பாதாமில் பால்/Almond Milk
அதுதான் இல்லை. பாதாமில் பால். அதாங்க....
இந்த மாட்டு பால்,ஆட்டுப்பால்,ஒட்டகப்பால்,எல்லாம் இருக்கு இல்லையா? அது மாதிரி இது பாதாம் பால்.
வாங்க போய் பாதாம் பால் எடுக்கலாம்.
இதுக்கு தேவை:
- பாதாம் 100 கிராம்
- தண்ணீர் 1,250 லிட்டர்
எப்படி செய்வது?
1)பாதாம் பருப்பை இரவு முழுதும் தண்ணீரில் ஊறப்போடவும்.
2)மறுநாள், தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் பாதாமை அரைக்கவும்.
3)அரைத்த பாதாமை வடிக்கட்டி பாலாக பிழிந்து, தனியாக வைக்கவும்.
நன்றாக சக்கையாக பாதாம் வரை பாலாக பிழியவும்.
பாதாம் பால் செய்து முடித்து விட்டோம்.
இந்த பாதாம் பாலை அப்படியேவும் குடிக்கலாம்
வனிலா,சர்க்கரை போட்டும் குடிக்கலாம்.
மற்ற பாலை எப்படி உபயோகப்படுத்துகிறோமோ அப்படியே இதனையும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
பால் பிடிக்கவில்லை என்று கூறும் பிள்ளைகளுக்கு இதனை கொடுக்கலாம். ஒரு மாறுதலாக இருக்கும்.
இப்போது இது Bio கடைகளில் கிடைக்கிறது.
செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்க.
copyright©july2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment