பைலா/Paëlla
இது ஸ்பென்னில் செய்யும் பிரபல உணவு.
அங்கு போனால் இதை சாப்பிடாமல் யாரும் வரமாட்டார்கள்.
இது செய்யும் போது ஸ்பெனில் ஒவ்வொரு பகுதியிலும் சில மாற்றங்கள் இருக்கும்.
அது அங்கங்கு கிடைக்கும் கறிவகைகள், கடல் வாழ்களை பொறுத்தது.
இதற்க்கு ஸ்பென்னில் உள்ள வாலாசியன் எனும் ஊர்த்தான் இதன் பிறப்பிடம்.
இதனை ஏறக்குறைய 13ஆம் நூற்றாண்டிலிருந்து செய்து வருகிறார்கள்.
என்ன?..... இப்போது பல மாடல்களில் செய்கிறார்கள்.
இது ஏறக்குறைய மஞ்சள் கலரும் சிகப்பு கலரும் கலந்து வரும். அதாவது ஸ்பென் நாட்டு கொடியை குறிப்பதாக இருப்பதாக கூறுகிறார்கள்.
இது கொஞ்சம் ரிச்சானா உணவுத்தான்.
பின்னால் வரும் ரெசிபியை பாருங்களேன் புரிந்து கொள்ளுவீர்கள்.
வாங்க பைலா செய்யலாம்.
இதற்க்கு நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களின் லிஸ்ட்:
- அரிசி 500 கிராம்
- கோழி 600 கிராம்
- முயல் கறி 500 கிராம்*
- *மட்டி/Les Moules/Mussel முழுதாக ஒட்டுடன் 250 கிராம்
- *மட்டி சுத்தப்படுத்தியது 250 கிராம்
- இறால் ஒட்டுடன் 250 கிராம்
- இறால் சுத்தப்படுத்தியது 500 கிராம்
- கனவா/calamari/Squid 500 கிராம்
- வெங்காயம் 2
- தக்காளி 500 கிராம்
- தக்காளி ப்யூரே 3 மேஜைக்கரண்டி
- பூண்டு 1
- பச்சைப்பட்டாணி 500 கிராம்
- சிகப்பு கொடைமிளாகாய் 3
- அர்திஷோ/Artichaut/Artichoke 4
- மஞ்சள் தூள் 3 மேஜைக்கரண்டி
- மிளக்காய்தூள் 1 மேஜைக்கரண்டி
- மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் 7 மேஜைக்கரண்டி
*முயல் கறி வேண்டாம் என்றால் விட்டு விடுங்கள். அதற்க்கு பதிலாக கோழி போட்டுக்கொள்ளுங்கள்.
*ஒட்டுடன் மட்டி, இறால் போட பிடிக்கவில்லை என்றாலும் விட்டு விடலாம். சுத்தப்படுத்தி போட்டுக்கொள்ளலாம்.
இப்போ செய்முறை விளக்கம்:
பகுதி 1
1)வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
2)தக்காளியை பொடியாக கொத்தியதுபோல் அரிந்துக்கொள்ளவும்.
3)அர்த்திஷோவை சுத்தப்படுத்தி வைக்கவும்.
4)குடை மிளக்காயை பொடியாக அரியவும்.
5)மட்டியை நன்றாக பிரஷ் போட்டு கழுவவும். மட்டியின் ஒட்டியில் இருக்கும்
6)அழுக்கை எல்லாம் கத்தியால் சுரண்டி மீண்டும் பிரஷ் கொண்டு நன்றாக கழுவவும்.
7)ஆய வேண்டிய 250 கிராம் மட்டியை சுத்தமாக ஆய்ந்து சுத்தப்படுத்தி வைக்கவும். சுத்தப்படுத்திய பின்புதான் 250 கிராம் இருக்க வேண்டும்.
*மட்டி ஒட்டுடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியது. ஓடு நன்றாக
மூடிக்கொண்டு இருக்க வேண்டும். கொஞ்சமாக திறந்து இருந்தாலும். நல்லது கிடையாது. தூக்கி
போட்டு விடவும்.
8)ஒட்டுடன் இருக்கும் இறாலை 250 கிராம் நன்றாக கழுவி வைக்கவும்.
9)500 கிராம் இறாலை சுத்தப்படுத்தி கழுவி பிழிந்து வைக்கவும்.
