தபுலே/Taboulé
பிரான்சில் அதனையே குஸ்குஸ் ரவையில் செய்வார்கள்.
இது வெயில் நாளில் சாப்பிட சுவையாக இருக்கும்.
இதற்க்கு வேண்டியது:
- குஸ்குஸ்/Grain de couscous : 200 கிராம்
- தக்காளி 3
- கொடை மிளக்காய் 1/2
- வெள்ளரிக்காய் 1/4
- வெங்காயம்1
- புதினா 1 - 2 கைப்பிடி
- பார்ஸில் இலை 1/2 கைப்பிடி
- எலுமிச்சை பழம் 2
- ஆலிவ் எண்ணெய் 15 டேபுள் ஸ்பூன்
- உப்பு
உலர்ந்த திராட்சை வேண்டுமானால்
செய்முறை:
1)குஸ்குஸ்ஸை நன்றாக 3 முறை கழுவி கொள்ளவும்.
3)அதற்க்குள், வெங்காயத்தை பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
3தக்காளியை பொடியாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
4)1 தக்காளியை ஒன்றும் பாதியாக அரைத்துக்கொள்ளுங்கள்.
5)புதினா,பார்ஸிலி இலை,கொடை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
6)எலுமிச்சை பழ சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
7)எல்லாம் தாயாரா?
8)இப்போ ஒரு பெரிய பவுலில் ஊறிய குஸ்குஸ்ஸை போட்டு அரிந்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போட்டு கலக்கவும்.
10)ஆலிவ் எண்ணெய் ஊற்றி கிளறவும். உப்பு போட்டு கிண்டி, வேண்டும் என்றால் உலர்ந்த திராட்சை பழம் போட்டு கிண்டி குளிர் சாதன பெட்டிக்குள் வைக்கவும்.
ஒரு இரவு முழுதும் இருந்தால் நல்லது. காலையில் செய்து,மதியம் கூட இதை சாப்பிடலாம்.
லஞ்ச்சாக கூட இதை சாப்பிடலாம்.
இதை நான் வெயில் நாட்களில் அடிக்கடி செய்வேன். பிக்னிக் போகும் போதும் செய்து எடுத்து செல்வோம்.
எலுமிச்சை பழமும் எண்ணெய்யும் இருப்பதால் கெட்டு போகாது. கூலாக நன்றாக இருக்கும்.
copyright©July2014Kolly2wood.blogspot.com
Comments
Post a Comment