க்ராத்தன் துஃப்பினுவாஸ்/Gratine dauphinoise

     


     

     நான் பிரான்ஸிக்கு திருமணமாகி வந்தபோதுமுன்பு உங்களிடம் கூறியதுப்போல் எனக்கு நாக்கு செத்துப்போய் இருந்தது.

     அந்த நேரத்தில் எங்களை ஒரு குடும்பத்தினர் விருந்துக்கு அழைதிருந்தார்கள். தொலைப்பேசியில் அவர்கள் க்ராத்தான் துஃபினுவாஸ் செய்கிறேன். உனக்கு பிடிக்கும் என்று கூறினார்கள்.

     என் காதில் துஃபினுவாஸ் என்பது ஷினுவா என்று விழுந்ததுஎன் மனம் ரக்கைக்கட்டி பறக்குதடா அண்ணமலை சைக்கில் என்று பறந்தது.

     அதில் ஒன்றும் தவறில்லை. காய்ந்துக்கிடக்கும் காதுக்கு ஷினுவா என்று கேட்டது. மிகவும் சந்தோஷமாக இருந்தது.

     நாளாக நாளாக எனக்கு இவையெல்லம் பிடித்துவிட்டதுஅந்த சமையல் குறிப்பை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இதற்க்கு தேவையான பொருள்கள்/ Il faut :

  • உருளைக்கிழங்கு /Pomme de terre  1 கிலோ/kg
  • பால்/Lait 500 மில்லி/ml
  • க்ரீம்/crème liquide 400 மில்லி/ml
  • துருவிய சீஸ்/comté (des lamelles et du râpé) ou gruyère râpé
  • ஜாதிக்காய் தூள் கொஞ்சம் / un peu de muscade râpée
  • பூண்டு/l’ail 1 பல்/gousse
  • கொஞ்சம் வெண்ணெய்/quelques noisettes de beurre
  • உப்பு/sel
  • மிளகுத்தூள்/poivre


செய்யலாமா?/ On y va

1)உருளைக்கிழங்கை வட்ட வடிவில்  வெட்டு கொள்ளவும்.

Couper les pommes de terre en rondelles.

2)ஒரு பாத்திரத்தில் பாலையும் கீரிமையும் சூடுப்படுத்தவும்.

Verser le lait et la crème dans une casserole

3)பால் சூடானப்பின் அதில் பூண்டு நசுக்கி போடவும; அதிலேயே  உப்பு,மிளகுத்தூள், ஜாதிகாய் தூள் போடவும்.

Assaisonner ce mélange avec un peu de muscade râpée, de sel et de poivre. Et la gousse d’ail râpée.

அவணை முற்சூடு செய்யவும்.
நன்றாக சூடானதும், அதில் வட்டமாக அரிந்த வைத்திருக்கும் உருளைக்கிழங்கை அதில் போடவும்.




சிறு தீயில் 10 - 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு, அதனை  அவணில் வைக்கும் தட்டில் ஊற்றி,அவணைல் வைக்கவும்.





45நிமிடங்கள் வேகவிடுங்கள்.

Enfourner à 180° - 200° C environ 40 – 45 minutes





க்ராத்தன் ரெடி. சாப்பிட்டு பாருங்கள்.

உங்களுக்கு பிடித்திருந்தால்,மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Déguster en famille ou entre amis.

Bon appétit Bien sur !


copyright oct2015@kolly2woodd.blogspot.fr

Comments