தூக்கமும் நாமும் 2
தூக்கத்தை பற்றி
போன முறை சொன்னேன் அல்லாவா?
அதன் தொடர்ச்சியை
தொடர்வோமா?
அதில் crise
d’epilepsie பற்றி சொல்ல தொடங்கினேன் அல்லவா? அதை பற்றி பார்ப்போம்.
இந்த நோய் ஒரு
பரம்பரை நோய் கிடையாது. இதனை மருந்து சாப்பிட்டால் கட்டுமானத்தில் வைத்துக்கொள்ளலாம்.
சிலர்
இதனை காகாய் வலிப்பு என்று சொல்லுவார்கள். இதன் உண்மையான் பெயர் கை கால் வலிப்பு அது
காலப்போக்கில் மருவி காகாய் வலிப்பாய் போய்விட்டது.
இந்த நோய் வந்தவர்களை
நம் நாட்டில் ஒதுக்கியே வைத்து விடுவார்கள். அது மிகவும் தவறு. இவர்கள் பெண்களாக இருந்தாலும்
ஆண்களாக இருந்தாலும் இவர்களை திருமணம் செய்ய முன் வருவது கிடையாது. இந்த நோய்க்கும்
திருமணத்திற்க்கும் எந்த விதமான சம்மந்தமும் கிடையாது.
என்ன? முறையாக
டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிட வேண்டும். இளமை பருவத்தில் இந்த நோய் வந்தால், பல
பேருக்கு மருந்து சாப்பிட சாப்பிட சரியாகி விடுகிறது.
என்ன இருந்தாலும்
டாக்டர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும்.
நாமே மருந்தை நிறுத்தி
விடுவது என்று எல்லாம் இருக்க கூடாது. இது பிரச்சனை கொடுக்கும். ஒழுங்கான முறையில் மருந்துகளை சாப்பிட்டு
வரவேண்டும். டாக்டர் சொல்படியும் கேட்க வேண்டும். அதுதான் நல்லது.
எல்லா நோய்யை போலதான்
இதுவும் மன சம்மந்த பட்டதுதான்.
ஆனால், இது மிகவும்
மூளையை தாக்க கூடியதாக இருப்பதால், இந்த நோய் இருப்பவர்களை கொஞ்சம் சந்தோஷமாக வைத்து
இருப்பது நல்லது.
சுற்றி இருப்பவர்களும்
இவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.
இந்த நோய் இருப்பவர்க்களும்,
இதையே நினைத்துக்கொண்டு இருக்காமல், வேறு ஏதாவது அவர் அவர்களுக்கு பிடித்த வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும்
Crise /
இழுப்பு
வந்தவுடன் முதல் உதவி செய்வது எப்படி?
1)ஒருவருக்கு இழுப்பு
வந்ததாக வைத்துக்கொள்ளுவோம். உடனே நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:
2)நீங்கள் பதட்டம் அடைய கூடாது. நீங்கள் முதலில் தைரியத்தை வர வழித்துக்கொள்ள வேண்டும்.
3)அவர் அருகில் ஏதாவது அவரை ஆபத்து விளைவிக்கும் பொருள்கள் இருக்கிறதா என்று பார்த்து உடனே அங்கிருந்து எடுத்து விடுங்கள்.
4)மேஜை அருகிலோ,சுவரின் மூலையிலோ அவர்கள் இருந்தால் அதனால் பாதிப்பு ஏதும் வராமல் ஏதாவது ஒரு பாதுக்காப்பு கொடுங்கள்.
5)இழுப்பு வந்தவரின் தலைக்கு பாதுக்காப்பாக ஏதாவது மெல்லிய தலையணையாவது அல்லது துணியை மடித்தோ,ஏதோ ஒன்று மெத் என்று கொடுங்கள்.
2)நீங்கள் பதட்டம் அடைய கூடாது. நீங்கள் முதலில் தைரியத்தை வர வழித்துக்கொள்ள வேண்டும்.
3)அவர் அருகில் ஏதாவது அவரை ஆபத்து விளைவிக்கும் பொருள்கள் இருக்கிறதா என்று பார்த்து உடனே அங்கிருந்து எடுத்து விடுங்கள்.
4)மேஜை அருகிலோ,சுவரின் மூலையிலோ அவர்கள் இருந்தால் அதனால் பாதிப்பு ஏதும் வராமல் ஏதாவது ஒரு பாதுக்காப்பு கொடுங்கள்.
5)இழுப்பு வந்தவரின் தலைக்கு பாதுக்காப்பாக ஏதாவது மெல்லிய தலையணையாவது அல்லது துணியை மடித்தோ,ஏதோ ஒன்று மெத் என்று கொடுங்கள்.
6)சூழ்ந்து கொண்டு
நிற்காதீர்கள். நிறைய இடமும், காற்றோட்டமும் முக்கியம் இந்த நேரத்தில். அதை நினைவில்
வையுங்கள்.
7)இழுப்பு வந்தவர்
தானாக நாக்கை கடித்து கொள்ளவும் கூடும். இதற்க்கு
உங்களுக்கு அனுபவம் இல்லாமல் எதுவும் செய்ய வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள்.
8)இழுப்பு வந்திருப்பவர்
நேராக இருந்தால் பக்கவாட்டில் படுக்க வையுங்கள்.
நேராக படுக்க வைத்தால் மூச்சு திணரல் வரலாம். அதனால்தான்,
பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும்.
9)இழுப்பு தானாகவே
நின்றுவிடும்.சில நொடிகள் அல்லது ஏறியது 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
அது தானாகவே நிற்க்கும் வரை விட்டு
விடுங்கள்.
எதை எதை செய்யக்கூடாது:
1)இந்த மாதிரி இழுப்பு
வந்தால்,சாவி கொடுத்தால், இரும்பு கொடுத்தால் சரியாகி போய்விடும் என்று நம் நாட்டில்
இரும்பு பொருள்களை கொடுத்து விடுவார்கள்.
இது பெரிய தவறு.
இது பல சமயங்களில்,இரும்பாக இருப்பதால்,அவர்களுக்கே கெடு விளைவிக்கும். அதனால்,தயவு செய்து இரும்பை கொடுக்காதீர்கள்.
2)அவர்கள் மீது தண்ணீர்
தெளிப்பது கூடாது. இது மிகப்பெரிய ஆபத்து.
3)அவர்களின் இழுப்பை
அடக்குவதுப்போல் இறுக்கி பிடிப்பது. இதுவும்
மிகவும் ஆபத்து.
எப்போது ஆம்புலன்சை கூப்பிட வேண்டும் :
1)இழுப்பு 5 நிமிடங்களுக்கு
மேல் இருந்தால்.
2)மூச்சு திணறல்
ஏற்பட்டால்
3)வந்தவர்
சர்க்கரை நோயாளி,கர்பவதி,இருதய நோயாளி போன்றவராக இருந்தால்
4)முதல் முதலாக இழுப்பு
வந்தது என்றால்
5)தொடர்ந்து இழுப்பு
வந்துக்கொண்டே இருந்தால்
பிறகு சிந்திப்போம்
copyright©July2014Kolly2wood.blogspot.com
Comments
Post a Comment