தாய்மை அனுபம் 23
இரண்டரை
வயதிலிருந்து பிள்ளைகளுக்கு நல்ல ஊட்டமான சத்தாண
சாப்பாட்டை கொடுக்க வேண்டும்.
சிறப்பான
அறிவு பூர்வமான விளையாட்டுகள் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
நல்ல வார்த்தைகள்
சொல்லிக்கொடுக்க வேண்டும்.
தானாகவே
அதன் வேலையை செய்ய சொல்லிக்கொடுக்க
வேண்டும்.
காலையில்
சாப்பிடுவதற்க்கு பால் கலந்த உணவு
கொடுங்கள்.அதில் மாவு சத்தும்
இருக்க வேண்டும்.
மதிய உணவுக்கு காய்கறி அல்லது கீரை,
மீன் அல்லது
கறி அல்லது முட்டை கொடுக்க
வேண்டும்.தயிர்,பழம் கொடுக்கவும்.
சாயுங்காலத்தில்,
பால் சேர்ந்த ஒரு உணவு
புரோட்டின் கலந்த ஏதாவது ஒரு
உணவு.
இரவு மாவு சத்து சேர்த்த
உணவு காய்கறி. பால் சேர்த்த உணவு.
இரவில்
நான் தயிர் கொடுப்பேன். உங்களுக்கு
கொடுத்து பழக்கம் என்றால் கொடுங்கள்.
என் பிள்ளைகள் பால் அவ்வளவாக குடிக்க மாட்டார்கள். அதனால்,தயிர், சீஸ்,க்ரேம் தெசர்
இப்படி பால் சேர்த்த உணவுகளை
கொடுப்பேன். எப்படியோ பால் இருக்க வேண்டும்.அவ்வளவுத்தான்.
காய்கறிகள்
கொடுக்க பழகி விடுங்கள். கீரை
வகைகள் நிறைய கொடுங்கள். இதில்
தான் நிறைய வைட்டமீன்கள் உள்ளது.
பருப்பு
சோறு கொஞ்சமாக நெய் ஊற்றி கொடுக்கலாம்.
அதிகமாக நெய் ஊற்ற வேண்டாம்.
சின்ன பிள்ளைகளை அதிக பருமன் ஆக்கி
விடாதீர்கள். அது ஆபாயம். அதனால்தான்
காய்கறி நல்லது. அதிலும் பச்சைகாய்கறிகள்
மிகவும் நல்லது.
மீன் நல்லது. மீன் என்றால்
நாக்கு மீன் கொடுங்கள். பெரிய
பெரிய மீன்கள் எல்லாம் வேண்டாம்.
அது எல்லாம் செரிப்பது கஷ்டம்.
வைத்தியம்:
இந்த வயதில் குதிக்காலில் சிலநொடிகளாவது
பிள்ளைகள் நிற்க வேண்டும்.
டாக்டர்
சொல்லாமல் நீங்களாகவே எந்த வைட்டமீன் மருந்துகளையும்
கொடுகாதீர்கள்.அது நல்லது கிடையாது.
நாம் சாப்பிடும் சாப்பாட்டிலேயே எல்லா வைட்டமீனும் இருக்கிறது.
தனியாக ஏன் வைட்டமீன். அப்படி
ஏதாவது குறை என்றால் டாக்டர்
அவரே கொடுப்பார்.
பிள்ளையை
ஒரே டாக்டராக காட்டுங்கள். நல்ல டாக்டராக தேர்ந்து
எடுங்கள். அப்போதுதான் நல்லது. உங்கள் குடும்ப
டாக்டர் என்று ஒருவர் இருந்தால்
போதும். அவரே பிள்ளையும் பார்க்கட்டும்.
அப்போதுதான்,குடும்ப பிரச்சனை (நோய்)
எல்லாம் அவருக்கு தெரியும்; வைத்தியம் பார்க்க சுலபமாக இருக்கும்.
ஒவ்வொருவருக்கும்
ஒரு ஒரு டாக்டர் என்று
இருந்தால் கஷ்டம். ஆனால், டாக்டர்
தேர்வு செய்வது ஒழுங்காக, நம்பிக்கையாக
தேர்வு செய்யுங்கள்.
குழந்தைக்கு
வைத்தியம் பார்க்க குழந்தை வைத்தியருக்கு
மட்டும் தான் தெரியும் என்று
யார் சொன்னது? எல்லா டாக்டருக்கும் தெரியும்.
என் பிள்ளைகளை நான் பிறந்ததிலிருந்து இந்நாள்
வரை என் குடும்ப டாக்டரிடம்
தான் காட்டிக்கொண்டு இருக்கிறேன்.
என் பிள்ளைகளுக்கு எல்லா நோய் நொடிகளுக்கும்
என் குடும்ப டாக்டார்தான் பொறுப்பு.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஏதாவது
ஒரு தாள் இருந்தாலும் குப்பை
தொட்டியில் போட சொல்லி கொடுக்க
வேண்டும்.
பிள்ளைகளுக்கு
கதை சொல்லுங்கள். கதை சொல்லிக்கொண்டே அந்த
கதையிலேயே கேள்வி கேளுங்கள்.ஒரு
வாக்கியம் ஒழுங்காக அமைக்க கற்றுக்கொடுங்கள்.தவறு
இருந்தால் விளையாட்டாக திருத்தி விடுங்கள்.
இந்த வயதில் 100 வார்த்தைகளுக்கு மேல் தெரிய ஒரு
பிள்ளைக்கு தெரிய வாய்ப்பு உண்டு.
இந்த வயதில் பிள்ளைகள் நேற்று,இன்று, நாளை என்று
பிரிக்க தெரிய வேண்டும்.
உங்கள்
உறவினர்கள், நண்பர்கள் புகைப்படங்களை பார்த்தால் அடையாளம் சொல்ல வேண்டும். இல்லை
என்றால் நீங்கள் ஒருமுறை சொல்லிக்கொடுங்கள்.
அடுத்தமுறை அதே படத்தைக்காட்டி இது
யார் என்று கேளுங்கள். சொல்லும்வரை
பழகுங்கள்.
இந்த வயதில்
பிள்ளைகளுக்கு நிறைய பெற்றோர் டி.வி அல்லது கம்யூட்டர்
முன் உட்கார் வைத்து விடுகிறார்கள்.
இது ஏதோ பெரிய சாதனை
என்று எண்ணுகிறார்கள். இதனால் வரும் பின்
விளைவுகள் இவர்கள் கண்களுக்கு தெரிவது
கிடையாது.
கண்களுக்கு
பாதிப்பு. உடல் பாதிப்பு மட்டும்
இதில் ஒரு பக்கம் என்றால்,
மன ரீதியாகவும் பாதிப்பு இருக்கிறது.
உங்களையே
எடுத்துக்கொள்ளுங்கள் கம்யூட்டரை தொட்டுவிட்டால் அதை விட்டு விட்டு
செல்ல மனம் வருகிறதா?
அதன் மேல் ஒரு ஈடுபாடு.
அது ஒரு போதை பொருள்
போல் ஆகி விட்டது. அதை
நாம் ஏன் சின்ன பிள்ளைக்கு
பழக வேண்டும்.
என்னை கேட்டால் இதுவும் ஒரு சுயநலம்
என்றுதான் சொல்லுவேன்.
பிள்ளை கம்யூட்டர் அல்லது
டி.வி முன்பு உட்கார்ந்து
கொண்டால் நமக்கு விடுதலை. என்று
நம் மனது நினைக்கிறது. அதுதான்
காரணம்.
சரி, பிள்ளைகளின் விளையாட்டுக்கு வருகிறேன்.
ஒரே மாதிரி இரண்டு படங்கள்
எடுத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக இரண்டு மீன் படம்,இரண்டு வீடு,இரண்டு
மரம். இப்படி சின்ன சின்னதாக
ஒரு 10 - 15 செட் செய்துக்கொள்ளுங்கள். இந்த படங்களை
முதலில் நேராக வைத்து விடுங்கள்.
இரண்டு
இரண்டாக இருக்கும் ஒரே மாதிரி இருக்கும்
படங்கள் இருக்கிறது அல்லவா? அதனை எல்லாம்
இடம் மாற்றி மாற்றி வைத்து
விடுங்கள்.
பிள்ளையை
விட்டு ஒரே மாதிரி படத்தை
எடுக்க சொல்லுங்கள்.
இந்த பயிற்ச்சியை கொஞ்சம் வாரம் பழகுங்கள்.
பழகிய பிறகு, இந்த படங்களையே
திருப்பிபோட்டு ஒரே மாதிரி படங்களை
எடுக்க சொல்லுங்கள்.
இந்த வயதில் கூஷ்
ஷை சுத்தமாக
எடுத்து விட வேண்டும்.குறைந்தது
காலை நேரத்தில் கூஷ் சுத்தமாக வேண்டாம்.
பிள்ளையே டாய்லேட் போக கேட்க வேண்டும்.
காலை எழுந்தவுடன் டாய்லேட் போக கற்றுக்கொடுங்கள்.
நடுவில்
10 மணி அளவில் ஒருமுறை பிள்ளையை
டாய்லேட் போக கற்றுக்கொடுங்கள்.
பிறகு மதியம் சாப்பாட்டுக்கு முன்பு
டாய்லேட் க்கு அழைத்து போங்கள்.
பிறகு,சாயுங்காலம் ஒருமுறை டாய்லேட் அழைத்து
செல்லுங்கள்.
இரவு சாப்பாட்டுக்கு முன்பு ஒருமுறை அழைத்து
செல்லுங்கள்.
பிறகு படுக்கைக்கு செல்லும் முன் அழைத்து செல்லுங்கள்.
இப்படியே
செய்ய செய்ய அவர்கள் பழகி
விடுவார்கள்.
இரவில்
கூட கூஷ் தேவை இல்லாமல்
போய்விடும்.
இன்னும் எழுதுவேன்
copyright©July2014kolly2wood.blogspot.com
Comments
Post a Comment