பனான் பேஷ் ஸ்மூத்தி/Smoothie à la banane et la pêche
வாழைப்பழத்தில்
பொட்டஷியமும் கால்ஷிமும் அதிகமாக உள்ளது. எலும்புக்கு நல்லது.
கிட்னி புத்துநோய்
தடுப்பாக இருக்கிறது.
இது அதிகமாக சாப்பிடுவதும்
நல்லது கிடையாது.
பேஷ்ஷில்/Pêche கலோரி
குறைவு.வைட்டமீன் சி உள்ளது. சர்க்கரை வியாதிக்காரர்கள் கூட சாப்பிடலாம்.
பெருங்குடல் புற்றுநோய்
தடுக்கும் திறம் கொண்டது.
இது இரண்டும் கலந்து
செய்யும் ஸ்மூத்தி உடம்புக்கு நல்லது.
தேவையானவைகள்:
- 2 பேஷ்கள்/Pêches
- 1 வாழைப்பழம்
- 2 டம்பளர் பால் அல்லது தயிர்
- 3 டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை:
1)பேஷ்ஷின்/Pêches தோலை
உரித்து எடுத்து விடுங்கள்.
2)வாழைப்பழத்தோலையும்
உரித்துக்கொள்ளுங்கள்.
3)பழங்களை வெட்டி
மிக்ஸியில் போடவும்.
4)பாலையும் சர்க்கரையும்
போட்டு மிக்ஸியை ஓட விடவும்.
5)நன்றாக மிக்ஸியை
3 - 4 நிமிடங்கள் ஓடவிடவும்.
6)வேண்டும் என்றால்
ஐஸ் போட்டு குடிக்கலாம்.
இல்லை என்றால் அப்படியே குடிக்கலாம்.
copyright©July2014Kolly2wood.blogspot.com
Comments
Post a Comment