் கேள்விகளில் நாம் எங்கே போய் குமுறுவது?

      இதனால் தான் நான் ஒரு ஐடியா செய்தேன். வாரம் ஒருநாள் வீட்டில் இருப்பவர்கள் அவைரையும் உட்கார வைத்து ஒரு வாரத்திற்க்கு என்ன என்ன செய்வது என்று மெனு போட்டுக்கொள்வேன். இல்லை....இது சரிப்பட்டு வராது என்று தெரிந்தால், அவர்களுக்கு பிடித்த, எனக்கு சுலபமான மெனுக்களை ஒரு வாரத்திற்க்கு எழுதிக்கொள்வேன்.

  

 ஒரு  வாரத்திற்க்கு மாதிரி திட்ட உணவு
வாரநாட்கள்
மாதிரி திட்ட உணவு வகைகள்

காலை
மதியம்
சாயும்காலம்
இரவு
திங்கள்




செவ்வாய்




புதன்




வியாழன்




வெள்ளி




சனி




ஞாயிறு






இது மிகவும் சுலபமாக உள்ளது.

தினமும் மண்டை குடைச்சலுக்கு குட்பை செல்லி விடலாம்.

     உங்களால் முடியும் போது பூண்டை உரித்து ஃபிரிசரில் வைத்து விடலாம்.

     வெங்காயம் கொஞ்சம் பெரியதாக அரிந்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலும், சின்னதாக அரிந்து ஒரு டப்பாவிலும் குளிர் சாதன பெட்டிகுள் வைத்து  விடலாம். இது 3 நாட்களுக்கு கெட்டு போகாது.

      மீன், கறி சாப்பிடுபவர்கள்: மீனை அய்ந்து கழுவி பொரிப்பது என்றால் சாந்து எல்லாம் போட்டுக்கூட பிரட்டிவைத்து பிரிஸரில் வைத்து விடலாம்.
குழம்பு என்றால் அதற்க்கு தகுந்தாற் போல் வெட்டி வைத்து விடலாம்.

      அதுப்போலவே, கறியையும் தயாரித்து பிரிஸரில் வைத்து விடலாம். ஒரு ஒரு பிளாஸ்டிக் பாக்கெட் போட்டு வைத்தால் இடம் அடையாமல் இருக்கும்

       நீங்கள் முன்னதாகவே தினமும் என்ன என்ன செய்வது என்று திட்டம் போட்டு வைத்து இருப்பதால்,மறு நாளைக்கு தேவையானதை  வேலைக்கு போகும் முன்பே,காலையில் பிரிஸரில் இருந்து குளிர் சாதன பெட்டிக்குள் வைத்து விட்டு சென்று விடுங்கள்.
      
        வேலைக்கு போய்விட்டு வந்ததும் இளகி ரெடியாக இருக்கும்.
சமைத்து சுலபமாக இருக்கும்.

இங்கு இட்லி,தோசை மாவைக்கூட ஃபிரிசரில் வைத்து சாப்பிடுகிறார்கள்.
 நான் வைத்தது இல்லை.

      காய்கறிகளை நறுக்கி இதுப்போலவே குளிர் சாதனப்பெட்டிக்குள் ஒரு டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் பையில் வைத்து விடலாம்.

       சப்பாத்தி,நாண் என்றால் பாதி வேக்காட்டில் செய்து குளிர் சாதனப்பெட்டிக்குள் வைத்து விடுங்கள்.

     முட்டை முதல் நாள் அவித்தால் அடுத்த நாள்வரை கெட்டுப்போகாது.




      இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்து வைத்து விடுங்கள்.

     இந்திய உணவில் கூட சில பேஸ்ட் வகைகள் முன்னதாக செய்து வைத்துக்கொண்டால் சுலபமாக இருக்கும்.

முட்டை வகைகளும் செய்யலாம்.கறிவகைகளும் செய்யலாம். காய்கறி வகைகளும் செய்யலாம்.

மளிகை சாமான்கள்:
     
     சிலவற்றை ஒரு மாததிற்காக வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
சிலவற்றை ஒரு வாரத்திற்க்காக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அடிக்கடி கடைக்கு ஓடாமல் இருக்கலாம்.

தினமும் பிள்ளைகளுக்கு டிபன் பாக்ஸில் உப்புமாவும் இட்லியும் தயிர்சோறும் சப்பாத்தியும் நல்லா இருக்காது. விதவிதமாக கொடுத்து அனுப்புங்கள்
copyright©July2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts