தாய்மை அனுபவம் 30

      


தொடர்கிறது பிள்ளை வளர்ப்பது .

      6 வயதிலும் கை சப்புவது இருந்தால்,பிள்ளைக்கு தன்னம்பிக்கை இல்லாமலும் பயம் அதிகமாக உள்ளதால்தான் அப்படி செய்கிறது. 




     அதனால், பிள்ளை ஏன் அப்படி செய்கிறது என்று கண்டுப்பிடியுங்கள்.
அதற்கு பயம் எதிலிருந்து வருகிறது?என்று கண்டுப்பிடித்த பின்பு 
அதிலிருந்து விடுப்பட  என்ன செய்ய வேண்டுமோ அதனை  யோசித்து அதன் பயத்தை போக்குங்கள். அதன் தன்னபிக்கையை வளருங்கள்.

      

      இந்த வயதில் பிள்ளைக்கு பல் விழும். அந்த சமயத்தில் பிள்ளைகளுக்கு பயம் வரும். அதனால், அதற்கு பல் விழும் என்று சிரிப்பான கதைகளை சொல்லுங்கள். 

      இங்கு பல் விழுந்தால்,பல்லை தலையணி அடியில் அன்று இரவு வைத்து கொண்டு தூங்க வேண்டும். அப்போது ஒரு எலி வந்து பல்லை எடுத்து  கொண்டு, அதற்கு பதில் எலி 




அந்த குழந்தையின் தலையணை
அடியில் ஒரு நாணயத்தை வைத்துவிட்டு போகும். அதனால்  இங்கிருக்கும் பிள்ளைகள் பல் விழுவது  எப்போது? என்று ஆவலுடன்  சந்தோஷமாக பயமில்லாமல் காத்திருப்பார்கள்.

     6 வயதுக்கு மேல் பிள்ளைகள் படுக்கையிலேயே சிறுநீர் கழித்தால், அதற்கு இதுபோல் செய்யக்கூடாது என்று அழுத்தமாக சொல்ல வேண்டும். இதுவும் மனரீதியான பிரச்சனைத்தான்.

      இதுவே 7,8 வயதுவரை நீடிக்கும்மானல்,டாக்டரை அனுகவும். முதலில் நீங்களாகவே பிரச்சனையை போக்க முடியுமா? என்று பார்த்து விட்டு, பிறகு டாக்டாரை அனுகினால் நல்லது.

     இந்த வயதில் இன்னும் ஒன்று நீங்கள் கவனிக்க வேண்டியது, பேச்சு. பிள்ளைகள் நன்றாக சொற்கள் சேர்த்து ஒரு வரியாக பேசும் நேரம் இது. சில பிள்ளைகளுக்கு சில சொற்கள் நன்றாக பேசவராது என்பதைவிட  உச்சரிப்பு சரியாக வராது. இதனை சரிப்படுத்துங்கள். 

     சில பிள்ளைகளுக்கு கஷ்டப்பட்டு பேசுவார்கள். நம் ஊரில் தெத்துவாய் என்று சொல்லுவார்கள். இது வருவதும் பெரும்பாலும் மனரீதியான பிரச்சனைத்தான். இதனை டாக்டரிடம் காட்டுங்கள். இருந்தாலும்,நீங்கள் அந்த பிள்ளையிடம் நிறைய பேசவேண்டும். கவலைப்படுகிறேன் என்று சோகமாக இருக்கவேண்டாம். அதில் ஒரு பிரஜோனமும் கிடையாது.

     கவலைப்படுவதை விட்டுவிட்டு பிள்ளைகளுக்கு நிறைய பேச்சு பயற்சி செய்யுங்கள். மன உறுதியை நிறைய கொடுங்கள்.

     இந்த வயதிலிருந்து பிள்ளைகள் ஒரு வாக்கியம்மாக தப்பு இல்லாமல் அமைக்க தெரியும். அப்படி என்றால், பிள்ளைக்கு நிறைய வார்த்தைகள் முன்பிருந்ததை விட தெரியும்.

      பள்ளிக்கூடத்திலும் அப்போதுத்தான் வார்த்தைகளை தொகுத்து வரிகளாக எழுதவும்,படிக்கவும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். வார்த்தைகள் ஒழுங்காக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

     அதற்காக, நீங்கள் செய்யவேண்டியது இதுதான்: ஒரு அட்டையில் வெள்ளைதாளை ஒட்டவும். அதில் நிறைய வார்த்தைகலை எழுதி,எழுதிய வார்த்தைகளை பாதிப்பாதியாக வெட்டவும்.

உதாரணமாக :  « என்  கைவளையல் ». என்பதை « என் »  என்பதை தனியாகவும்,  « கை » என்பதை தனியாகவும். « வளை » என்பதை தனியாகவும்,  « யல் » என்பதை தனியாகவும் எழுதி வைக்கவும். தனியாக « வை » என்றும் «  » என்றும் « மீன் » என்றும் எழுதி தனித்தனியாக வெட்டவும்.,

     இந்த ஒவ்வொரு அடையிலிருந்தும் நிறைய வார்த்தைகள் உருவாகும். இதனை தனித்தனியாக வெட்டி எடுத்து,உங்கள் பிள்ளையை ஒவ்வொரு வார்தையையும் கண்டுப்பிடிக்க சொல்லுங்கள். 

 உதாரணமாக : இரண்டு அட்டைகள் எடுத்து,  «  » « யல்» என்பதை சேர்த்து « கயல் » என்று சேர்க்கலாம். « கை » என்பதையும் « வை » என்பதையும் சேர்த்து « வைகை » என்றும் சேர்க்கலாம்.இப்படி முதலில் வார்த்தைகளை சேர்க்க சொல்லிக்கொடுத்து முடிந்தபின் வாக்கியங்களாக சேர்க்க சொல்லிக்கொடுங்கள். 

      தமிழ் மொழி என்று இல்லை,ஆங்கிலம்,மற்றும் எல்லா மொழிகளிலும் இப்படியாக பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.


      இதில் பிள்ளைகளின் ஞாபக சக்தியும் வார்த்தைகள் அதிகமாக கண்டுப்பிடிக்கும் ஆர்வம் வரும்.



தொடர்ந்து வளரும்

CopyrightMar2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts