பிள்ளைகளா, தேர்வு எழுதப்போரிங்களா? எனது நல்வாழ்த்துக்கள்


  

      
     ரொம்போதான் பயப்படாதீர்கள்; நடப்பது எல்லாமே உங்கள் நன்மைக்குத்தான் என்று நினைங்க. அதுக்குன்னு படிக்கமா இருந்து நடப்பது நடக்கட்டும என்றும் இருக்ககூடாது.
    
    கடைசி நேரத்தில் ரிவிஷன் தான் பார்க்க வேண்டுமெ தவிர, புதிதாக ஒன்றும் படிக்காதீர்கள். இதுத்தான் உங்களை ரொம்பவும் குழப்பும்.
     
   எப்படி இருந்தாலும் மனதில் பயம் இருக்கத்தான் செய்யும். அதற்காக கடைசி நேரத்தில் படிக்க வேண்டுமா?
     
      Revision  என்பதை Time table   போட்டுக்கொண்டு செய்ய வேண்டும். இது எல்லாம் தேர்வுக்கு 2 months முன்னமே செய்ய வேண்டிய வேலைகள். ஒன்று மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.
     எப்போதுமே சிலவற்றை தவிர, மற்ற எல்லாவறையும் புரிந்துக்கொண்டு செய்தால் நல்லது. இப்படி செய்வதினால், உங்கள் காலம் வரை அது மறக்காமல் இருக்கும். ஒரு வார்த்தை மனப்பாடம் செய்த பாடதில் மறந்து விட்டால். முழுமையாக எல்லாமே மறந்து போகும்அதனால்தான் படிக்கும்போது புரிந்து படியுங்கள்..
    
   உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். அப்படி நம்புங்கள். இந்த நினைவுடன் படிங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
    
     Time table போட சொன்னேன் அல்லவா? அதற்கு வருவோம். ஒரு தாளை  எடுத்துக்கொள்ளுங்கள்.
     
     தேர்வுக்கு  time table ல் 2 மாததிற்கு முன்பே போட்டு விட வேண்டும்.
      
     ஒரு subject க்கும் அடியில் காலை ,மதியம், சாயுங்காலம் என்று மூன்று பிரிவாக பிரித்துக்கொள்ளுங்கள்.

Monday
Morning
After noon
Evening
subjects
Tamil  1 – 3 lessons
Physics  2 -3 lessson
maths

    உதாரணத்திற்கு: தமிழில் திங்கள் கிழமை செய்யுள் படிக்க போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். காலையில் திருக்குறளில்  2 அதிகாரம். இன்னைக்கு இதைபடித்து விட வேண்டும் என்று time table போட்டுக்கொள்ளுங்கள்.
    
     உங்களுக்கு கஷ்டமான படத்தை காலையில் படித்துக்கொண்டால் நல்லது. மண்டையில் காலையில் நன்றாக ஏறும்.
      
     ஒருமணிநேரம் படித்துவிட்டு கொஞ்சம் நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அதுக்குன்னு over ரா ஓய்வு வேண்டாம்.
     
     உங்கள் மனதில் எப்படியாவது அன்று முடிக்க வேண்டும் என்று நினைத்த பாடத்தை முடித்து விடுங்கள்.
     
     ஒரு நாள் முழுதும் ஒரே subject  படிக்க வேண்டாம். மாறி மாறி படிங்கள். அதுதான், அலுப்புத்தட்டாமல் இருக்கும்.  இரவு10மணிக்கு மேல் படிக்க வேண்டாம். தூங்கி விடுங்கள்.
     
      


sunday
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Saturday
Time















6h – 7h







7h30 – 8h30







9h-10h







10h30 - 12







14h -15h







15h30 – 16h30







17h – 18h







18h30-19h30







20h – 20h30
















     
    காலையில் சீக்கிரமாக எழுந்து படியுங்கள். படிக்கும் இடம் தனியாக இருக்க வேண்டும் என்று கிடையாது. அது உங்கள் மனதை பொறுத்தது. மனதை ஒருநிலைப்படுத்தி படித்தாலே போதும். நடு நடுவே ஏதாவது ஜுஸ்,க்ளுக்கோஸ் தண்ணீர், மோர் என்று ஏதாவது குடிங்க.
     
     பக்கதிலேயே தண்ணீர் மட்டும் வைத்துக்கொண்டுப்படிங்க. திண்படங்களை வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள வேண்டாம்.
     
     இப்போதான் செல்போன் கில்போன் எல்லாம் இருக்கிறதே. படிக்கும்போது அதனை நிறுத்தி விடுங்கள். அது உங்கள் படிப்பிற்கு  ஒரு வேகத்தடை.. படிப்பின்  நடுவில் இடைவேளை  எடுக்கிறீர்கள் அல்லவா? அப்போது ஒரு 10 - 15 நிமிடங்கள் பாட்டு கேட்கலாம்.
     


     

      வீட்டில் செடி கொடிகள் இருந்தால் அதனை பாருங்கள். அதற்கு தண்ணீர் ஊற்றுகள். அல்லது மீன் ஏதாவது வளர்கிறீர்கள் என்றால் அதனை வேடிக்கை பாருங்கள். நாய்,பூனை,கிளி.. இப்படி ஏதாவது வளர்த்தால், அதனிடம் கொஞ்ச நேரம் விளையாடலாம்.
      
      இப்படி செய்தால், மூளைக்கு ஒய்வு கொடுத்ததாக இருக்கும். ஒரு தாள எடுத்து அதில்  ஒவ்வொரு  பாடத்திலிருக்கும் முக்கியமான தலைப்புகள், மற்றும்  ஆண்டுகள்,பெயர்கள், formulaகள் எல்லாம் ம. தனிதனியாக ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தாளில் எழுதிக்கொண்டால், அது கடைசி நேரத்தில் படிக்க உதவும்.
     
     அம்மா அப்பாவும் பிள்ளைகள படி படி என்று துலைக்காதீர்கள் கடைசி நேரத்தில், நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியம் சொல்லி அனுப்ப வேண்டும்.

       படிக்கும் பிள்ளைகளுக்கு  சுற்றியிருப்பவர்கள் ஊக்கம் கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு உபத்ரவம் கொடுக்காமாலிருந்தால் போதும்.
   
       பெற்றவர்கள்,சுற்றியிருப்பவர்கள்,முடிந்தவரை படிக்கும் பிள்ளைகளை தாழ்வாக பேசாதீர்கள். உங்கள் பிள்ளைகளையும் அடுத்த பிள்ளைகளையும் பொறாமை கண்ணோட்டமாக பார்க்க வேண்டாம். அதுவும் நம் பிள்ளைதானே என்று நினைக்க பழகிக்கொள்ளுங்கள்.
    
    சும்மாவும் புத்திமதி சொல்கிறேன் என்று ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள்.
     
     பிள்ளைகள் என்ன படிக்க விரும்புகிறார்களோ அதனை படிக்க வையுங்கள். நீங்கள் சொல்லும் படிப்பை மட்டுமே படிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
     
     பிள்ளைகள் எல்லாம் நம் தலையாட்டி பொம்மைகள் இல்லை. படிப்பை பொறுத்த வரை அவர்கள் ஆசைப்படும் படிப்பை படிக்க வையுங்கள்.
    
     பிள்ளைகளும் பெரியவர்கள் சொல்லும் அளவுக்கு வைத்துக்கொள்ளாமல், அவர்கள் சொல்வதற்கு முன்பே நீங்களாகவே படிக்க ஆரம்பித்தால் அவர்கள் ஏன் ஏதாவது சொல்கிறார்கள்.
    
     கஷ்டப்பட்டு படியுங்கள். பிறகு,  எதுவாயிருந்தாலும் பரவையில்லை.




100%என்று ஆசைப்படுவதில் ஒன்றும் தப்பு இல்லை. ஆனால், அது கிடைக்கவில்லை என்றால் மனது கஷ்டப்படக்கூடாது. மனது கஷ்டப்பட்டலும் ஒன்றும் மாறப்போவது கிடையாது

      பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் எப்போதும் ஆறுதலாக இருங்கள்.
     
      பிள்ளைகளும் அப்பா, அம்மா சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.
உங்கள் பெற்றோர்கள் உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறார்கள் என்று கோபப்படாமல் யோசித்து நடக்க வேண்டும்.
     
      
     தேர்வுக்கு போகும்போது மறக்காமல் : Hall ticket, identity card, 2பென்சில்,2பேனா,ஸ்கேல்,ரப்பர்,.. தேவையான எல்லாவற்றையும் முதல் நாளே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

       தேர்வு எழுத  கேள்விதாள் கொடுத்ததும் உடனே கேள்விகளை படிக்காதீர்கள். கொஞ்சநேரம் கேள்வி தாளை பார்க்காமல்,கொஞ்சம் பயமெல்லாம் போனதும் பிறகு,கேள்விகளை படித்துப்பாருங்கள்.

     முதலில் உங்களுக்கு சுலபமானக இருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதுங்கள்.

பிறகு, கஷ்டமாக இருக்கும் கேள்விகளுக்கு விடை எழுதலாம்.


     நல்லா மார்க் வாங்கி நீங்கள் நினைக்கும் படிப்பை படித்து முன்னேறுங்கள்.

     போங்க நல்லா தேர்வு எழுதுங்க.பயம் இல்லாமல் எழுதுங்கள்.

Copyright mars2016@kolly2wood.blogspot.fr

Comments

Popular Posts