10)கனவாவையும் சுத்தப்படுத்தி வெட்டி வைக்கவும்.
11)கோழியை சுத்தப்படுத்தி துண்டாக வெட்டி வைக்கவும்.
12)முயல் கறியையும் துண்டு போட்டு வைக்கவும்.
13)ஒட்டுடன் இருக்கும் மட்டியை 1 டம்பளர் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள்தூள்,மிளகுதூள் போட்டு கொதிக்க விடவும்.
14)மூடி இருக்கும் மட்டி எல்லாம் திறந்துக்கொள்ளும் அப்படி திறந்துக்கொண்டதும். அடுப்பை நிறுத்தி விடவும்.
மட்டி வெந்து விட்டது என்று அர்த்தம்.
15)இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், அதில் தண்ணீர் இருக்கும் அதனை மட்டும் தனியாக இருத்து எடுக்க வேண்டும்.
16)அந்த தண்ணீரை மெல்லிய வடிக்கட்டியால் வடிக்கட்டவும்.அந்த தண்ணீரை தனியாக வைக்கவும்.
பகுதி 2
1)ஒரு ஏனத்தில் எண்ணெய் ஊற்றவும். அது காய்ந்ததும், முதலில் கறியை
எல்லா பக்கமும் சிவக்கும்படி செய்ய வேண்டும். சிவந்ததும், கறியை தனியாக எடுத்து வைத்து விடவும்.
2)அந்த எண்ணெய்யிலேயே ஆர்திஷோவையும் போட்டு லேசாக சிவக்க வைக்கவும். அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
3)அதில் வெங்காயத்தை போடவும் சிவக்க
வைக்கவும்.
4)வெங்காயம் சிவந்ததும், கொடைமிளக்காயை போட்டு சிவக்க வைக்கவும்.
5)பூண்டை நசுக்கி போடவும். கொத்தி வைத்து இருக்கும் தக்காளியையும்,
தக்காளி ப்யூரேவையும் அதில் போடவும்.
நன்றாக சிவக்க வைக்கவும்.
6)தக்காளி சிவந்ததும், அதில் ஆய்ந்து, சுத்த்ப்படுத்திய மட்டியையும்,உரித்த
இறாலையும் நன்றாக பிழிந்து போடவும்.கனவாவையும் பிழிந்து போடவும். நன்றாக சிவக்க வைக்கவும்.
7)அதிலேயே,மஞ்சள் தூள்,மிக கொஞ்சமாக உப்பு,மிளகுத்தூள்,மிளக்காய்தூள்
போடவும். கலந்து
விடவும்.
30 நிமிடங்கள் அப்படியே வேக விடவும்.
8)நன்றாக சோஸாக வரும்.
பகுதி 3
1)பைலா செய்யும் வாணலில் சிவக்க வைத்த கறியை வைக்கவும்.
2)அதன் மேல் ஓட்டுடன் வேகவைத்த மட்டியை வைக்கவும்.
3)அரிசியை நன்றாக பரவலாக போடவும்.
அதன் மேல் பச்சைப்பட்டாணியை போடவும்.
4)அதன் மேல் சோஸ் செய்து வைத்து இருக்கிறோம் அல்லவா? அதை இதன் மேல் பரவலாக போட்டு மூடவும்.
5)மட்டி வேக வைத்த தண்ணீர் வைத்து இருக்கிறோம் அல்லவா? அதிலிருந்து 1 டம்பளர் தண்ணீர் எடுத்து, அந்த சோஸை சுற்றி ஊற்றவும்.
6)அப்படியே ஒரு அலுமினிய தாளைபோட்டு மூடி வேக விடவும்.
7)சிறுத்தீயில் வேக வேண்டும். தண்ணீர் பத்தவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கரண்டியால் மட்டி வேக வைத்த தண்ணீரையையே சுட வைத்து ஊற்ற வேண்டும்.
8)உதிர் உதிராக சோறு வெந்து வரும். கொஞ்சமாக அடியிலிருந்து கிண்டி மேலாக எடுத்து வர வேண்டும்.
9)வெந்து உதிராக வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
பைலா ரெடியாகி விட்டது.
copyright©July2014kolly2wood.blogspot.com
மிக்கநன்றி நீண்ட நாள் தேடலுக்கு உங்கள் செய்முறை விளக்கம் வரமாக இருந்தது.🙏
ReplyDelete